படம் எப்படியோ ஆனாலும் ரயில் படத்தில் ஒல்லி பிச்சான், வாரிசு நடிகை கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருந்தது.
இதை மனதில் வைத்து ஒல்லிபிச்சான் கால்ஷீட்டை கையில் வைத்திருக்கும் ஒரு இயக்குனர், வாரிசு நடிகையை சந்தித்து கால்ஷீட் கேட்டு போயிருக்கிறார்.
கதையை கேட்டு வியந்த வாரிசு நடிகை கதை ஒகே ஹீரோ யார் என்று கேட்டிருக்கிறார். ஒல்லிபிச்சான் தான் என்று சொன்னதும் அம்மாவும் மகளும் சேர்ந்து சாமியாட்டம் ஆடிவிட்டார்களாம்.
ரயில் படத்தின் போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மா வரக்கூடாதுன்னு போட்ட கண்டிஷன்லேருந்து நடிகர் கொடுத்த டார்ச்சரை அடுக்கடுக்காக சொன்ன வாரிசு நடிகை, இனி அவர்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லி அனுப்பிட்டாராம். ரயில் படம் லேட்டானதுக்கு இருவருக்கும் இடையே இருந்த உரசலும் ஒரு காரணம் என்று இப்போது செய்தி கசிந்திருக்கிறது.
Tags:
Cinema
,
அம்மா
,
ஒல்லி பிச்சான்
,
சினிமா
,
ரயில்
,
வாரிசு நடிகை
,
விரிசல்