அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் என இரு முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் பாடல் கட்சிக்கா கோவா செல்ல இருகிறார்கள், அது மட்டும் இல்லாமல் கோவா கடற்க்கரையில் சில சண்டை காட்சிகள் அதாவது கிளைமாக்ஸ் காட்சிகளும் எடுக்க இருக்காங்க இதற்காக இன்னும் சில நாட்களில் கோவா படபிடிப்பு ஆரம்பம்.
பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அதோடு நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய் 59வது படம் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். அது மட்டும் இல்லாமல் முக்கியமான பாத்திரத்தில் (வில்லன்) சத்யராஜ் நடிப்பதாக பேச்சு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார். தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் என ஏதுவும் வெளியாகவில்லை.
ஆனால் அதற்குள் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாம். விஜய்யின் முந்தைய படமான புலி படம் சரியாக ஓடவில்லை என்ற வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இருப்பினும் இவ்வளவு கோடி விற்கப்பட்டுள்ளது கோலிவுட்டில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த விஜய் ரசிகர்கள் இதுக்கு பேர்தான் மாஸ் என்று அவருடைய ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய் 59