விஜய் சேதுபதி பெண் வேடம் லீக்..!!

1:28 AM |
விஜய் சேதுபதி அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சமந்தா ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது. பஹத் பாசில், மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. பெண் வேடத்தில் விஜய் சேதுபதி பங்கேற்று நடித்த காட்சி லீக் ஆனது. அவிழ்ந்த கூந்தலுடன் சேலை அணிந்து அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதுவரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த கெட்டப்பில் நடிப்பது இணைய தளத்தில் வைரலானது. பெண் வேடமா அல்லது திருநங்கை வேடத்தில் நடிக்கிறாரா என்பதுபற்றி தகவல் எதுவும் இல்லை. சமீபத்தில் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் அணிந்து நடித்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் பெண் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

நிராகரிக்கபட்ட சூர்யா படம் அதிர்ச்சியில் திரையுலகம்..!!

10:31 PM |
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். பல ஹிட் படங்கள் கொடுத்தவரும் அவரின் படம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று கெட்டப்பில் நடித்து கடந்த மே மாதம் வெளியான படம் 24. இதில் சமந்தா, நித்யா மேனன் என முன்னணி நடிகைகள் நடிக்க டைம் ட்ராவல் வாட்சை வைத்து வித்யாசமான கதையுடன் எடுக்கப்பட்டது.

படம் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கபட்டாலும், படம் தற்போது தேர்வாக வில்லை என்பதே தற்போதைய தகவல்.

இந்தியாவின் கோவாவில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் பல மொழிகளை சேர்ந்த படங்கள் இடம் பெறுவது வழக்கம்.

ஆனால் இதில் சூர்யாவின் 24 படம் நிறைய அயல்நாட்டு விஷயங்களோடு இருப்பதால் இதை கமிட்டி தேர்ந்தெடுக்கவில்லை.

மேலும் இதில் மாதவன், ரித்திகாசிங் நடித்த இறுதிச்சுற்று படம் தேர்வாகியுள்ளது.
மேலும் வாசிக்க…

பூனை மாதிரி பின்னாடியே போயி சட்டுன்னு கட்டிப் பிடிக்கும் ஹீரோயின்..!!

12:28 AM |
ஹீரோயின்னா…சமந்தா தான் ஹீரோயின்..பேஷ் பேஷ்..ரொம்ப நன்னா இருக்கும்னு சொல்ற அளவுக்கு ரொம்ப சமத்து..! காரணம் நிறைய  இருக்குங்க..!  குறிப்பா இளைய தளபதி..விஜய்னா புள்ள உசுரையே விட்டு தொலைச்சிடும்..!

இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்குது..சூட்டிங் அன்னிக்கு காலைல மேக்கப் பண்ணி முடிச்சிட்டு கேரவன்ல இருந்து இறங்கி ஸ்பாட்டுக்கு வரும்..! ஹீரோ தூரமா உட்காந்திருப்பார். பூனை மாதிரி பின்னாடியே போயி சட்டுன்னு கட்டிப் பிடிச்சுக்கும்..! ஹீரோவுக்கு புல்லரிச்சுப் போயிடும்..!

ஒரு ஹீரோ ஒரே டேக்குல ஒரு வசனம் பேசி நடிசுட்டா கைதட்டிகிட்டே ஓடிப்போயி சூப்பர் விஜய் சார்னு கட்டிப் பிடிச்சு கன்னத்துல அன்பா முத்தம் கொடுக்கும்..! சூட்டிங் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும்..! நான் நல்லபடியா ஹோட்டலுக்கு வந்துட்டேன் நீங்க பத்திரமா போயாச்சான்னு ஒரு கேள்வி கேட்கும் பாருங்க..உசுரையே குடுத்துடலாம்னு தோணும்..!!
மேலும் வாசிக்க…

Theri unseen video Theri Bloopers..!!

12:30 AM |
மேலும் வாசிக்க…

நயன்தாரா கல்யாணம் எப்போது என்று வெளியான தகவல்..!!

11:58 PM |
நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை. இந்த வருடம் அவர் நடித்த நிறைய படங்கள் ஹிட்டானது.

கூடவே காதல் குறித்த செய்திகளும் ரசிகர்கள் மனதை ஹிட்டாக்கியது. சிம்புவுடன் காதல் பின் வம்பாகி பிரபு தேவாவுடன் காதல் என செய்திகள் பறந்தது.

பின் விலகிப்போன இவர் நானும் ரௌடி படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்று சொல்லப்பட்டு செய்திகள் வந்தன.

ஆனாலும் எதுவும் சொல்லாமல் இருக்கும் இவர்களால் மௌனம் சம்மதம் என ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவனையும் அவரது அம்மாவையும் வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்த நயன்தாரா இந்த முறையாவது காதல் வெற்றி பெறவேண்டும் என நினைக்கிறாராம்.

விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு அவரை பிடித்து வீட்டதனால் அடுத்தவருடம் திருமணம் நடக்கும் என்று கிசுகிசுக்கப்படுறது. நயன்தாரா தற்போது 3 கோடி வரை சம்பளம் வாங்குவதனால் படத்தில் தொடந்து நடிப்பாரா என பேசப்படுகிறது.

ஏற்கனவே சமந்தா திருமணத்திற்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது அனுஷ்காவிற்கு விரைவில் பிரபல தொழிலதிபரோடு திருமணம் செய்வதாக வந்த செய்தியை தொடர்ந்து தற்போது நயன்தாரா பெயரும் சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் போட்ட சமந்தா- வைரலாகும் வீடியோ

11:51 PM |
சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.

அதேபோல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகி விட்டார். இவர் தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா இரவு நேரத்தில் ஒரு பார்ட்டியில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய ஒரு வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் வாசிக்க…

கூட்டத்தில் சிக்கிய நடிகை... காப்பாற்றிய சேலம் காவல்துறை..!!

11:19 PM |
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய நகைக் கடை திறப்பு விழாவுக்காக நடிகை சமந்தா வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ரசிகர் கூட்டம் அலைமோதியது. இதனால் சேலம் டூ பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவர் இன்று காலை 10.30 மணிக்கு சேலம் புதிய பெருந்து நிலையம் அருகே உள்ள புதிய நகைக் கடை திறப்பு விழாவுக்காக வந்திருந்தார். அவர் வருவதை அறிந்து கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்கு இருந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

11:00 மணிக்கு கடைக்கு வந்தவர். காரை விட்டு கீழே இறங்கியபோது சமந்தா! சமந்தா!! என்று கத்திய ரசிகர் கூட்டம் சமந்தாவை சூழ்ந்து கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமந்தா மீண்டும் காருக்குள்லேயே சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் காவல்துறையினர் ரசிகர்களை விலக்கி விட்ட பிறகு காரை விட்டு வெளியே வந்த சமந்தா, கடைக்குள் சென்று குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

சமந்தாவை பார்க்க கூடிய ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் பலரும் வியப்பு அடைந்தார்கள்.
மேலும் வாசிக்க…

என்னுடைய அந்த விஷயம் கூட என் காதலனுக்கு தெரியும்- பிரபல நடிகை..!!

10:50 PM |
சமந்தா, நாக சைத்தன்யா ஜோடி தான் இப்போது ஹாட் ஜோடீஸ். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருக்கின்றனர்.

இந்நிலையில் சமந்தா என்னுடைய கடந்த கால வாழ்க்கை கூட எனது காதலனுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, நான் ஏன் மறைக்கவேண்டும், நாக சைத்தன்யாவுக்கு எல்லாம் தெரியும். என்னுடைய முந்தைய காதல் வாழ்க்கை என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. நாக சைத்தன்யாவுக்கும் இதுபோன்ற ஒரு காதல் முன்பு இருந்ததால் என் மனது அவருக்கு நன்றாகவே புரியும் என்கிறார் சமந்தா.
மேலும் வாசிக்க…

விஷால் ஜோடியாகும் சமந்தா – புது கூட்டணி..!!

2:13 AM |
மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. மேலும் தீபாவளியில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இதைத்தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு இரும்பு திரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அப்பா, மகன் இருவரையும் விட்டுவைக்காத நடிகைகள்..!!

1:12 AM |
சினிமா என்று வந்துவிட்டால் அப்பா, மகன், இவர் வயதானவர் என்பதெல்லாம் பார்க்க முடியாது.

சினிமாவில் நாயகி ஒரு படம் இளம் நடிகருடன் நடித்திருப்பார். பின் இன்னொரு படத்தில் அந்த நடிகரின் அப்பாவுடனேயும் அந்த நாயகி நடித்திருப்பார். இதுபோன்ற விஷயங்கள் சினிமாவில் சாதாரண விஷயம்.
அப்படி அப்பா, மகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளின் விவரத்தை பார்ப்போம்.

சமந்தா
தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து நடித்த சமந்தா, பின் சில ஆண்டுகளில் அவரது அண்ணன் மகன் அல்லு அர்ஜுனுடன் சண் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் நடித்திருப்பார்.

இலியானா
பவன் கல்யாணுடன் ஜல்ஸா படத்தில் நடித்த இவர் 4 ஆண்டுகள் கழித்து அல்லு அர்ஜுனுடன் ஜுலாயி படத்தில் நடித்தார்.

த்ரிஷா
2012 ல் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக தம்மு படத்தில் நடித்தவர், போன வருடம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக லயனில் நடித்தார்.

ஸ்ரேயா சரண்
பாலகிருஷ்ணாவுடன் இரண்டு படங்கள் நடித்த ஸ்ரேயா, இவரது சகோதரர் மகன் ஜுனியர் என்.டி.ஆருடனும் ஒரு படம் நடித்திருக்கிறார்.

காஜல் அகர்வால்
ஒரே ஆண்டில் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. ராம்சரணுடன் நடித்த இவர் தற்போது அவரது அப்பா சிரஞ்சீவியுடனும் கத்தி ரீமேக்கில் ஜோடி சேர்கிறார்.

நயன்தாரா
வெங்கடேஷுடன் லெக்ஷமி என்ற படத்தில் நடித்த நயன்தாரா இவரது சகோதரர் மகன் ராணாவுடனும் சேர்ந்து ஒரு படம் நடித்துள்ளார்.

தமன்னா
ராம்சரணுடன் ஒரு படம் நடித்த இவர் அவருடைய சித்தப்பா பவன் கல்யாணுடனும் ஒரு படம் நடித்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி
நாகர்ஜுனா குடும்பத்தில் அப்பா, மகனுடன் நடித்த இவர் வெங்கடேஷ், ராணாவுடனும் படங்கள் நடித்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசன்
பவன் கல்யாணுடன் நடித்திருந்த இவர் அல்லு அர்ஜுன், ராம் சரண் இருவருடனும் நடித்திருக்கிறார்.

ஸ்ரீதேவி
அப்பா, மகனுடன் படங்களில் நடிக்கும் டிரெண்டை உருவாக்கியது ஸ்ரீதேவி தான். நாகர்ஜுனாவின் அப்பாவுடன் நடித்த இவர் நாகர்ஜுனாவுடனும் ஒரு படம் நடித்திருக்கிறார்.






மேலும் வாசிக்க…

நடிகை சமந்தா இந்து மதத்துக்கு மாறினாரா??

2:33 AM |
சமந்தாவுக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். இந்த வருடம் இறுதியில் நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டு அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாக சைதன்யா இந்து மதத்தையும், சமந்தா கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள். எனவே இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 தடவை திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. சமந்தா சென்னையை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறையிலான திருமணம் சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சமந்தா தற்போது திடீரென்று இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அவர் மதம் மாறுவது போன்ற படங்கள் வெளி வந்துள்ளன. புரோகிதர்கள் முன்னிலையில் விசேஷ சடங்குகள் நடத்தப்பட்டு அவர் மதம் மாறியதாக கூறப்படுகிறது. சடங்கு முடிந்ததும் சமந்தா நெற்றியில் குங்கும பொட்டு வைத்துக்கொண்டார். சடங்கு நிகழ்ச்சியில் நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஐதராபாத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. மதம் மாறியதன் மூலம் இந்து முறைப்படி மட்டுமே திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.

நாக சைதன்யா குடும்பத்தினரின் வற்புறுத்தல் பேரிலேயே அவர் மதம் மாறி இருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா நடித்து இந்த வருடம் தெறி, 24 ஆகிய படங்கள் வெளிவந்தன. தெலுங்கிலும் மூன்று படங்கள் வெளியானது. தற்போது புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்துக்காக படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.



மேலும் வாசிக்க…

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் - சமந்தா பேட்டி..!!

10:53 PM |
நாக சைதன்யா - சமந்தா திருமணம் விரைவில் நடைபெறும் என்று நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு கணவர் குடும்பத்தின் கௌரவம் பாதிக்காத படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் எப்போது?

ஒருவரை காதலிக்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். திருமண தேதி முடிவானதும் நானே அறிவிப்பேன்
.
திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவீர்களா?

நிறைய படங்களில் நடித்ததால் இப்போது ஓய்வு தேவைப்பட்டது. அதனால் நடிப்பதை கொஞ்சம் குறைத்திருக்கிறேன். அந்த நேரத்திலும் சமையல் கற்பதில்தான் பொழுதை செலவளித்தேன்.

கேள்விக்கு பதில் சொல்லவில்லை... திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?

திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விட்டு விலகமாட்டேன். நான் வாழப்போகிற குடும்பத்தின் கௌரவம் பாதிக்காத வகையில், கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

சினிமாவில் எதிர்கால திட்டம்?

சினிமாவில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒருவரின் தலையெழுத்து மாறுகிறது. பணம், புகழ் எதுவும் இங்கு நிலைக்காது. எனவே எந்த எதிர்கால திட்டமும் எனக்கு இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருக்கிறது.

பிரதியூஷாவை ஆரம்பிக்க என்ன காரணம்?

உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹாஸ்பிடலில் இருந்த போது வாழ்க்கையை குறித்து தீவிரமாக யோசித்தேன். குழந்தைகளுக்கு உதவ பிரதியூஷா என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இரண்டு பஸ்களில் மாறித்தான் கல்லூரிக்கு போவேன். வருமானம் இல்லாத அந்த காலத்தில் கூட எனது அம்மா கொஞ்சம் பணத்தை ஒதுக்கி ஏழைகளுக்கு சின்ன உதவிகள் செய்வார். இப்போது என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. எனவே அதன்மூலம் மக்களுக்கு உதவுகிறேன்.

நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கிறதா?

எல்லா நடிகைகளுக்கும் முன்னணி கதாநாயகர்களுடனும், பெரிய இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு இந்த இரண்டுமே நடந்து இருக்கிறது. எனவே நிறைவேறாத ஆசை எதுவும் இல்லை.
மேலும் வாசிக்க…

உள்ளாடை தெரியும்படியான மேலாடை அணிந்து கேவலமாக வந்த நடிகை சமந்தா..!!

2:07 AM |
சமீபத்தில் நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் தென்பட்டார். அப்போது அவர் ஃபுல் மேக்கப்பில், வீட்டினுள் அணிய வேண்டிய உடையை அணிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் அணிந்து வந்த உடையைப் பார்த்தால், நீங்களே வாயில் கை வைப்பீர்கள்.

ஏனெனில் சமந்தா தான் அணிந்த உள்ளாடை நன்கு வெளியே தெரியும்படியான, கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்து, கருப்பு நிற டெனிம் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற ஷீர் உடை 

இது தான் மும்பை விமான நிலையத்திற்கு நடிகை சமந்தா அணிந்து வந்த வெள்ளை நிற உள்ளாடை தெரியும்படியான கருப்பு நிற ஷீர் உடை.

ஓவர் மேக்கப் 

சமந்தா இந்த உடைக்கு சற்று அதிகமாக லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்.

சில்வர் செயின் கொண்ட ஹேண்ட்பேக் 

சமந்தா இந்த உடைக்கு ஏற்றவாறு சில்வர் செயின் கொண்ட அழகான கருப்பு நிற ஹேண்ட்பேக் வைத்திருந்தார்.








மேலும் வாசிக்க…

ஆண்களின் கனவுக்கன்னி சமந்தா நீச்சலுடையில்..!!

12:57 AM |
மேலும் வாசிக்க…

இணையதளங்களில் பரவும் கவர்ச்சிப் படம்: நடிகை சமந்தா அதிர்ச்சி..!!

12:58 AM |
நடிகை சமந்தாவின் கவர்ச்சிப் படம் இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

திருமணம்
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. செப்டம்பர் 23-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

சமந்தா, நாக சைதன்யா இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் வீடியோ மற்றும் அவர்கள் ஜோடியாக வெளியே சென்று வரும் படங்கள் இணையதளங்களில் வெளிவந்து ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமந்தாவின் கவர்ச்சிப் படங்களும் இணையதளங்களில் பரவி அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா சினிமாவில் அறிமுகமான புதிதில் பிரபலமில்லாத சிறிய நடிகர்களுடன் நடித்தார்.
காதல் மற்றும் படுக்கை அறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்து இருந்தார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று ‘மாஸ்கோவின் காவேரி.

கவர்ச்சிப் படங்கள்
இதில் கதாநாயகனாக ராகுல் ரவீந்திரன் நடித்து இருந்தார். இந்த படம் 2010-ல் வெளிவந்து தோல்வி அடைந்தது. அந்த படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்த காட்சிகளை தற்போது இணையதளங்களில் யாரோ வெளியிட்டு அவை வேகமாக பரவி வருகின்றன.

அவற்றை ரசிகர்கள் பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். அத்துடன் சமந்தாவின் தற்போதைய மார்க்கெட் உயர்வு நிலவரத்தை கருத்தில் கொண்டு தோல்வி அடைந்த அந்த படத்தை தூசி தட்டி மீண்டும் மறு வெளியீடு செய்து காசு பார்க்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

இதுவும் சமந்தாவை வருத்தப்படுத்தி உள்ளது. அதனை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

மேலும் வாசிக்க…

ஆகஸ்டில் சமந்தாவின் திருமண அறிவிப்பு..!!

3:47 AM |
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்படுகிறது.

இதுவரை இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, தற்போது இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சமந்தா – நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பரில் நடைபெறும் எனவும் இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் வாசிக்க…

திருமணத்தால் உச்சக்கட்ட கோபத்தில் சமந்தா..!!

10:45 PM |
சமந்தா நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சமந்தா தற்போது ஏற்கனவே கமிட் ஆன படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறாராம்.

வேறு எந்த படங்களிலும் யாரும் இவரை கமிட் செய்வது இல்லையாம், வடசென்னை படத்திலிருந்தும் இவர் நீக்கப்பட்டுவிட்டார்,
ஆனால், அதுக்கூட அவருக்கு கவலையில்லை.

பலரும் இவரை போனில் தொடர்பு கொண்டு எப்போது திருமணம்? எப்போது திருமணம்? என கேட்பது சமந்தாவிற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
மேலும் வாசிக்க…

மதுரை வந்த சமந்தாவிடம் ரசிகர்கள் செய்த அசிங்கம் கதறி அழுத சமந்தா..!!

10:59 PM |
மேலும் வாசிக்க…

மதுரையில் நடிகை சமந்தாவின் காரை குத்திக் கிழித்த ரசிகர்கள்... போலீஸ் தடியடி..!!

12:10 AM |
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி நடந்தது. சில ரசிகர்கள் சமந்த வந்த காரின் டயரை குத்திக் கிழித்தனர். நேற்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா.

சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் ஏராளமாக அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் அதிக அளவில் மக்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதில் மேடை தகர்ந்தது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த உடனே சமந்தா திரும்ப முயன்றார். ஆனால் அவர் திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சமந்தா வந்த சொகுசு காரின் டயரைக் குத்திக்கிழித்து பஞ்சராக்கினர் சிலர்.

ரசிகர்களின் முற்றுகை தாங்காமல் ஒலி பெருக்கி கருவிகள் சரிந்தன. பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு மாடிக்கு கொண்டு சென்ற நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். பின் மாற்றுக் காரில் சமந்தா அனுப்பி வைக்கப்பட்டார்.




மேலும் வாசிக்க…

நடிகை சமந்தாவின் காதலர் நடிகர் நாகசைதன்யாவா???

12:28 AM |
சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர், இளம் கதாநாயகனை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சித்தார்த்துடன் சமந்தா இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. தற்போது சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்ததுடன் சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில்தான் திருமண அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். காதலன் யார் என்ற விவரத்தை திருமண தேதியை தெரிவிக்கும்போது வெளியிடுவேன் என்றும் சமந்தா கூறினார். இதை தொடர்ந்து அவர் காதலிப்பவர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. பேஸ்புக், டுவிட்டரில் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் யூகங்களாக பரவியது.

சமந்தா காதலிக்கும் நடிகர் நாகசைதன்யா என்று தெலுங்கு பட உலகினர் தற்போது உறுதிபடுத்தி உள்ளனர். நாகசைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் வெற்றிகரமாக ஓடிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் தெலுங்கில் எடுத்த போது அதில் நாகசைதன்யாவும் சமந்தாவும் ஜோடியாக நடித்தனர்.

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். நட்சத்திர ஓட்டல்களில் ஜோடியாக விருந்து சாப்பிட்டார்கள். திருமண தகவலை சமந்தா வெளியிட்டதும் நாகசைதன்யாவுக்கு டுவிட்டரில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com