ஸ்டண்ட் நடிகரை நம்பி மோசம் போன நடிகை சபர்ணா - பகீர் தகவல்..!!

10:52 PM |
கடந்த வாரம் அந்த புலானாய்வு வார இதழ் அந்த செய்தியை வெளியிட்ட போது மொத்த தமிழ் நாடும் அதிர்ந்தே போனது. சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம் முதலில்  தற்கொலை என்று போலீஸ் கூறியது.

ஆனால், போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் தெளிவாக கூறி விட்டது. கை நரம்பை கட் பண்ணிக் கொண்டதால் தான் மரணம் என்று கூறி விட்டார்கள்.

அதே நேரம் அறையில் நிறைய மது புட்டிகளும்..சிகெரெட் பாக்கெட்களும் குவிந்து கிடந்திருகிறது.அது மட்டுமல்ல நிறைய பேர் சேர்ந்து குடித்ததற்கான தடயங்களும் சிக்கி இருக்கிறது.

மெல்ல அக்கம் பக்கத்தினரிடம் போலீஸ் விசாரணையில் இறங்கினர். நடிகை சபர்ணாவிற்கும் ஒரு ஸ்டண்ட் நடிகருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருகிறது.

அவர் தான் சபர்ணாவின் பெற்றோர்களிடம் இருந்து சபர்ணாவை பிரித்து தனியே வீடு எடுத்துக் கொடுத்துள்ளார்.

செலவு வாடகை போன்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டார் என்கிறார்கள். சமீப காலமாகவே சபர்ணாவிற்கு நடிக்க வாய்ப்பு ஏதும் இல்லையாம்.

அதனால் முழுக்கவே அந்த ஸ்டண்ட் நடிகரை நம்பியே காலம் தள்ளியுள்ளார் சபர்னா. அடிக்கடி டெல்லி போவாராம் அதற்கான  செலவுகளுக்கும்   அந்த நடிகரையே நம்பியுள்ளார்.

சபர்ணா இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு அந்த நடிகர் நண்பர்களோடு சபர்ணா வீட்டிற்கு வந்துள்ளார். விடிய விடிய மது விருந்து அமர்க்களப்பட்டது என்கின்றனர் அக்கம் பக்கத்தினர்.

போலீஸ் அந்த நடிகரை நெருங்கி விட்டது என்கின்றனர். சபர்ணா செத்துப் போவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக ஒரு போன் வந்துள்ளது.

அதன் பின்னர் தான் சபர்ணா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

பரிதாபம் தான்.!

மேலும் வாசிக்க…

சபர்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகை தற்கொலை..!!

10:57 PM |
தற்கொலை சம்பவங்கள் திரையுலகில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் நடிகை சபர்ணா மரணமடைந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று மலையாள நடிகை ரேகா மோகன் கேரளாவில் திரிசூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.

கடந்த இருநாட்களாக துபாயில் உள்ள அவரது கணவருடன் எந்த தொடர்பும் செய்யாமல் இருந்துள்ளார். இதனையடுத்து போலிசில் புகார் தந்ததையடுத்து அவர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த தகவல் தெரிந்துள்ளது.

ரேகா உதயனபாலகன், யாத்ராமொழி போன்ற படங்களிலும், மாயம்மா உட்பட மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

நடிகை சபர்ணாவின் தற்கொலையை அடுத்து வெளிவந்த பகீர் தகவல்கள்..!!

10:52 PM |
சீரியல் நடிகை சபர்ணாவின் தற்கொலை திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே அவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது நடிகை சபர்ணாவின் ஃபேஸ்புக்கை ஆய்வுசெய்த பின் பேசிய போலீசார் கடந்த சில வாரங்களாக அவர் மன அழுத்தத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஏமாற்றுபவர்களை சும்மா விடக்கூடாது, இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் உள்ளனர் என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் பதிவு செய்துள்ளார்.

எனவே அவர் காதலில் தோல்வி அடைந்திருக்கலாம் என்றும் அல்லது பண விசயத்தில் ஏமாந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

பிரபல நடிகை தற்கொலை முயற்சி: இயக்குனரின் லீலைகள் வெளிவந்தன..!!

12:56 AM |
பாலியல் தொல்லை கொடுத்ததாக புதுமுக இயக்குனர் மீது நடிகை அதிதி முறைப்பாடு செய்துள்ளார். நெடுநல் வாடை என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் அதிதி.

இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் செல்வ கண்ணன் இயக்குகின்றார்.

பட்டதாரி என்ற இன்னொரு படத்திலும் அதிதி நாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் செல்வ கண்ணன் மீது அதிதி, நடிகர் சங்கத்திலும், பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் விளம்பர படமொன்றில் அதிதி நடித்துக்கொண்டு இருந்தபோது செல்வ கண்ணன் அடியாட்களுடன் சென்று அவரை தாக்க முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நடிகை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவை அனைத்துக்கும் இயக்குனரின் லீலையே காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

காதல் தோல்வியால் காதலி பார்க்கும் போதே தற்கொலை செய்யும் இளைஞன்! அதிர்ச்சி வீடியோ

12:03 AM |
மேலும் வாசிக்க…

'மெட்ராஸ்' பட நடிகை தீக்குளித்து தற்கொலை..!!

12:38 AM |
வேலைக்கு செல்லாத கணவர் தொடர்ந்து தனது நடத்தையில் சந்தேகம் கொண்டு சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த துணை நடிகை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை விநோபா நகரைச் சேர்ந்தவர் விக்டர்(42). இவரது மனைவி நீலாவதி (38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி 38வது வட்ட அதிமுக துணைச் செயலாளராக உள்ள நீலாவதி, துணை நடிகையும் ஆவார். இவர் மெட்ராஸ் உள்பட பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். சினிமா மற்றும் அரசியலில் இருந்ததால் நீலாவதியின் நட்பு வட்டம் பெரிது எனக் கூறப்படுகிறது. இதனால் நீலாவதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு விக்டர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

அதோடு சரிவர வேலைக்குச் செல்லாமலும் விக்டர் இருந்துள்ளார். இதனை நீலாவதி தட்டிக் கேட்டுள்ளார். இதனாலும் அவர்களுக்குள் சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது நீலாவதியை விக்டர் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நீலாவதி சோகமான மனநிலையில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீலாவதியில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

’அவருடே ராவுகள்’ மலையாள பட தயாரிப்பாளர் காதலியும் தற்கொலை..!!

1:44 AM |
மலையாளத்தில் ‘அவருடே ராவுகள்’ என்ற படத்தை தயாரித்தவர் அஜய் கிருஷ்ணன் (யது 29). இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷானில் இயக்கி இருந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சில நாட்களாக மன உளைச்சலில் அஜய் கிருஷ்ணன்  தற்கொலை செய்து கொண்டார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணனின் காதலி,வினிதா நாயரும் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். பெங்கலூரில் பேஷன் டிசைன் படித்துள்ள வினிதா வேலை தேடிகொண்டு இருந்தார். அப்போது  அஜயுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அஜய் தற்கொலைக்கு பிறகு மன உளைச்சலில் இருந்துள்ளார் வினிதா. இந்த் நிலையில் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

மேலும் வாசிக்க…

பெண்ணின் தற்கொலையை தடுத்தார் சாய் பிரசாந்த் - பிரபல தொகுப்பாளினியின் ஆச்சரிய தகவல்..!!

10:32 PM |
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்தின் தற்கொலை சமீபத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடனம், மிமிக்ரி, நடிப்பு என பன்முக திறமை கொண்ட இவரின் இந்த முடிவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

மரணம் பற்றி பிரபல தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஃப்ரினா கூறுகையில், இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான் சீரியல் ஒன்றில் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்றுவார்.

ஆனால் அவரின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது. கடிதத்தில் கூட ஸ்மைலி போட்டிருந்த அவர் எப்படி தற்கொலைக்கு முயன்றார் என்றே புரியவில்லை, எதுவானாலும் இது முட்டாள்தனமான முடிவுதான் என்று கூறியுள்ளார்.


மேலும் வாசிக்க…

நடிகை பிரதியுஷாவின் காதலன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..!!

2:13 AM |
மும்பையை சேர்ந்த டி.வி நடிகை பிரதியுஷா(வயது24). இந்தி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த 1-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

சென்ற 3-ந் தேதி போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, ராகுலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி கொடுத்த புகாரின் பேரில் பங்கூர் போலீசார் ராகுல் சிங் மீது பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராகுல்சிங்கை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பின்னர் ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் திடீரென ஆஸ்பத்திரி குளியலறை கதவை பூட்டிக் கொண்டார். அதன்பின்னர் அவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் குளியலறை கதவை தட்டி வெளியே வரும்படி அழைத்தனர்.

அப்போது அவர் குளியலறை வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் எந்த வித விபரீத முடிவும் எடுத்துவிடாதபடிக்கு அவருக்கு வெளியே இருந்தபடியே ஆலோசனை வழங்கி சமாதானம் செய்தனர். இதன்பின்னர் அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.

பின்னர் அவருக்கு டாக்டர்கள் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கி நேற்று முன்தினம் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.
மேலும் வாசிக்க…

சீரியல் நடிகைக்காக தற்கொலை செய்துக்கொண்ட பெண்- அதிர்ச்சி தகவல்..!!

7:57 AM |
நாட்டில் எதற்கு எல்லாம் தற்கொலை செய்வது என்று தெரியாமல் போய் விட்டது. வட இந்திய சீரியலில் மிகவும் பிரபலம் பிரத்யூஷா.இவர் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார், இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகம் மற்றும் சின்னத்திரையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்த பெண் ஒருவர் இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மேலும் வாசிக்க…

தற்கொலைகளைத் தடுக்க இப்படி ஒரு ஐடியாவா? பரபரப்பு ஏற்படுத்திய நடிகை..!!

10:49 AM |
சமீப காலமாகவே நடிகர் நடிகைகளின் தற்கொலை சினிமா உலகையும், சின்னத்திரை உலகையும் சோகமாக்கியுள்ளது. சென்ற வாரத்தில் கூட டிவி நடிகை பிரதியூஷாவின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

CINTAA (cine&tv actors associations) இனி இது போன்ற இழப்புகளைத் தவிர்க்க மனநல மருத்துவர்கள் உதவிகளுடன் அலோசனைகள் கொடுக்கும் திட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் சர்ச்சை பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்படி ஒரு ஐடியாவைக் கூறியுள்ளார். மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கையில் ஒரு சீலிங் ஃபேனுடன் வந்தார். இவர் தமிழில் ’கம்பீரம்’ படத்தின் “சம்பல் காட்டுக் கொள்ளக் காரி” , ’முத்திரை’ படத்தில் ”நைட் இஸ் ஸ்டில் யங்” என இரண்டுப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் ஐடியா இதுதான்...ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள சீலிங் ஃபேன் தான் இதற்கு காரணமாம். அதை தடை செய்தால் தற்கொலைகளை தடுக்கலாம், என மிகவும் புத்திசாலித்தனமாக பேசியுள்ளார். "இந்திய பிரதமர் மோடி உடனடியாக இதில் சிறப்பு கவனம் எடுத்து ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள ஃபேன்களை தடை செய்து டேபிள் ஃபேன்களை பயன்படுத்தவும், அல்லது ஏ.சி களை பயன்படுத்தவும் வலியுறுத்த வேண்டும்".

இதனால் தான் தற்கொலைகள் நடக்கின்றன எனக் கூறியுள்ளார். "பாரத் மாதா கி ஜே" என கோஷமிடுவதை விட நாட்டில் மிக முக்கிய பிரச்னை இந்த ஃபேன்களை தடை செய்வதே என உணர்ச்சி பொங்க ராக்கி சவந்த் பேசியுள்ள நிலையில் பலருக்கும் இதை நினைத்து சிரிப்பதா இல்லை கோபமடைவதா எனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உலகத்துல இருக்கற அத்தனை புத்திசாலிகளும் நம்ம ஊர்லதான்டா இருக்காய்ங்க!
மேலும் வாசிக்க…

சாய் பிரசாந்த் தற்கொலை – பிரபலங்களின் அதிர்ச்சி பதிவுகள்..!!

2:06 AM |
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சாய் பிரசாந்த் சென்ற ஞாயிறு அன்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பல நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை கொள்ளவேண்டிய விஷயம்தான். பல நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்போதும் மீடியாக்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயம் என்பதால், எந்த நடிகரும் தன்னுடைய சொந்த பிரச்சனைகளை வெளியில் சொல்வதில்லை. அதே விஷயம் மனஇறுக்கத்தை உருவாக்கி இத்தகைய முடிவுகளை எடுக்க வைக்கிறது.

இத்தகைய நிகழ்வுகளை தடுக்க, சினிமா துறையில் இருப்பவர்களின் மன இறுக்கத்தை போக்க கவுன்சிலிங் அத்தியாவசிய ஒன்றாகிறது. பல வருடங்களாக சின்ன திரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பிரசாந்த், தன்னுடைய மனைவி அவரை விட்டு பிரிந்ததாலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. அவரின் இந்த விபரீத முடிவெடுத்த சாய் பிரசாந்திற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



மேலும் வாசிக்க…

நிரோஷாவின் தற்கொலைக்கு இது தான் காரணம்- வீடியோ இணைப்பு

12:50 AM |
சாய் பிரசாந்தை தொடர்ந்து தொகுப்பாளனி நிரோஷாவின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல தெலுங்கு நடிகர், நடிகைகள் அவருக்காக தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன் தன் காதலருடன் ஸ்கைபில்(Skype) பேசியுள்ளார். இதில் அவருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும், தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும் அவர் தன் காதலரிடம் தெரிவிக்க, உடனே காதலர் நிரோஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு இதுக்குறித்து பேசியுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் இப்படி ஒரு தவறான முடிவை நிரோஷா எடுத்துள்ளார்.




மேலும் வாசிக்க…
2015 Thediko.com