தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சாய் பிரசாந்த் சென்ற ஞாயிறு அன்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பல நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை கொள்ளவேண்டிய விஷயம்தான். பல நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்போதும் மீடியாக்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயம் என்பதால், எந்த நடிகரும் தன்னுடைய சொந்த பிரச்சனைகளை வெளியில் சொல்வதில்லை. அதே விஷயம் மனஇறுக்கத்தை உருவாக்கி இத்தகைய முடிவுகளை எடுக்க வைக்கிறது.
இத்தகைய நிகழ்வுகளை தடுக்க, சினிமா துறையில் இருப்பவர்களின் மன இறுக்கத்தை போக்க கவுன்சிலிங் அத்தியாவசிய ஒன்றாகிறது. பல வருடங்களாக சின்ன திரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பிரசாந்த், தன்னுடைய மனைவி அவரை விட்டு பிரிந்ததாலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. அவரின் இந்த விபரீத முடிவெடுத்த சாய் பிரசாந்திற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:
Cinema
,
சாய் பிரசாந்த்
,
சினிமா
,
சின்னத்திரை
,
தற்கொலை
,
நடிகர்கள்