எப்படியோ குவியும் பணம்..! தறிகெட்ட வாழ்க்கை..! குடி கும்மாளம்..! பயங்கர நோய்..!!

11:23 PM |
சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும்  பரிதாபம் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. கடைசியாக சபர்ணா என்கிற அழகான நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்..!

நிர்வாணமாக..! வீடெங்கும் மதுப் பாட்டில்கள்..மாத்திரை மருந்துகள்..போதைப் பவுடர்கள்..! அப்பா, அம்மா இருந்தும் கூட தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார் சபர்ணா..!

அவர்பற்றி சின்னத்திரை வட்டாரங்கள் கூறும் போது, சபர்ணா பயங்கர மாடர்ன் கேர்ள். புதிதாக வாழவேண்டும். யார் தயவும் இல்லாமல் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்..!

ஆடம்பரப் பிரியை…! மார்கெட்டில் எது புதிதாக வந்தாலும் முதல் ஆளாக வாங்கி விடுவார்..! ஆண் நண்பர்கள் மிக அதிகம்..!

யாராவது டின்னருக்கு அழைத்துப்போய் விடுவார்கள்..! அவரது வீட்டிற்கும் ஆனா நண்பர்கள் கூட்டம் அலை மோதும்..! அப்படிப் பட்டவர் சமீப காலமாக மிகவும் சோர்ந்து இருந்தார்..!

உடல்நலம் சரி இல்லை என்றார்.. படபிடிப்புகளிலும் அதிகம் காணவில்லை.. என்கிறார்கள்..!

முன்பு இதே போல ஒரு   சின்னத்திரை நடிகை  கேன்சர் என்று டாக்டர்கள் கூறி விட, மனம் உடைந்து தூக்கில் தொங்கி இறந்து போனார்..!

அதே போல சபர்ணா ஏதாவது பாதிப்பு உள்ளாகி இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்..!!

சபர்ணா இறந்த அன்று இரண்டு மூன்று பேர் மது குடித்திருகிரார்கள் என்று கருதுகிறது காவல் துறை…!

அளவுக்கு அதிகமான பணம்..ஆண் நண்பர்கள்..எப்போதும் குடி கூத்து.. ‘அந்த’ விஷயங்களில் குவியும் லட்சங்கள்..தறிகெட்ட வாழ்க்கை..!

கட்டுப்பாடுகளும் கிடையாது..! அதனால் குறுகிய காலத்தில் எல்லாம் அனுபவித்து விட்டு மனம் உடைந்து செத்துப் போகிறார்கள்.

பரிதாபம் தான்..!!
மேலும் வாசிக்க…

முழு நிர்வாணமாக இறந்து கிடந்த நடிகை சபர்ணா! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

10:19 PM |
பிரபல சின்னத்திரை நடிகையான சபர்ணா இன்று மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபர்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர்.

மேலும், நடிகை சபர்ணாவின் கையில் பிளேடால் அறுத்துக்கொண்ட அடையாளங்கள் இருந்துள்ளன.

இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் அறுத்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உடல் மீட்கப்பட்ட வீட்டில் மதுபானங்கள், கஞ்சா, சிகரெட் போன்றவை இருந்துள்ளன. வீட்டின் கதவு வேறு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது.

சபர்ணாவின் டைரியை கைப்பற்றியுள்ள பொலிசார் டைரியை வைத்து சபர்ணாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

லதாவுடன் காதல் தேவையா? ராஜ்கமலை திட்டிய சமுத்திரக்கனி..!!

11:38 PM |
சின்னத்திரை நடிகர்கள் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் சாதிக்க தொடங்கிவிட்டனர்.

அந்தவகையில் பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்துவரும் ராஜ்கமல் தற்போது சண்டிக்குதிரை படத்தின் மூலம் கதாநாயகனாகிவிட்டார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதை இவரது மனைவி லதா ராவ் தொகுத்து வழங்கினார். விழாவில் சமுத்திரக்கனி பேசுகையில், நான் சின்னத்திரையில் சீரியல் இயக்கிய காலகட்டத்தில், லதா ராவை காதலித்தான்,

சினிமாவில் சாதிக்க நினைக்கும் நேரத்தில் உனக்கு புடலங்கா காதல் தேவையா என்று செல்லமாக கண்டிப்பேன். தயங்கியபடியே ஒரமாக நிற்பான். இன்று ராஜ்கமல் கதாநாயகனாக வளர்ந்தது சந்தோஷம் என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

பெண்ணின் தற்கொலையை தடுத்தார் சாய் பிரசாந்த் - பிரபல தொகுப்பாளினியின் ஆச்சரிய தகவல்..!!

10:32 PM |
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்தின் தற்கொலை சமீபத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடனம், மிமிக்ரி, நடிப்பு என பன்முக திறமை கொண்ட இவரின் இந்த முடிவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

மரணம் பற்றி பிரபல தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஃப்ரினா கூறுகையில், இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான் சீரியல் ஒன்றில் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்றுவார்.

ஆனால் அவரின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது. கடிதத்தில் கூட ஸ்மைலி போட்டிருந்த அவர் எப்படி தற்கொலைக்கு முயன்றார் என்றே புரியவில்லை, எதுவானாலும் இது முட்டாள்தனமான முடிவுதான் என்று கூறியுள்ளார்.


மேலும் வாசிக்க…

சன் டி.வி.யை சாடும் ராதிகா..!!

7:19 PM |
மன அழுத்தம் காரணமாக , சமீபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்.

அவரது தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாய் பிரசாந்த் தற்கொலையை முன்னிறுத்தி சன் டி.வி உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களையும் கடுமையாக சாடி இருக்கிறார் ராதிகா சரத்குமார்.

“சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது.

ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகை தன்னுடைய நாடகங்களில் நடிக்கிறார் என்றால், மற்ற தொலைக்காட்சியில் நடிக்கக் கூடாது, மற்ற சேனல் நடத்தும் ஷோவுக்கு போகக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய வேலை வாய்ப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகிறது.

இந்த மாதிரி தொலைக்காட்சி நிறுவனங்கள் கையெழுத்து வாங்கி கொள்வதால் நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சின்னத்திரை என்பது ரொம்ப சின்ன இடம் என்பதால் மிகவும் பொருளாதார சிக்கல் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படுகிறது.

நானே நிறைய இடங்களில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ மற்ற நிறுவனங்களின் சீரியல்களில் நடிக்கப் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லியிருக்கிறேன். அதை தடுக்கக் கூடாது என்று நான் நிறைய தடவை சண்டையிட்டும் இருக்கிறேன். திறமையுள்ள நடிகன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

சமுத்திரக்கனிதான் என்னுடைய ‘அரசி’ சீரியலில் சாயை அறிமுகப்படுத்தினார். என்னைப் பார்க்க நிறைய முறை அலுவலகத்திற்கு வருவான். தற்கொலை செய்தவற்கு முன் அவன் எழுதிய கடிதத்தில் எனக்கு நன்றி சொல்லியிருப்பதாக சொன்னார்கள்.

அதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு தொலைக்காட்சியின் சீரியலில் நடித்தால் மற்றொரு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்க நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்”

சாய் பிரசாந்தின் மரணமும், அது தொடர்பான ராதிகா சரத்குமார் சொல்லும் உண்மையும் சேனல்களின் சிறையிலிருந்து சின்னத்திரை கலைஞர்களை விடுவிக்குமா?
மேலும் வாசிக்க…

சாய் பிரசாந்த் தற்கொலை – பிரபலங்களின் அதிர்ச்சி பதிவுகள்..!!

2:06 AM |
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சாய் பிரசாந்த் சென்ற ஞாயிறு அன்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பல நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை கொள்ளவேண்டிய விஷயம்தான். பல நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்போதும் மீடியாக்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயம் என்பதால், எந்த நடிகரும் தன்னுடைய சொந்த பிரச்சனைகளை வெளியில் சொல்வதில்லை. அதே விஷயம் மனஇறுக்கத்தை உருவாக்கி இத்தகைய முடிவுகளை எடுக்க வைக்கிறது.

இத்தகைய நிகழ்வுகளை தடுக்க, சினிமா துறையில் இருப்பவர்களின் மன இறுக்கத்தை போக்க கவுன்சிலிங் அத்தியாவசிய ஒன்றாகிறது. பல வருடங்களாக சின்ன திரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பிரசாந்த், தன்னுடைய மனைவி அவரை விட்டு பிரிந்ததாலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. அவரின் இந்த விபரீத முடிவெடுத்த சாய் பிரசாந்திற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



மேலும் வாசிக்க…

சாய் பிரசாந்தின் தற்கொலைக்கு சின்னத்திரை நடிகர்களின் இரங்கல்..!!

2:54 AM |
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com