சபர்ணா, ரேகாவை தொடர்ந்து மீண்டும் ஒரு தொலைக்காட்சி நடிகர் மரணம்..!!

10:25 PM |
சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது.

மும்பை மேற்கு வழி ரயில் தடத்தில் இன்று காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் விசாரணையின் போது மின்சார ரயிலில் அடிபட்டு இறந்த அந்த முதியவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் என்பது தெரியவந்தது.

இவர் ஹிந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். 66 வயதான அவர் ஹிந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்து தெரியவந்துள்ளது.

மேலும் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா, இல்லை எதிர்ப்பாராமல் நடந்த மரணமா என விசாரணை நடந்து வருகிறது.
மேலும் வாசிக்க…

அளவுக்கு அதிகமான பணம் மாட்டிகொண்டு முழிக்கும் நடிகர்கள்..!!

10:10 PM |
அண்ணன், தம்பி நடிகர்கள் வீட்டிற்கு முன்பு ஒரு முறை ரெய்டு வந்தபோதே…ஒரு மூட்டை பணம் கைப்பற்றப்பட்டது என்று சொல்லப்பட்டது.

இப்போ…என்ன நிலைமை என்று தெரியவில்லை. ஆனால், பேஸ்தடித்து இருக்கிறார்கள். சொந்தக்காரர்களிடம் கொடுத்து மாற்றுவது என்றாலும் முடிகிற காரியமா?

புயல் காமெடி ஒரு ரூம் பூரா பொட்டி பொட்டியாய் அடுக்கி வச்சி அழகு பார்த்தார். மோடி அறிவிப்பு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. எம்புட்டு? எப்படி மாத்தறது?வச்சிட்டான்யா…ஆப்பு…கதை தான்.

அண்ணா…கணக்கில வருவதை அப்பாகிட்ட கொடுங்க. மத்ததை வீட்டுக்கு அனுப்புங்க என்னும் ஹீரோ …இப்போ தான் வெள்ளையா வாங்கறதுன்னு முடிவெடுத்தார். இதுவரை வாங்கியதை என்ன பண்ணுவார்? தூக்கம் வந்திருக்கும்? நடிகரும், கட்சித் தலைவருமானவர் வீட்டிலும், பல கோடிக்கு மூட்டைகள் வைத்துள்ளாராம். எரிப்பாரா? புதைப்பாரா? இது போல ஒவ்வொரு நடிகர்கள் வீட்டிலும் ஒவ்வொரு கதை ஓடுகிறது.
மேலும் வாசிக்க…

முக்கிய புள்ளியிடம் பணம் கேட்கச் சென்ற நடிகை: பின்னர் நடந்ததே வேறு கதை..!!

12:04 AM |
பெண்களை குறி வைத்து செய்யப்படும் பாலியல்ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டன

அதே போல் பணக்காரப் பெண்களை குறி வைத்து, அவர்களை மயக்கி..படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் ஆண்கள் பெருகி விட்டார்கள்.

இவர்களைக் காக்க களம் இறங்கி விட்டார் நயன்தாரா. முதலில் கேரளாவில் இந்த அமைப்பைத்  தொடங்குகிறார்.

அதன் பின் பெரிய நடிகர்கள், வசதி படைத்தவர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் நன்கொடை கேட்க முடிவு செய்து கேரளாவின் ஒரு பெரிய ஹீரோவிடம்  உதவி கேட்டாராம்.

எல்லா விவரமும் கேட்ட அந்த நபர், "சரி தருகிறேன் மகளே, ஆனால் உன் காதலன் எவ்வளவு தந்தார்..? " என்று கேட்க ஆடிப் போனாராம் நயன்..!

அவரும் இயக்குனர் தானே..? முதலில் அவரிடம் சில இலட்சங்கள் வாங்கிகொண்டு என்னிடம் வா..! என்று கூறி அனுப்பி விட்டாராம் அவர்
அவமானத்துடன் கேரளாவில் இருந்து புறப்பட்டாராம் நயன்..?

மேலும் வாசிக்க…

சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்துகொள்வது குறித்து பிரபல நடிகை பளீர் பேச்சு..!!

1:35 AM |
பாலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி கலந்த செய்தியாகத்தான் வருகிறது. ஒரு முன்னணி நடிகர் என்னடான்னா, ‛‛நான் நிர்வாணமாக நடித்துள்ளேன், சென்சார் போர்டு அனுமதித்தால் அதை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க எனக்கு ஆசை என்று கூறியிருக்கிறார்.

இப்போது இன்னொரு முன்னணி நடிகை ஒருவர், சக நடிகர்களுடன் நான் செக்ஸ் வைத்து கொள்வது கிடையாது என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல, நடிகர் அனில் கபூரின் வாரிசான சோனம் கபூரும், தனுஷூடன் ராஞ்சனா படத்தில் நடித்தவரும் தான்.

இதுப்பற்றி சோனம் கபூர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது. ‛‛நான் சிங்கிளாக தான் உள்ளேன். சக நடிகர்களுடன் நன்றாக பழகுவேன், ஆனால் எந்த நடிகருடன் டேட்டிங் போனது கிடையாது. எந்த ஹீரோக்களுடனும் செக்ஸ் வைத்து கொள்வது கிடையாது. அதனால் தான் ஹீரோக்களுக்கும், எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் தன் தம்பியை பற்றி சோனம் பேசும்போது, ‛‛செக்ஸ் வைத்து கொள்ளும்போது காண்டம் பயன்படுத்து என்று அறிவுரை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இப்போது இவரின் இந்த பேச்சு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் வாசிக்க…

அவங்க பணத்துக்கு அத பண்றாங்க எனக்கும் குடுங்க நானும் பண்றேன்..!!

1:21 AM |
நடிகர்களுக்கு இணையாக, நடிகையருக்கு சம்பளம் தருவதில் தவறில்லை என, நடிகை தமன்னா கூறியுள்ளார். மும்பையில், நேற்று முன்தினம் நடந்த, தேவி பட விழாவில், தமன்னா பேசியதாவது:

நடிகர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்ற, ஹிந்தி நடிகைகளின் கோரிக்கையை வரவேற்கிறேன். எங்களைவிட, கதாநாயகர்களுக்கு பல மடங்கு சம்பளம்; இந்த நிலைமை மாற வேண்டும். நடிகை யாருக்கும் அதிக சம்பளம் வேண்டும்.

நான், அதிக பணம் பெற்று, புதுமுக ஹீரோக்களுடன், ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாக கூறுகின்றனர். ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, சாதாரண விஷயம் அல்ல. நிறைய பணம் கொடுத்ததால் தான் ஆடினேன்.

இதில் என்ன தவறு; எல்லாருமே சம்பளத்துக்காக தான் வேலை செய்கின்றனர். நான் மட்டுமல்ல, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகையர் ஆடுகின்றனர். இவ்வாறு தமன்னா பாயச்சலாக கூறினார்.
மேலும் வாசிக்க…

தனுஷை விட நான் கீழ தான் - சிம்பு..!!

1:56 AM |
நடிகர் சிம்பு இன்று Periscope மூலம் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இதில் ஒரு தனுஷ் ரசிகர் , உங்களை தனுஷுடன் ஒப்பிட்டு பேசுவதை உங்க ரசிகர்களிடம் நிறுத்த சொல்லுங்க, அவர் திறமைக்கு இப்போ எங்கேயோ இருக்கிறார் என்றார். அதற்கு பதிலளித்த சிம்பு,

"தனுஷோட வளர்ச்சியில் எனக்கு சந்தோஷம் தான், நான் அவரை விட கீழ என்று நீங்கள் நினைத்தால் ஓகே, அவரை மட்டுமில்ல மற்ற நடிகர்களை விடவும் நான் கீழ தான். அதனால் என்ன பிரச்சனை இப்போ, அவருடைய உழைப்பால் இந்த உயர்வுக்கு வந்து இருக்கிறார், அதை பார்த்து என்றுமே நான் பொறாமை பட மாட்டேன்.

இப்போ எனக்கு இருக்கும் யோசனை என் ரசிகர்களை மேலும் சந்தோஷ படுத்த வேண்டும். அவ்வளவு தான் என்றார்.
மேலும் வாசிக்க…

நடிகர்கள் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளக் கூடாது..!!

1:06 AM |
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கலந்துக்கொள்ளக் கூடாது என்று பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் கோரிக்கைவிடுத்துள்ளது.

வடமாநில தொலைக்காட்சிகளில் பிரபலமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல தென் இந்தியாவில் பரவி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பு, கன்னட நடிகர்கள் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சிகள் கன்னட சினிமாவுக்கு பாதகமாக அமைவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

சின்னத்திரை நடிகர்கள் படப் பிடிப்பில் அடிக்குள் லூட்டிகளைப் பாருங்கள்! வீடியோ

10:42 PM |
மேலும் வாசிக்க…

நடிகை என்றால் பணத்துக்கு எதுவும் செய்வாரா???

1:01 AM |
கதாநாயகிகள் என்றாலே பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்ற கண்ணோட்டம் ரசிகர்களுக்கு இருக்கிறது. இது மாற வேண்டும், என்று நடிகை சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் சமந்தா, முன்பு போல அதிக படங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்க்க ஆரம்பித்துள்ளார். பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் ஒப்புக் கொள்கிறார்.

“கதாநாயகிகள் என்றாலே பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மக்கள் ஒரு தவறான கணிப்பு வைத்திருப்பதை அறிய முடிகிறது. பணத்தில் மட்டுமே அவர்களின் முழுக் கவனமும் இருக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒரு படத்துக்கு நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த கண்ணோட்டம் மாற வேண்டும். பணம் இருந்தால் எல்லா வசதிகளும் வந்து விடும். ஆனால் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது.

சினிமாவில் நடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் என்னை பொருத்தவரை நான் பணத்துக்காக மட்டும் நடிப்பதில்லை. என்னிடம் தேவையான அளவு பணம் இருக்கிறது. இதற்கு மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும், கட்டு கட்டாக பீரோவில் பணத்தை அடுக்கி வைக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு இல்லை.

இந்த பச்சை நோட்டுக்கள் மீது எனக்கு எந்த காதலும் இல்லை. நடிப்புத் தொழில் பணத்தை மட்டுமே கொடுக்காமல் திருப்தியையும் கொடுக்க வேண்டும். அதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கும். இந்த பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது” என்றுள்ளார்.
மேலும் வாசிக்க…

கோடம்பாக்கம் டூ கோட்டை : எம்.எல்.ஏ கனவில் மிதக்கும் நடிகர்கள்!

6:59 AM |
கோலிவுட்டுக்கும், கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்டாலே, சட்டசபைக்குள் செல்ல தங்களுக்கும் என்றாவது ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில்,  பிரசாரம் செய்கிறேன் என தங்களுக்கு எங்கே வெயிட்டாக கவனிப்பு கிடைக்கிறதோ, அந்த கட்சிகளுக்காக  பல நடிகர்கள், நடிகைகள் களம் இறங்கி விடுகின்றனர்.

இவ்வாறு பிரசார பீரங்கிகளாக வலம் வருபவர்கள், தங்களது அடுத்தக்கட்ட நகர்வாக, தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமையிடம் விண்ணப்பிக்க தொடங்கி விடுகின்றனர்.

அப்படித்தான் வருகிற தேர்தலில் அ.தி.மு.க-சார்பில் போட்டியிட மனுகொடுத்து காத்திருக்கின்றனர் ஏராளமான நடிகர், நடிகைகள். நடிகர் செந்தில்,  கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இந்தமுறை அவருக்கு எம்.எல்.ஏ ஆசை வந்து விட்டது. சென்னையில் அவர் குடியிருக்கும் விருகம்பாக்கம் தொகுதிக்கும், பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கும் சீட் கேட்டு விருப்ப மனு போட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கு சீட் கேட்டுள்ளார் சிங்கமுத்து. மற்ற நடிகர்களான ஜே.கே.ரித்தீஷ் - கொளத்தூர், குண்டு கல்யாணம் - சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சி.ஆர்.சரஸ்வதி - மயிலாப்பூர், விஜய் கார்த்திக் - விருகம்பாக்கம், தியாகு - தஞ்சை, சரவணன் - சேலம், மனோபாலா - ஆர்.கே.நகர், பாத்திமாபாபு -ஆயிரம்விளக்கு, ராமராஜன் - மதுரை, அஜய்ரத்னம் - அண்ணாநகர் என அவர்களுக்குச் சாதகமான இடங்களை டிக் செய்திருக்கிறார்கள்.

இவர்களைத்தவிர, பொன்னம்பலம், குயிலி, நிர்மலா பெரியசாமி, வாசுகி, ஜெயகோவிந்தன் ஆகியோரும் ஜெயலலிதாவின் நேர்காணலுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு தேர்தலில் நிற்க சீட் கிடைத்தால் தொகுதியைச் சுற்றி வருவார்கள். இல்லையென்றாலும், தமிழகத்தை சுற்றி வர ரெடியாக இருக்கிறார்கள்.

''இந்த தேர்தலிலும் அம்மாதான் ஜெயிப்பார்கள். நான், ரெண்டு தொகுதிக்கு பணம் கட்டி இருக்கேன். அம்மா மனசு வெச்சா, அம்மா பெயரைச்சொல்லிச் சொல்லியே பிரசாரம் செய்து ஜெயிப்பேன்'' என்கிறார் நடிகர் செந்தில்.

அனிதா குப்புசாமி, ''நான் மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிப்பதால் அந்த தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துள்ளேன். ஆனால், அம்மா நிற்க சொன்னா எந்தத் தொகுதியிலும் நிற்பேன்" என்றார்.

நிர்மலா பெரியசாமி, ''கருர்  தொகுதிக்கும் வேளச்சேரி தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்துள்ளேன். மீண்டும் முதல்வராக அமர்வார். அவரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்.



நடிகர் பொன்னம்பலம், ''விருகம்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்து  விருப்ப மனு கொடுத்துள்ளேன். அம்மா உத்தரவுப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்தேன். இந்த தடவையும் அம்மா பிறப்பிக்கும் எந்த உத்தரவுக்கும் கட்டுப்பட்டு நடக்க காத்திருக்கிறேன்" என்று  நம்பிக்கையோடு முடித்தார்.

சீட் கொடுப்பாரா ஜெயலலிதா?
மேலும் வாசிக்க…

சாய் பிரசாந்த் தற்கொலை – பிரபலங்களின் அதிர்ச்சி பதிவுகள்..!!

2:06 AM |
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சாய் பிரசாந்த் சென்ற ஞாயிறு அன்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பல நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை கொள்ளவேண்டிய விஷயம்தான். பல நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்போதும் மீடியாக்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயம் என்பதால், எந்த நடிகரும் தன்னுடைய சொந்த பிரச்சனைகளை வெளியில் சொல்வதில்லை. அதே விஷயம் மனஇறுக்கத்தை உருவாக்கி இத்தகைய முடிவுகளை எடுக்க வைக்கிறது.

இத்தகைய நிகழ்வுகளை தடுக்க, சினிமா துறையில் இருப்பவர்களின் மன இறுக்கத்தை போக்க கவுன்சிலிங் அத்தியாவசிய ஒன்றாகிறது. பல வருடங்களாக சின்ன திரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பிரசாந்த், தன்னுடைய மனைவி அவரை விட்டு பிரிந்ததாலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. அவரின் இந்த விபரீத முடிவெடுத்த சாய் பிரசாந்திற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



மேலும் வாசிக்க…

சாய் பிரசாந்தின் தற்கொலைக்கு சின்னத்திரை நடிகர்களின் இரங்கல்..!!

2:54 AM |
மேலும் வாசிக்க…

நடிகர்களை கிழி கிழி என கிழிக்கும் செய்தியறிக்கை..!!

10:38 PM |
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com