சிம்பு ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல பாய்ஞ்சீங்களே, இதை கேட்க மாட்டீங்களா? என்று ஒரு பாடலை சுட்டிக் காட்டுகிறார்கள் வலைதள வம்பாளர்கள். (அல்லது வம்பு ஆதரவாளர்கள்) வேறொன்றுமில்லை, இவர்கள் சுட்டிக்காட்டுவது சித்தார்த்தை.
ஜில் ஜங் ஜக் என்றொரு படத்தை தயாரித்து அவரே ஹீரோவாக நடிக்கிறார். அதில் ஒரு பாடல்...
“ஷூட்ட குருவி ஷுட்ட குருவி...” என்று. அதாவது ஷுட் எ குருவியாம். அதற்கப்புறம் வருகிற வரிகளில்
“ஷுட்ட கிளி ஷுட்ட கிளி” என்று வருகிறது. அதை என்னவோ போல பாடுகிறார் அந்த பாடகரும்.
“சகிக்கல... யாராவது கேளுங்க. இல்லேன்னா பாடுனவரு வாயையாவது மூடுங்க” என்று கொதிக்கிறது அந்த கூட்டம். தமிழை அமுதம் போல குடிச்சு, சர்பத் போல துப்பினா இப்படியெல்லாம்தான் புரிஞ்சுக்கணும். என்ன பண்றது? இது கூகுள் காலம்!
Tags:
Beep song
,
Cinema
,
சித்தார்த்
,
சிம்பு
,
சினிமா
,
ஜில் ஜங் ஜக்