உண்மையிலேயே நயன்தாரா படு அப்பாவி என்கிறார்கள். அவரது விசுவாசிகள் மற்றும் நண்பர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர்.
ஒருவரை பிடித்து விட்டது என்றால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். எதை வேண்டுமானாலும் இழப்பார். சிம்புவுடன் காதலில் இருந்தபோது விலை உயர்ந்த பொருட்கள், வைர ,பிளாட்டின மோதிரங்கள் பரிசாக அளித்தாராம்.
வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போனால் அங்கு கிடைக்கும் காஸ்ட்லி பொருட்களை தேடி தேடி வாங்கி வந்து கொடுக்கும் பழக்கம் அவருக்கு உண்டு.
அதன் பின் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்த போது அவர் அமெரிக்காவில் ஆரம்பிக்க இருந்த நடனப் பள்ளிக்கு சில கோடிகளை இழந்தார் என்று பேசப்பட்டது..
உதயநிதியும் விரட்டி விரட்டி காதலித்தார். ஆனால் பட்டும் படாமல் பழகி விட்டு கழண்டு கொண்டார் என்கிறார்கள்.
அதன் பின் வெறுத்து போய் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். மீண்டும் தமிழ் படங்களில் பிசியானார்.
அப்போது நானும் ரவுடிதான் படத்தில் கமிட் ஆக படம் முடிவதற்குள் அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.
இப்போது காதலனுக்காக சொந்த படம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சொந்த படம் நன்றாக நடந்து முடிந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தினாலும்
இன்னொரு புறம் படம் ஏதாவது ஆனால் சம்பாதித்த மொத்த பணமும் போய் விடும் என்று பதறுகிறார்கள் அவரின் நண்பர்கள்.
பாவம் தான்..!
Tags:
Cinema
,
அப்பாவி
,
உதயநிதி
,
சிம்பு
,
சினிமா
,
நயன்தாரா
,
பிரபுதேவா
,
விக்னேஷ் சிவன்