வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிதியுதவி அளித்துவிட்டு சும்மா இருக்கும் திரைபிரபலங்களுக்கு மத்தியில் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை வழங்கி உதவி வருகின்றனர்.
சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையால் சென்னை நகரமே சின்னாபின்னமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. உண்ண உணவு கூட இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் நடிகர் சித்தார்த்தின் வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்தது. ஆனாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை டுவிட்டர் வாயிலாக அங்கே உதவி தேவை, இங்கு உதவி தேவை என்று பதிவிட்டு கொண்டே இருந்தார்.
மேலும் உங்களால் உணவு அளிக்க முடியுமென்றால் என்னை அழையுங்கள். நாங்கள் உங்களிடம் வந்து உணவு பொட்டலங்களை பெற்று கொள்கிறோம். உணவு பொட்டலங்கள் தருபவர்கள், எங்களை #ChennaiMicroவில் தொடர்பு கொள்ளவும். வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டால், தயவு செய்து உதவி புரியுங்கள். அவர்களை தண்ணீர் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிவாரணப் பணிகளில் ஈடுபடாதவர்கள் தயவு செய்து வீட்டுக்குள் இருந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
வெறும் டுவிட்டரில் மட்டும் பதிவிட்டு அவர் சும்மா உட்காரவில்லை. நடிகர் சித்தார்த், ஆர்.ஜே.வும் நடிகருமான பாலாஜி அவரது நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் களம் இறங்கினார். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி சென்றார்கள். மேலும் உதவி செய்பவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள்.
உண்மையில் இருவருமே ரியல் ஹீரோக்கள் தான். இருவருக்கும் ஹேட்ஸ் ஆப்!
Tags:
Cinema
,
ஆர்.ஜே.பாலாஜி
,
சித்தார்த்
,
சினிமா
,
நிஜ ஹீரோக்களான சித்தார்த்-ஆர்.ஜே.பாலாஜி