திருமணம் என்று கேள்விப்பட்டபோதே எவ்வளவோ எடுத்து சொன்னோம். கேட்டீங்களா? என்று திரையுலகினரும், நாங்க எவ்வளவோ சொல்லியும் உன் வாழ்க்கையை கெடுத்துட்டு வந்து நிக்கிறீயே? என்று குடும்பத்தாரும் அந்த இயக்குநரைப் பார்த்து கேட்கின்றனர்.
பறவை நடிகையை திருமணம் செய்து இப்போது விவாகரத்து வரை வந்திருக்கும் இனிஷியல் இயக்குனரைப் பார்த்து தான் இந்த கேள்விகள்.
இதுவரை எத்தனையோ டைவர்ஸ்களை பார்த்துவிட்டது தமிழ் திரையுலகம். ஆனால் இந்த திருமணம் நடக்கும்போதே தெரியும் இது நீடிக்காது என்று.
ஏனென்றால் நடிகையின் கேரக்டர் அப்படி… திருமணத்துக்கு பின் தான் ஒல்லி நடிகருடன் வேலையில்லாத படத்தில் நடித்தார் அப்போதே பிரச்னை தொடங்கிவிட்டதாம். அது இப்போது ஒல்லி தயாரிப்பில் நடிக்கும் படத்தில் முற்றவே இந்த பிரிவு. நடிகை இப்போது முழுக்க முழுக்க ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக கேள்வி.
வர வர ஒல்லி நடிகரின் அட்ரா சிட்டிக்கு அளவே இல்லாமல் போய்கொண்டிருகிறதாம். சமீபத்தில் இவர் கீ நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக கூறபட்டது.இப்போது, பறவை நடிகை.
எல்லாத்துக்கும் காரணம், ஒல்லியின் ஓய்ஃப் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அப்பாவை கவனித்து கொள்ளவே அவருக்கு நேரம் போதவில்லையாம். சமீபத்தில் உச்ச அப்பாவின் மருத்துவ ஓய்வுக்காக இரண்டு மாத காலம் அப்பாவுடன் வெளிநாடு பறந்த இவர் இப்போது தான் திரும்பி வந்துள்ளார்.
இந்த இரண்டு மாதத்தில் ஒல்லியின் அட்டகாசம் எல்லை மீறி போய்விட்டது என்று ஒய்ஃபிடம் கம்ப்ளெய்ன்ட் பறக்கிறதாம்.
Tags:
Cinema
,
ஒல்லி நடிகர்
,
சினிமா
,
திரையுலகம்
,
மணமுறிவு
,
விவாகரத்து
,
விஷமம்