விஜய்யின் மகளும் தெறி படத்தில் நடித்துள்ளாராம் அதிர்ச்சித்தகவல் – வீடியோ இணைப்பு
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில், சமந்தா விஜய்க்கு மனைவியாகவும், இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதுபோலவும் படத்தில் காட்சிகள் இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இவர்களது குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நானிகா நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் விஜய்யின் மகளான திவ்யாவும் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, விஜய்யின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். தற்போது இந்த படத்தின் மூலம் விஜய்யின் மகளும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.
‘தெறி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு அமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.