பெண்ணின் தற்கொலையை தடுத்தார் சாய் பிரசாந்த் - பிரபல தொகுப்பாளினியின் ஆச்சரிய தகவல்..!!

10:32 PM |
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்தின் தற்கொலை சமீபத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடனம், மிமிக்ரி, நடிப்பு என பன்முக திறமை கொண்ட இவரின் இந்த முடிவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

மரணம் பற்றி பிரபல தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஃப்ரினா கூறுகையில், இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான் சீரியல் ஒன்றில் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்றுவார்.

ஆனால் அவரின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது. கடிதத்தில் கூட ஸ்மைலி போட்டிருந்த அவர் எப்படி தற்கொலைக்கு முயன்றார் என்றே புரியவில்லை, எதுவானாலும் இது முட்டாள்தனமான முடிவுதான் என்று கூறியுள்ளார்.


மேலும் வாசிக்க…

சன் டி.வி.யை சாடும் ராதிகா..!!

7:19 PM |
மன அழுத்தம் காரணமாக , சமீபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்.

அவரது தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாய் பிரசாந்த் தற்கொலையை முன்னிறுத்தி சன் டி.வி உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களையும் கடுமையாக சாடி இருக்கிறார் ராதிகா சரத்குமார்.

“சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது.

ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகை தன்னுடைய நாடகங்களில் நடிக்கிறார் என்றால், மற்ற தொலைக்காட்சியில் நடிக்கக் கூடாது, மற்ற சேனல் நடத்தும் ஷோவுக்கு போகக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய வேலை வாய்ப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகிறது.

இந்த மாதிரி தொலைக்காட்சி நிறுவனங்கள் கையெழுத்து வாங்கி கொள்வதால் நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சின்னத்திரை என்பது ரொம்ப சின்ன இடம் என்பதால் மிகவும் பொருளாதார சிக்கல் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படுகிறது.

நானே நிறைய இடங்களில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ மற்ற நிறுவனங்களின் சீரியல்களில் நடிக்கப் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லியிருக்கிறேன். அதை தடுக்கக் கூடாது என்று நான் நிறைய தடவை சண்டையிட்டும் இருக்கிறேன். திறமையுள்ள நடிகன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

சமுத்திரக்கனிதான் என்னுடைய ‘அரசி’ சீரியலில் சாயை அறிமுகப்படுத்தினார். என்னைப் பார்க்க நிறைய முறை அலுவலகத்திற்கு வருவான். தற்கொலை செய்தவற்கு முன் அவன் எழுதிய கடிதத்தில் எனக்கு நன்றி சொல்லியிருப்பதாக சொன்னார்கள்.

அதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு தொலைக்காட்சியின் சீரியலில் நடித்தால் மற்றொரு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்க நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்”

சாய் பிரசாந்தின் மரணமும், அது தொடர்பான ராதிகா சரத்குமார் சொல்லும் உண்மையும் சேனல்களின் சிறையிலிருந்து சின்னத்திரை கலைஞர்களை விடுவிக்குமா?
மேலும் வாசிக்க…

சாய் பிரசாந்த் தற்கொலை – பிரபலங்களின் அதிர்ச்சி பதிவுகள்..!!

2:06 AM |
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சாய் பிரசாந்த் சென்ற ஞாயிறு அன்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பல நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை கொள்ளவேண்டிய விஷயம்தான். பல நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்போதும் மீடியாக்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் விஷயம் என்பதால், எந்த நடிகரும் தன்னுடைய சொந்த பிரச்சனைகளை வெளியில் சொல்வதில்லை. அதே விஷயம் மனஇறுக்கத்தை உருவாக்கி இத்தகைய முடிவுகளை எடுக்க வைக்கிறது.

இத்தகைய நிகழ்வுகளை தடுக்க, சினிமா துறையில் இருப்பவர்களின் மன இறுக்கத்தை போக்க கவுன்சிலிங் அத்தியாவசிய ஒன்றாகிறது. பல வருடங்களாக சின்ன திரை தொடர்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பிரசாந்த், தன்னுடைய மனைவி அவரை விட்டு பிரிந்ததாலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. அவரின் இந்த விபரீத முடிவெடுத்த சாய் பிரசாந்திற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



மேலும் வாசிக்க…

"என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்..!!

12:24 AM |
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய்பிரசாந்த். நேரம், வடகறி என முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட சாய் பிரசாந்த் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,

எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்துக்கு

“உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன். பொஸஸிவ் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப் படாதே எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது. எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்.

எனது காதல் எப்போது உண்மையானது. நான் செல்வதால் தயவு செய்து அழாதே ரக்‌ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர்கள் கண்டிப்பாக உன்னையும் உனதுகுடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம்.
என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்‌ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா . மிஸ் யூ ரக்‌ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார்.


ரக்‌ஷிதாவின் புரிதலுக்கு,

ஒரு கண்டீஷன் யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது. நான் மட்டுமே எனக்கு பிரச்னை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும். புரிந்துகொள்.
ராடான் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லாட் அம்மா, ரக்‌ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.

லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார்.

“லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த் ..உம்மா”
டேக் கேர் எவ்ரிபடி உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன்.
இவ்வாறாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் வாசிக்க…

பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

9:53 PM |
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மனவுலைச்சலே இந்த முடிக்கு காரணம் என அவர் கடிதமும் எழுதி வைத்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். இவர், முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ளனர். சாய்பிரசாந்த், சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாய்பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாய்பிரசாந்த் வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுலைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென எழுதி வைத்துள்ளார். அவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய சாய் பிரசாந்த், நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com