நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்த போது நாயகி நயன் தாராவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானதால் அது உண்மை தான் என்று எல்லோரும் நம்பினார்கள்.
இருவரையும் சைமா விருது விழா உட்பட பல திரையுலக விழாக்களில் ஒன்றாக பார்க்க முடிந்தது. அவ்வளவு ஏன் சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைகளுக்கு கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு விக்னேஷ் சிவனை அழைத்து பண்டிகையை சீறும் சிறப்புமாக கொண்டாடியதெல்லாம் நடந்தது.
இப்படி இருவரும் காதலில் கண்டுண்டு கிடப்பது உலகமறிந்த விஷயமாகி விட சூர்யாவை வைத்து புதுப்படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ்சிவனுக்கு வாங்கிக் கொடுத்ததே நயன் தான் என்கிற ஒரு சீக்ரெட் செய்தியும் உண்டு.
இப்படி தனது காதலர் விக்னேஷ்சிவனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் கூடவே இருந்த நயன்தாராவை தனது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.
நயனுக்கும் வயதாகிக் கொண்டே போவதால் வருகிற 2019-ம் ஆண்டில் எங்கள் திருமணம் என்று தனது நண்பர்களிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
முதல் இரண்டு காதலும் புட்டுக் கொண்டதில் ரொம்பவே அப்செட்டாகியிருந்த நயனுக்கு விக்னேஷ் சிவனின் இந்த முடிவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.
Tags:
Cinema
,
சினிமா
,
சூர்யா
,
திருமணம்
,
நயன்தாரா
,
நானும் ரவுடி தான்
,
விக்னேஷ் சிவன்