நடிகை சமந்தாவின் காதலர் நடிகர் நாகசைதன்யாவா???

12:28 AM |
சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர், இளம் கதாநாயகனை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சித்தார்த்துடன் சமந்தா இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. தற்போது சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்ததுடன் சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில்தான் திருமண அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். காதலன் யார் என்ற விவரத்தை திருமண தேதியை தெரிவிக்கும்போது வெளியிடுவேன் என்றும் சமந்தா கூறினார். இதை தொடர்ந்து அவர் காதலிப்பவர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. பேஸ்புக், டுவிட்டரில் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் யூகங்களாக பரவியது.

சமந்தா காதலிக்கும் நடிகர் நாகசைதன்யா என்று தெலுங்கு பட உலகினர் தற்போது உறுதிபடுத்தி உள்ளனர். நாகசைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் வெற்றிகரமாக ஓடிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் தெலுங்கில் எடுத்த போது அதில் நாகசைதன்யாவும் சமந்தாவும் ஜோடியாக நடித்தனர்.

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். நட்சத்திர ஓட்டல்களில் ஜோடியாக விருந்து சாப்பிட்டார்கள். திருமண தகவலை சமந்தா வெளியிட்டதும் நாகசைதன்யாவுக்கு டுவிட்டரில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் வாசிக்க…

மீண்டும் காதல், காதலன் யார்? சமந்தாவின் அதிரடி பதில்..!!

11:04 PM |
சமந்தா தெறி, 24 வெற்றியில் சந்தோஷத்தில் உள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்தை காதலிக்கின்றார் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரின் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இவர் ‘நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னேனா..?, ஆனால், இதுப்பற்றி எனக்கு பேசவிருப்பம் இல்லை’ என கூறியுள்ளார். எது எப்படியோ சமந்தா காதலில் விழுந்தது உறுதியாகிவிட்டது.
மேலும் வாசிக்க…

'தல!! தளபதி!! யார் மாஸ்? சித்தார்த் பளிச் பேட்டி! ஒவொரு ரசிகர்களும் பார்க்கவேண்டிய வீடியோ..!!

10:21 PM |
மேலும் வாசிக்க…

பாடகர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி..!!

12:36 AM |
சுந்தர் சி தயாரிப்பில் பாஸ்கர் இயக்கத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன் நடித்துள்ள பேய் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. இப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சித்தார்த் விபின் இசையில் மஜ்ஜா மல்ச்சா எனும் பாடலை பாடியுள்ளார். ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு பிறகு அவர் பாடிய பாடல் இது. இப்படம் வெளியானதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

‘ஜில் ஜங் ஜக்’ பட பிங்க் கார் விற்பனைக்கு வருகிறது..!!

11:26 PM |
அறிமுக இயக்குனர் தீரஜ் வைதி இயக்கத்தில் சித்தார்த் தயாரித்து நடித்த திரைப்படம் ‘ஜில் ஜங் ஜக்’. சமீபத்தில் வெளியான இப்படத்தில் அம்பாசிடர் வகையிலான பிங்க் நிற கார் ஒன்று முக்கிய பங்கு வகித்தது.

படத்தின் கதையே இந்த காரை சுற்றித்தான் நகரும். இந்நிலையில் தற்போது இந்த காரை விற்பனை செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பெட்ரோலில் இயங்கக்கூடிய இந்த காரின் விலை ரூ. 1.2 லட்சம் ஆகும்.
மேலும் வாசிக்க…

சித்தார்த்தும் சிம்புவும் ஒன்றுதான்..!!

1:32 AM |
சிம்பு ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல பாய்ஞ்சீங்களே, இதை கேட்க மாட்டீங்களா? என்று ஒரு பாடலை சுட்டிக் காட்டுகிறார்கள் வலைதள வம்பாளர்கள். (அல்லது வம்பு ஆதரவாளர்கள்) வேறொன்றுமில்லை, இவர்கள் சுட்டிக்காட்டுவது சித்தார்த்தை.

ஜில் ஜங் ஜக் என்றொரு படத்தை தயாரித்து அவரே ஹீரோவாக நடிக்கிறார். அதில் ஒரு பாடல்... “ஷூட்ட குருவி ஷுட்ட குருவி...” என்று. அதாவது ஷுட் எ குருவியாம். அதற்கப்புறம் வருகிற வரிகளில் “ஷுட்ட கிளி ஷுட்ட கிளி” என்று வருகிறது. அதை என்னவோ போல பாடுகிறார் அந்த பாடகரும்.

“சகிக்கல... யாராவது கேளுங்க. இல்லேன்னா பாடுனவரு வாயையாவது மூடுங்க” என்று கொதிக்கிறது அந்த கூட்டம். தமிழை அமுதம் போல குடிச்சு, சர்பத் போல துப்பினா இப்படியெல்லாம்தான் புரிஞ்சுக்கணும். என்ன பண்றது? இது கூகுள் காலம்!

மேலும் வாசிக்க…

சித்தார்த்தா இப்படி நடித்தார் நம்ப முடியாத அதிர்ச்சி வீடியோ..!!

1:12 AM |
மேலும் வாசிக்க…

ஜில் ஜங் ஜக் திரை விமர்சனம் - Jil Jung Juk Review

9:40 PM |
நடிகர் சித்தார்த் ‘ஏடாகி எண்டர்டைன்மெண்ட்’ எனும் பட நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து நாயகராக நடித்தும் வெளிவந்திருக்கும் படம் தான் “ஜில்.ஜங். ஜக்.”

ஒரு பெரும் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் தெய்வா எனும் தெய்வநாயகம். பெட்ரோல் தட்டுப்பாடு, இன்னும் சில அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகளால் 2020-ம் ஆண்டில் தொழில் முடங்கிப் போன அந்த தாதா, தன்னிடம் கடைசி, கடைசியாக இருக்கும் நான்கு கோடி மதிப்புள்ள சரக்கை ஹைதராபாத்துக்கு வரும் சைனிஸ் பார்ட்டியிடம் கைமாற்றி விட்டு காசு பார்க்க நினைக்கிறார்.

ஆனால், போட்டியாளர்கள் கண்களிலும், போலீஸீன் கண்களிலும் மண்ணைத்துவி விட்டு சரக்கை ஹைதராபாத்துக்கு கொண்டு செல்ல தன் பழைய ஆட்களையும், பழைய பார்முலாவையும் நம்பாத தெய்வநாயகம், தேர்ந்தெடுக்கும் மூன்று பேரும், ஒரு காரும், அது சார்ந்த காமெடி கதையும்தான் ஜில் ஐங் ஜக் மொத்தப் படமும்!

நாஞ்சில் சிவாஜி எனும் ‘ஜில்’லாக சித்தார்த், தில்லாக இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து கூடவே இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

கதைப்படி, பேச்சில் வல்லவரான சித்தார்த் படம் முழுக்க பேசும் வார்த்தைகள் புரியாது இருப்பது ரசிகனை நெளிய வைக்கிறது. என்றாலும் நடிப்பில் நிறையவே ஸ்கோர் செய்திருப்பதற்காக சித்தார்த்தை பாராட்டலாம்.

சித்தார்த்தின் நண்பர்களாக ஜங் – ஜங்குலிங்கமாக வரும் அவினாஷ்ரகுதேவனுக்கும், ஜக் – ஜாகுவார் ஜகன்னாக வரும் சனந்துக்கும் தனக்கு உரிய முக்கியத்துவத்தை கதையிலும் காட்சி படுத்தலிலும் கொடுத்திருப்பதற்காக தயாரிப்பாளர் சித்துவை பாராட்டலாம்.

ரோலெக்ஸ் ராவுத்தராக வரும் டத்தோ ராதாரவி, தெய்வா எனும் தெய்வநாயகமாக வரும் ஆர்-அமரேந்திரன், அட்டாக் ஆல்பர்ட் டாக வரும் எம்.ஜி.சாய்தீனா, மருந்து -கே.பகவதி பெருமாள், நாசிம்மன் – நாகா, பைந்தமிழ் – பிபின், காளி – ஷரத், ஜக் கின் அப்பா ஆர் எஸ்.சிவாஜி, ராவுத்தர் அடியாள் – விஜய முத்து, குணா-ஆர்.பிரவீன், நடிகை சோனு சாவந்த்தாக வரும் ஜாஸ்மின்பாஸின் உள்ளிட்ட நட்சத்திரங்களில் எல்லோருமே தேவைக்கு அதிகமாக நடித்து ரசிகனின் பொறுமையை சோதிக்கின்றனர்.

ஆறுதல், படம் முழுக்க பின்க் கலரிலும் ஆஷ் கலரி லும் வரும் அந்த இரண்டு ஒல்டு மாடல் கார்கள் மட்டிலும் தான்.

சிவஷங்கரின் கலை இயக்கம், குருட்ஸ் ஸ்னை டரின் படத்தொகுப்பு, ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, தீரஜ் வைத்தியின் எழுத்து ,இயக்கம் உள்ளிட்டவைகளில் ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சிவஷங்கரின் கலை இயக்கமும் திரும்பி பார்க்க வைக்கின்றன.

ஆக மொத்தத்தில், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் காமெடி எனும் போர்வையில் ‘ஜில்.ஜங்.ஜக்’ கடித்திருப்பது டிராஜிடி!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சித்தார்த்!
மேலும் வாசிக்க…

தல அடுத்த முதலமைச்சரா? என்னைய நிம்மதிய இருக்க விடுங்க –சித்தார்த்..!!

3:25 AM |
சித்தார்த் நடிப்பில் இந்த வாரம் ஜில் ஜங் ஜக் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை புதிய வடிவில் சித்தார்த் ப்ரோமோஷன் செய்துள்ளார்.
இதற்கான ஒரு வீடியோவை உருவாக்கிய படக்குழுவினர்கள், ஒரு சிறுவன் சித்தார்த்திடன் கமர்ஷியல் படம் குறித்து கேள்வி கேட்பது போல் உருவாக்கியுள்ளனர்.

இதில் இயக்குனர் மிஷ்கினை கலாய்த்தது மட்டுமின்றி, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு ஊர்ல இரண்டு ராஜா போன்ற படங்களையும் கலாய்த்து உள்ளனர்.

மேலும், அஜித் பற்றிய செய்தி படத்தில் உள்ளதா? அப்போது தான் ரசிகர்கள் கைத்தட்டுவார்கள் என அந்த சிறுவன் கேட்க, சித்தார்த் இது 2020ல் நடக்கும் கதை என்கிறார்.

உடனே அந்த சிறுவன் அப்போ அவர் தான் முதலமைச்சர் என கூற, சித்தார்த் பயத்துடன் ‘என்னை டுவிட்டர்ல நிம்மதிய இருக்க விடுடா’ என கூறி கலக்கியுள்ளார்.
மேலும் வாசிக்க…

டிவிட்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்..!!

12:05 AM |
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது” என்றொரு சர்ச்சையான ட்வீட்டை தட்டியிருந்தார்.

இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், ” நான் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் வரும் வசனம் தான் அது. அதில் நான் யாரையும் குறிப்பிட்டு ட்விட் செய்யவில்லை. மற்றவர்கள் இதை வேறு மாதிரி பார்த்தால் நான் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்” என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

எனக்கு அதிர்ஷ்டம் இல்லை - சித்தார்த் வருத்தம்..!!

12:09 AM |
பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் சித்தார்த். தற்போது இவர் நடிப்பில் அரண்மனை2 படம் ஜனவரி 29ல் வெளியாகவிருக்கிறது.
சமீபத்தில் மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை , கடலூர் பகுதிகளில் தனது முழுமையான பங்களிப்பைக் கொடுத்து ரியல் ஹீரோவாக பலராலும் பாராட்டப்பாட்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார்.சித்தார்த்தின் நண்பர்கள் அவருக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என விரும்புகிறார்களே எனக் கேட்க, கல்யாணம் மட்டும் எப்போ நடக்கணும்னு இருக்கோ அப்போதான் நடக்கும் என்பதை நம்புகிறவன் நான். கட்டாயப்படுத்தி நடப்பதல்ல.

மேலும் எந்த முறைக்கும் எதிரானவன் அல்ல நான். அது நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக நடக்கும்.காதல் குறித்து பேசுகையில், காதலைப் பொருத்தமட்டில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என சொல்லமாட்டேன். எனக்கு இப்போது அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்வேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜய் சேதுபதி ஒரு பச்சோந்தி: சித்தார்த்..!!

6:32 AM |
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சேதுபதி. இதில் விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் சித்தார்த் பேசும்போது, விஜய் சேதுபதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறப்பாக நடிக்கிறார். அவரோட வெற்றியை பார்த்து வயிற்றெரிச்சலாக இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தில் இருந்து அவரோட ரசிகனாகி விட்டேன்.

அடுத்து வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தை பார்த்து அசந்து விட்டேன்.இந்த படத்தை இயக்கிய அருண்குமாருக்கு போன் செய்து, படம் சூப்பராக இருக்கிறது.

உங்களுடைய அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர் விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் என்றார்.என்னுடைய நண்பர் கார்த்திக் சுப்புராஜிடம் உன்னுடைய கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினேன். அதற்கு கார்த்திக்கும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப் போகிறேன் என்று கூறினார்.

அடுத்ததாக சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரும் விஜய் சேதுபதி என்றார். எல்லோரும் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுத்தால் எங்களை வைத்து யார் படம் பண்ணுவாங்க. என்றார்.

விஜய் சேதுபதியிடம் திறமை இருப்பதால் அவரை வைத்தே தொடர்ந்து இயக்குனர் படம் இயக்க ஆசைப்படுகிறார்கள். ஓரிரு படங்கள் எங்களை போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கினால் நாங்களும் பிழைத்துக் கொள்வோம்.

விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு பச்சோந்தி. எந்த கதையாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறி விடுகிறார். அந்த கதைக்கு நான் மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்கிற அளவுக்கு முழுமையாக மாறி நடிக்கிறார் என்றார் சித்தார்த்.
மேலும் வாசிக்க…

சித்தார்த் நடிக்கும் ஜில் ஜங் ஜக் ட்ரெய்லர்! வீடியோ

9:59 PM |
மேலும் வாசிக்க…

அடுத்தக்கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி,சித்தார்த்..!!

3:27 AM |
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழ் திரையுலகம் சார்பில் பெரும் பங்கு வகித்தவர்கள் நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி. இவர்கள் சென்னை மைக்ரோ எனும் பெயரில் பல தன்னார்வலர்களுடன் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம் 3,39,18,793 ரூபாய். இதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக பகிர்ந்து அளிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

சித்தார்த்தின் கருத்து எவ்வளவு உண்மையாகிவிட்டது ( வீடியோ)

1:22 AM |
மேலும் வாசிக்க…

படங்களை தூக்கி எறிந்த சித்தார்த்- மக்கள் பாராட்டு..!!

11:04 PM |
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஆளாக உதவியவர் சித்தார்த் தான். இவர் இன்றும் பல இடங்களுக்கு நேரில் சென்று தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் எந்த படப்பிடிப்புகளிலும் கலந்துக்கொள்ள வில்லையாம்.ஜில் ஜங் ஜக் படத்தின் ரிலிஸ் தேதியை கூட தள்ளிப்போட்டு விட்டாராம்.

மேலும், இவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளுக்கும் தற்போது வரை கலந்துக்கொள்ளாமல் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால், பலரும் சமூக வலைத்தளங்களில் இவரை பாராட்டி வருகின்றனர். சூப்பர் சித்தார்த்.
மேலும் வாசிக்க…

நடிகர் சித்தார்த் மக்களுக்கு அளித்த அறிவுரை..!!

2:26 AM |
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு நடிகர் சித்தார்த் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி வருகிறார்கள். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதுடன் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்டும் உள்ளனர். இந்நிலையில் சித்தார்த் தன்னார்வலர்களுக்கு ஓர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி தன்னார்வலர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி ஊசி போட்டுக் கொள்ளுங்கள். திறந்தநிலையில் உள்ள காயங்கள் இருந்தால் கவனம். தோல் நோய் பரவும். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

உணவு முக்கியம் அல்ல. வெள்ளநீர் வடிந்து கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. பெட்ஷீட்கள், மெழுகுவர்த்திகள், பூச்சிக்கொல்லிகள், தண்ணீரை நன்கொடை அளியுங்கள். என சித்தார்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க…

களத்தில் இறங்கி வேலை - நிஜ ஹீரோக்களான சித்தார்த்-ஆர்.ஜே.பாலாஜி..!!

2:19 AM |
வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிதியுதவி அளித்துவிட்டு சும்மா இருக்கும் திரைபிரபலங்களுக்கு மத்தியில் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை வழங்கி உதவி வருகின்றனர்.

 சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையால் சென்னை நகரமே சின்னாபின்னமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. உண்ண உணவு கூட இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் நடிகர் சித்தார்த்தின் வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்தது. ஆனாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை டுவிட்டர் வாயிலாக அங்கே உதவி தேவை, இங்கு உதவி தேவை என்று பதிவிட்டு கொண்டே இருந்தார்.

 மேலும் உங்களால் உணவு அளிக்க முடியுமென்றால் என்னை அழையுங்கள். நாங்கள் உங்களிடம் வந்து உணவு பொட்டலங்களை பெற்று கொள்கிறோம். உணவு பொட்டலங்கள் தருபவர்கள், எங்களை #ChennaiMicroவில் தொடர்பு கொள்ளவும். வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டால், தயவு செய்து உதவி புரியுங்கள். அவர்களை தண்ணீர் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிவாரணப் பணிகளில் ஈடுபடாதவர்கள் தயவு செய்து வீட்டுக்குள் இருந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

வெறும் டுவிட்டரில் மட்டும் பதிவிட்டு அவர் சும்மா உட்காரவில்லை. நடிகர் சித்தார்த், ஆர்.ஜே.வும் நடிகருமான பாலாஜி அவரது நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் களம் இறங்கினார். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி சென்றார்கள். மேலும் உதவி செய்பவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள்.

உண்மையில் இருவருமே ரியல் ஹீரோக்கள் தான். இருவருக்கும் ஹேட்ஸ் ஆப்!
மேலும் வாசிக்க…

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் விபரம்..!!

1:51 AM |
சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை.

கோடம்பாக்கம், வட பழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

இந்த பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. அடையாறில் சீறிக்கொண்டு செல்லும் வெள்ளம் சைதாப்பேட்டையை மூழ்கடித்து தியாகராயநகர், கோடம்பாக்கம் பகுதிகளையும் புரட்டிப்போட்டது.

நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் தவித்தனர். வீட்டின் முதல் தளத்தை காலிசெய்து விட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். தேனாம்பேட்டை செனட்டாப் ரோடு பகுதியில் உள்ள நடிகை திரிஷா வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. அண்ணாநகரில் உள்ள விஷால் மற்றும் ஆர்யா வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.

நடிகர் சித்தார்த் தனது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெட்டி, படுக்கையுடன் மாடிக்கு சென்றார். வீட்டில் நுழைந்த மழை வெள்ளத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் வாகனங்கள் ஏற்பாடு செய்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார். என் வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளது. மாடிக்கு செல்கிறோம். தமிழ் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை குஷ்பு வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. அவர் வீட்டின் முன்னால் ஆறுபோல் வெள்ளம் ஓடியது. அதனை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கினார். அவர் கூறும்போது ‘தொடர்ந்து மழைபெய்ததால் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. இதனால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படித்தான் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

தியாகராயநகரில் உள்ள சூர்யா, கார்த்தி, பிரபு வீடுகள் முன்பும் வெள்ளம் சூழ்ந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சத்யராஜ், நமீதா வீடுகள் முன்பும் வெள்ளம் ஆறாக ஓடியது.

போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன்பும் வெள்ளம் முழங்கால் அளவுக்கு மேல் ஓடியது. கோட்டூர்புரத்தில் உள்ள நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா வீட்டுக்குள் அடையாறு வெள்ளம் புகுந்தது.

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் விவேக் வீட்டையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. அவர் கூறும்போது ‘நான் ஐதராபாத்தில் சிக்கிக்கொண்டேன். சென்னை மக்களின் நிலை கண்டு எனது இதயத்தில் இரத்தம் வழிகிறது’ என்றார். தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் வாசிக்க…

தன் வீட்டில் வெள்ளம் புகுந்தாலும் சென்னைவாசிகளுக்காக 'தீயா வேலை செய்யும் குமாரு

3:02 AM |
நடிகர் சித்தார்த்தின் வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளபோதிலும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.திங்கட்கிழமையில் இருந்து பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கின்றது. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தான் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் வீட்டிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வீடு
வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துவிட்டது. மாடிக்கு செல்கிறோம். தமிழ்நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

எங்க வீடே
எங்க வீடே பாத்ரூம்கள் வெள்ளத்தில் மூழ்கின. டிரெய்னில் இருந்து நீர் வருகிறது. நான் ஒரு பிரபல நடிகர். இது என் வீடு. தமிழகத்தில் மீதமுள்ளவர்களின் நிலையை யோசித்து பாருங்கள்.

மீட்பு பணி 
நாளை காரில் வலம் வந்து மக்களை பிக்கப் செய்து டிராப் செய்கிறோம். தற்போது உணவு, உடை ஆகியவை இரண்டாவது தான். போக்குவரத்து தான் முக்கியம். தயவு செய்து ரீட்வீட் செய்யுங்கள்

கார்கள் 
சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 கார்கள் சுற்றி வருகின்றன. போக்குவரத்து பிரச்சனைகளை எனக்கும், @rj_balajiக்கும் போஸ்ட் செய்யுங்கள்.

உணவு 
சென்னையில் உணவு பொட்டலங்களுக்கு உங்களால் ஏற்பாடு செய்ய முடிந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். நாங்கள் அவற்றை பிக்கப் செய்து வினியோகிப்போம். 50-100 உணவு பொட்டலங்களாக.

மழை
மீண்டும் மழை பெய்கிறது. கனக்டிவிட்டி வேறு போகிறது. மாலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவை. தயவு செய்து தொடர்பு கொள்ளவும் #ChennaiMicro.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com