ஒரு ஊரில் மிகவும் ஏழ்மையான மற்றும் கடுமையாக உழைக்கும் மாரியப்பன் என்ற ஒருவன் விறகு வெட்டிக் வேலைப் பார்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தான்.
அவனின் அந்த நேர்மையான உழைப்பைக் கண்டு, கடவுள் ஒரு நாள் அவனின் முன் தோன்றி, அவனுடைய நேர்மையான உழைப்பை பாராட்டி அவனுக்கு தங்கக் கோடாரி ஒன்றை பரிசாக அளித்தது.
அந்த தங்கக் கோடாரி 20 கிலோ இருந்தது. மாரியப்பன் அந்த கோடாரியை விற்று பெரும் பணக்காரனாக மாறினான்.
மாரியப்பனின் இந்த வளர்ச்சியைப் பார்த்து, அதே ஊரில் வசிக்கும் பெரிய செல்வந்தர் ஒருவர் தன்னுடைய அழகு தேவதையான, அருமை மகள் வள்ளியம்மாளை, மாரியப்பனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.
திருமணம் முடிந்த மாரியப்பன் தன் மனைவி வள்ளியம்மாளை அழைத்துக் கொண்டு பதினெட்டாம் பெருக்கின், பவானி ஆற்றின் கிளை வாய்க்காலில் இருவரும் சென்று அமர்ந்து சித்திரான்னங்களை சாப்பிட்டவாறு, ஜோக் அடித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போழுது மாரியப்பன் கூறிய ஒரு ஜோக்கிற்காக வள்ளியம்மாள் சிரித்தபடியே தவறி அந்த வாய்க்காலில் விழுந்து விட்டாள்.
மாரியப்பனுக்கு நீச்சல் தெரியாததால் ஒன்றும் புரியாமல் கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து என்று கூச்சலிட்டான்.
அப்போது கடவுள் அவன் முன் தோன்றி, இப்போ எதடா தொலைச்ச என்று கேட்டார்.
அதற்கு மாரியப்பன் நான் என்னுடய பொண்டாட்டிய தொலச்சிட்டேன் சாமீ என்றான்.
அதற்கு கடவுள் ஒருவன் வாழ்க்கையில் தொலைக்க க்கூடாததை நீ தொலைத்துள்ளாய் உனக்கு நான் உதவி செய்ய மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்தார்.
எனவே மாரியப்பன் கடவுளின் காலில் விழுந்து, சாமீ, வள்ளியம்மாள் இல்லையென்றால் எனக்கு வாழ்வே இல்லை என்று நானும் வாய்க்காலில் குதித்து சாகிறேன் என்று குதிக்கப் போனான்.
அப்போது கடவுள் அவனை தடுத்து உனக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அந்த வாய்க்காலில் மூழ்கி நயந்தாராவை காட்டி இவள் உன் மனைவியா? என்று கேட்டார்.
அதற்கு மாரியப்பன் ஆமாம் இது தான் என் மனைவி வள்ளியம்மாள் என்று கூறிவிட்டான்.
கடவுள் கோபத்துடன், அட பாவீ. பணம் வந்ததும் உண்மையை மறந்து பொய் கூறுகிறாயா என்று கேட்டார்.
அதற்கு மாரியப்பன் சாமீ என்னை மன்னியுங்கள்..ஏனென்றால் நீங்கள் முதலில் நயந்தாராவை காட்டுவீர்கள் நான் இல்லை என்று பதில் சொன்னால், பின் தமன்னாவை காட்டுவீர்கள் அதற்கு நான் இல்லை என்று சொன்னால், முடிவில் என் மனைவி வள்ளியம்மாளை காட்டுவீர்கள்.
அதற்கு நான் ஆமாம் சாமீ இவள் தான் என் மனைவி வள்ளியம்மாள் என்று கூறினால்......
நான் உண்மையை மட்டும் பேசியதால் எனக்கும் முன்பு கொடுத்த தங்கம், வெள்ளி, இரும்பு என்ற மூன்று கோடரிகளையும் என்னிடமே கொடுத்தது போலவே இந்த முறையும் நீங்கள் இந்த மூன்று பேரையும் நீயே வைத்துக் கொள் என்று கூறிவிட்டால், நான் என்ன செய்வது சாமீ…
ஒன்றை வைத்து சமாளிப்பதே கஷ்டமாக இருக்கும் போது நான் மூன்றையும் எப்படி சமாளிப்பேன் அதனால் தான் பொய் கூறிவிட்டேன் என்று மாரியப்பன் கடவுளிடம் கூறினான்.
மாரியப்பன் கூறியதை கேட்டதும் கடவுள் சிரித்தபடியே, வள்ளியம்மாளை மாரியப்பனிடம் ஒப்படைத்து, அவனை பாராட்டி, இருவருக்கும் ஆசிர்வாதம் அளித்து கடவுள் மறைந்துவிட்டார்.
Tags:
Cinema
,
கடவுள்
,
சினிமா
,
நயன்தாரா
,
பகீர் தகவல்
,
பொண்டாட்டி
,
விறகுவெட்டி