அஜித்துக்கு ‘எஸ்’, விஜய்க்கு ‘நோ’… சந்தானத்தின் புது பாலிஸி..!!

4:03 AM |
‘இயக்குநர் எம்.ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின், சிம்பு இவங்க மூணு பேரைத்தவிர வேற யாரு கூப்பிட்டாலும் காமெடியனா நடிக்க மாட்டேன். இனிமே, ஒன்லி ஹீரோ தான்’ என சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாகச் சொன்னார் சந்தானம்.

ஆனால், அவர்கள் கூப்பிட்ட போதும் கூட, ‘நான் இப்போ ரெண்டு படங்கள்ல பிஸி, ஸாரி பிரதர்’ என டேக்கா கொடுத்தார். இந்தநிலையில், ‘தெறி’ படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்க சந்தானத்திடம் கேட்டாராம் அட்லி. ஆனால், ஒரே வார்த்தையாக ‘நோ’ சொல்லிவிட்டாராம் சந்தானம்.

இத்தனைக்கும் தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி’யில் சந்தானத்துக்கு நல்ல ரோல் தான் கொடுத்திருந்தார் அட்லி. இருந்தாலும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது என சந்தானம் சொல்ல, அவருக்குப் பதிலாக மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்தனர்.

தற்போது, ‘சிறுத்தை’ சிவா இயக்க இருக்கும் அஜித்தின் அடுத்த படத்தில் காமெடியனாக நடிக்கிறார் சந்தானம் என்கிறார்கள். அஜித்தே நேரடியாகக் கேட்டதால், கொள்கையைத் தூக்கிக் கொல்லையில் போட்டுவிட்டு, வாசக்கதவை அகலமாகத் திறந்து விட்டாராம். இது விஜய் ரசிகர்களுக்குத் தெரிஞ்சா என்னாகுமோ?
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் வெற்றியை பற்றி மனம் திறந்து பேசிய அட்லி..!!

2:54 AM |
மேலும் வாசிக்க…

விஜய் ட்வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை! - மறுக்கிறார் அமீர்..!!

2:50 AM |
தெறி படத்தால் நஷ்டமடைந்தேன் என்று இயக்குநர் அமீர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் என்று பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அமீர் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்திற்கான மதுரை பகுதி விநியோக உரிமையை இயக்குநர் அமீர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அமீரின் ட்விட்டரில், “ தெறியின் மதுரை பகுதி விநியோக உரிமையை வாங்கினேன். ஆனால் தெறி படத்தால், 50% அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கிறேன்” என்று இயக்குனர் அமீர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.


அந்த ட்விட்டர் பதிவிற்கு பதில் கடிதம் ஒன்றை அமீர் வெளியிட்டுள்ளார். அதில்,

விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன்.

எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கம் நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன். என்னுடைய பெயரில் இருக்கும் முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெர்வித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

தெறி தோல்வி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு விலகியிருப்பேன் சமந்தா..!!

1:34 AM |
கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்-அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியதால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான சமந்தா, இந்த படத்தின் வெற்றியால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'தெறி' படத்தின் ரிலீஸ் தினத்தில் இந்த படத்தின் ரிசல்ட் எப்படி இருக்குமோ என்று தான் பதட்டத்துடன் இருந்ததாகவும், முதல்காட்சி முடிந்தபின்னர் சோஷியல் மீடியாவில் இந்த படம் குறித்து பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தபின்னர்தான் தான் நிம்மதி அடைந்ததாகவும் கூறினார்.

மேலும் ஒருவேளை 'தெறி' படம் தோல்வி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு விலகுவது குறித்து தான் ஆலோசிக்க இருந்ததாகவும், ஆனால் நல்லவேளையாக அதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் முந்தைய படங்களான '10 எண்றதுக்குள்ள', தங்கமகன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

தெறி படத்தின் பிழைகள்: ஆனால் ஒரு பிளான் போட்டு தான் முன்னேறுகிறார்கள் போல தெரிகிறது..!!

11:45 PM |
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லலாம். தமிழ் நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக , வலம் வர அத்திவாரம் இடப்படும் அதே நேரம். அரசியலில் விஜய் குதிக்க அதுக்கேற்ற ஆயத்தங்களும் இந்த படம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்று கூறினால் அது மிகையாகாது.

வழமையாக மாஸ் ஹீரோ என்றாலே, ஏதாவது ஆக்ஷன் இருக்கும் என்று பலர் எதிர்பார்பார்கள். ஆனால் அரம்பத்திலேயே சொதப்பி விட்டார் இந்த இட்லி, சாரி சாரி "அட்லி"  சின்னப் பிள்ளை ஒன்றை மோட்டார் சைக்கிளில் வைத்து வேகமாக ஓடியது மட்டுமல்லாது. பல ஆபத்துகளை விலைக்கு வாங்கப் பார்க்கிறார் விஜய். அட ஏன் அவர் சின்ன வயது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இவ்வளவு வேகமாகச் செல்கிறார் என்று நீங்கள் கேட்டால். சிரிப்பு தான் வரும். ஏன் என்றால், அந்த சின்னப் பிள்ளை மீது ஒரு காரில் வந்தவர்கள் றோட்டில் இருந்த நீரை அடித்து விட்டார்கள் அவ்வளவு தான். இதற்காக அந்தக் காரை ஒரு 10 நிமிடமாக துரத்துகிறார் விஜய்.

இவ்வாறு ஆரம்பமாகும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கமேஷல் மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் பல திட்டங்கள் தீட்டப்பட்ட படமாக அமைந்துள்ளது. நம்பர் ஒன்... சிறு பிள்ளைகளை கவரும் விதமாக படத்தை எடுத்து , ரஜனி போல ஒரு சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க முதல் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மா சென்டிமென்டை வைத்து(ராதிகா) வயதான பெண்கள் பக்கத்தை கவர. தங்கச்சி சென்டிமென்டிமென்டை வைத்து நடுத்தர வயதுப் பெண்களை கவரவும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, மனைவி மாரைக் கவரவும் ஒரு சென்டிமென்ட் என்று பல சென்டிமெட்டுக்கள்.

படத்தில் டிவிஸ்ட் எதுவும் இல்லை. 1990 களில் பாட்ஷா படம் வந்த காலத்தில் இருந்து நாம் பார்த்து பழகிய கதைகள் தான். ஒரு ஹீரோ சாதாரண ஆளாக இருப்பார். ஆனால் திடீர் என்று பார்த்தால் அவர் பிளாஷ்பாக். அதில் அவர் பெரும் ஹீரோவாக இருப்பார். அது தான் தெறி படத்தின் கதை. ஒரு  கேரள கிராமத்தில் வசித்து வரும் விஜய். முன்னர் ஒரு அதிரடி போலிஸ்காரனாக இருந்தாராம். அவர் ஒரு அமைச்சரின் மகனை கொலை செய்ய. அந்த தமிழ் நாட்டு அமைச்சர் விஜயின் அம்மா மற்றும் மனைவியைக் கொலை செய்ய. கதை வழமைபோல தொடர்கிறது. கத்தி படத்தில் கூட முருகதாஸ் ஒரு வித்தியாசமான கான்செப்டை கையில் எடுத்து, உழவர்களின் நிலை குறித்து மக்களுக்கு தெளிவு படுத்தினார். ஆனால் இந்த அட்லியின் தெறி படத்தில் எதுவுமே இல்லை.

இந்த படத்தை வெற்றிப் படம் என்றும். வசூலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஊடகங்கள் கூறலாம். ஆனால் உண்மையில் கதை என்று எதுவுமே இல்லை. ஆனால் பாடல் எடுக்கப்பட்ட லொக்கேஷன். படமாக்கப்பட்ட முறை , கேமரா மென், எல்லாமே சூப்பார். இயக்கம் கூட சூப்பார். மீனாவின் மகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் என்றாலும் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார். அதனை பாராட்டாமல் இருக்கவே முடியாது. மொத்தத்தில் அட்லி ஒரு சொதப்பல் லீ....
மேலும் வாசிக்க…

’’சிக்கன் சாப்பிட்டேன்... விஜய்கிட்ட சிக்கிட்டேன்!’’ - ‘தெறி’ பேபி சமந்தா..!!

11:33 PM |
தெறி ஹீரோயின். விஜய்யின் செல்ஃபி பேபி, சமந்தா எப்போதுமே அழகுதான். அவரை பார்த்ததுமே 'ரொம்ப அழகா இருக்கீங்களே.... என்ன சீக்ரெட்?" என கேட்டு கேள்வியை ஆரம்பித்தால்... வெட்கப்பட்டு சிரிக்கிறார்.

"உண்மையாகவே அழகா இருக்கேன்ல. என் மேக்கப் மேனும், சினிமால என் சினிமாட்டோகிராபரும் தாங்க என் அழகு சீக்ரெட்டுக்கு காரணம். அவங்க தான் என்னை அழகா காட்டுறாங்க. அவங்களுக்கு தான் இந்த கிரெடிட்ஸ் எல்லாம்போகும்." என சிரிக்கிறார்.

'தெறி'யில விஜய்க்கு நான் மனைவி.  ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது. அவ்வளவு லவ்லியாக நடிச்சு இருக்கோம். ஒவ்வொரு சீனும் ரொமான்ஸ்ல சும்மா தெறிக்க விட்டு இருக்கோம். எனக்கே என்னை ஸ்கிரீன்ல பார்க்கும்போது அவ்வளவு பிடிக்குது!"

 'தெறி' படத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய் கூட நடந்த கலகல சம்பவங்கள் நிறைய இருக்குமே?"

 "நைட்ல ஷூட்டிங் நடக்கும்போது விஜய் சாப்பிடவே மாட்டார். எல்லாமே பக்காவாக செட் ஆகி முடிஞ்சதுக்கு பிறகுதான் சாப்பிடுவார். ஆனால், என்னால பசி தாங்க முடியாது. மீன், சிக்கன்னு வெளுத்து கட்டிடுவேன். ஒருநாள் நைட் ஷூட்டிங் அப்ப இதை தெரிஞ்சுகிட்ட விஜய் சாரும், அட்லியும் செமய்யா கலாய்ச்சாங்க. அன்னைக்கு சிரிச்சதுல கண்ணுல தண்ணி வந்திருச்சு!’’

"சினிமாவுக்குள் நுழைந்து கடந்த பிப்ரவரி மாதத்தோட ஆறு வருஷம் ஆகுது. என்ன எல்லாம் கத்துகிட்டீங்க?"

"ம்ம்.. எக்கசக்கமான அனுபவம். நான் சினிமாவுக்கு வருவேன்னு நினைக்கவே இல்லை. தற்செயலாக தான் வந்தேன். வந்ததுக்கு பிறகு மூணு நாலு படம் தான் பண்ணப்போறோம்னு தோணும். ஆனால், தொடர்ந்து இதுவரை 27 படங்களுக்கும் மேல பண்ணிட்டேன். அதுவும் டாப் ஸ்டார்கள் கூடவும் நடிச்சாச்சு. திடீர்னு வாழ்க்கை தலைகீழாக மாறும்னு சொல்லுவாங்களே. அதுக்கு என் வாழ்க்கையே உதாரணம். கெளதம் மேனன் சாருக்கு தான் பெரிய தாங்ஸ் சொல்லணும். என் வாழ்க்கை மேஜிக் போல மாற்றியவர் கெளதம் சார்தான். தாங்ஸ் சார்."

புல்லட் ஸ்பீட் கேள்விகளுக்கு ஸ்மார்ட் சமந்தா பதில்கள்!


"ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க?"

"சென்னைல இருந்தால் சத்யம் தியேட்டர் வந்து படம் பார்ப்பேன். ஆனா, அப்போவெல்லாம் என்னை நீங்க கண்டுபிடிக்கவே முடியாது. அது ஒரு சீக்ரெட்!’’

"செல்லப் பெயர்?"

"சாம்."

"வாழ்க்கையின் தத்துவம்?"

"All or Nothing."

"சினிமால உங்க பெஸ்ட் ப்ரெண்ட் யார்?"

"என் முதல் படத்தின் ஹீரோ நாக சைதன்யா!’’

"யாரைப் பார்த்தால் பயம்?"

"எனக்கு மனுஷங்க மீது பயம் இல்லைங்க. ஆனால், என் வேலை மேல ரொம்ப பயபக்தி."

"செய்ய நினைத்து செய்யாமல் போனது?"

யோகா செய்யணும்னு நினைப்பேன். ஆனால், எங்க நேரமே கிடைக்கமாட்டேங்குது."


"இன்னமும் அழிக்காமல் வைத்திருக்கும் மெசேஜ்?"

"நான் யார் மெசேஜையும் அழிக்க மாட்டேங்க. எல்லா மெசேஜும் அப்படியே இன்பாக்ஸ்ல இருக்கும்!’’

"அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு?"

"இப்போ என் ரிபீட் மோட் பாடல் 'தெறி' படத்துல வர 'தாய்மை வாழ்கென' பாடல்தான்."

"பிடித்த இடம்?"

"என் பெட் ரூம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஷூட்டிங் முடிந்து வந்தால் அப்பாடானு எல்லாதையும் மறந்துட்டு.... ஃபுல் ரெஸ்ட்தான்!’’

"யாருடன் டேட்டிங் போகணும்?"

"ம்ம்ம். ஒருத்தர் கூட டேட்டிங் போகணும்னு ஆசை இருக்கு. ஆனால், யாருனு சொல்ல மாட்டேனே!"
மேலும் வாசிக்க…

'தெறி'யில் மேலும் ஒரு விஐபி? இதுவரை வெளிவராத சஸ்பென்ஸ்..!!

2:14 AM |
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் இன்று இரவே ஒருசில நாடுகளிலும், நாளை அதிகாலை முதல் இந்தியாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் கட்-அவுட், பேனர்கள் கட்டுவதில் விஜய் ரசிகர்கள் பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் எதிர்பாராத திருப்பமாக விஜய் மகன் சஞ்சய் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய 'தெறி' பிரஸ்மீட்டில் விஜய் மகன் சஞ்சய் இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியை சற்றும் எதிர்பாராத இயக்குனர் அட்லி, அந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்கினார். பின்னர் சுதாரித்து 'நாங்க சஸ்பென்ஸா வைத்திருந்தோம், நீங்க இப்ப கேட்டுட்டீங்க' என்று மட்டும் கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு தாவினார்.

இதில் இருந்து விஜய் மகன் சஞ்சய் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் சஞ்சய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஜய் மகன் சஞ்சய், விஜய் மகள் திவ்யா என விஜய்யின் குடும்ப படமாக மாறியுள்ள 'தெறி' படத்தில் சஞ்சய்க்கு அட்லி என்ன கேரக்டர் கொடுத்துள்ளார் என்பதை நாளை வெள்ளித்திரையில் தெரிந்து கொள்வோம்.
மேலும் வாசிக்க…

தெறி' விஜய்யின் 4வது கெட்டப் என்ன தெரியுமா?வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..!!

1:56 AM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளிநாட்டிலும் நாளை இந்தியாவிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் கெட்டப் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் போலீஸ் உள்பட மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதை டிரைலரில் பார்த்தோம். ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி 'தெறி'யில் விஜய்க்கு நான்கு கெட்டப்புகள் என்றும் நான்காவது கெட்டப் இதுவரை விஜய் ஏற்காக வித்தியாசமான கெட்டப் என்றும், இந்த கெட்டப் விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், அட்லி உள்பட படக்குழுவினர் அனைவருமே தங்களுடைய 100% உழைப்பை இந்த படத்திற்காக கொடுத்துள்ளதால் அந்த உழைப்புக்குரிய பலனை நாளை முதல் அவர்கள் அறுவடை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது..!!

8:00 PM |
அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிதழ் பெற்றது. இதைதொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் 14-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படம் மொத்தம் 158 நிமிடங்கள் 11 நொடிகள் ஓடக்கூடிய வகையில் கட் செய்யப்பட்டுள்ளது. அதாவது மூன்று மணிநேரத்துக்கு 20 நிமிடங்கள் மட்டுமே குறைவு. விஜய் படங்கள் பெரும்பாலும் 2.30 மணிநேரத்துக்கு அதிகமாகவே ஓடும். அந்த வரிசையில் தற்போது தெறியும் இணைந்துள்ளது.
மேலும் வாசிக்க…

அமெரிக்காவில் 139 தியேட்டர்களில் வெளியாகும் தெறி..!!

10:04 AM |
அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் அமெரிக்க உரிமையை பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் ரூ. 3 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் இப்படத்தை 139 தியேட்டர்களில் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. படம் வெளிவரும் சமயத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் இப்படத்துக்கான முன்பதிவு அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8-ம் தேதியே தொடங்குகிறது.
மேலும் வாசிக்க…

+2 தேர்வில் பாஸ் ஆவார அட்லி ? - ஒரு நேர்காணல்..!!

1:21 AM |
தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன் தினம் நிறைவடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் ‘தெறி’ இயக்குனர் அட்லியும் ப்ளஸ் 2 தேர்வை எழுதியுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

‘எனது முதல் படமான ‘ராஜா ராணி’ படத்தை முடித்தவுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய உணர்வில் இருந்ததாகவும், தற்போது ‘தெறி’ படத்தை முடித்தவுடன் ப்ளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல் இருப்பதாகவும் அட்லி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தன்னால் முடிந்தவரை இந்த படத்திற்கு பெஸ்ட் உழைப்பை கொடுத்துள்ளதாகவும், இனி ரசிகர்கள்தான் இந்த படத்திற்கான தீர்ப்பை தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்திற்காக அட்லிக்கு 100க்கு 100 மார்க் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறி சென்சார் முடிந்தது - உறுதிப்படுத்திய அட்லி..!!

10:30 PM |
தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் தெறி.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் இப்படத்தின் சென்சார் ஏற்கனவே முடிந்ததாக தகவல் வெளியானது. ஆனால் வதந்தி என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அட்லி இன்று சென்சார் முடிந்ததை டிவிட் செய்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே யு சான்றிதழ் தான் கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



மேலும் வாசிக்க…

தெறி படத்தின் 2 நிமிடம் டிரைலர் இதோ..!!

3:13 AM |
விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தை பற்றி நாளும் ஒரு புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளன. நேற்று, வருகிற 20-ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றிய அப்டேட்டை பார்த்தோம்.

இன்று இப்படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை, ஆடியோ வெளியாகும் மார்ச். 20-ந் தேதியே வெளியிடவுள்ளனர். ‘தெறி’ படத்தின் டிரைலர் 2 நிமிடம் ஓடக்கூடியதாக இருக்குமாம். டீசரைவிட டிரைலரில் கூடுதல் சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட, இந்த டிரைலருக்கு கூடுதல் வரவேற்பு இருக்கும் என படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறி இசை விழாவில் கலந்துகொள்ளும் ரஜினி..!!

10:53 PM |
அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

வழக்கமாக விஜய் படங்களின் இசை விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக யாரும் தனியாக அழைக்கப்பட மாட்டார்கள். ஆனால் தெறி இசை விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசை தட்டை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

தெறி படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு கபாலி படத்தின் தயாரிப்பாளர் என்பது மட்டுமல்லாமல் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் கலந்து கொள்வதற்கு நிறையவே வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த அட்லி..!!

11:53 PM |
விஜய் நடித்துவரும் தெறி படத்தை இளம் இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிவிட்டரில் தீவிரமாக இயங்கிவரும் கோலிவுட் பிரபலங்களில் அட்லியும் ஒருவர்.

தெறி படம் தொடர்பான தகவல்களை இவர் அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார். ஆனால் இவர் ‘இளைய தளபதி’ விஜய்யை டிவிட்டரில் ஃபாலோ செய்யவில்லை என ஒரு தகவல் வெளியாகி தற்போது விஜய் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

மேலும் வாசிக்க…

தெறி படத்தில் இணைந்த டி.ஆர்..!!

3:13 AM |
புலி படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் ‘இது அசத்தலான புலி, அசால்டான புலி, ஆரவாரமான புலி’ என மூச்சு விடாமல் விஜய் புகழ்ந்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் T.R.

இவர் இப்போது விஜய் நடிக்கும் தெறி படத்தில் ஒரு குத்து பாட்டு பாடியுள்ளாராம். அவர் பேசினாலே அனல் பறக்கும், பாடினால் சொல்லவா வேண்டும்.

விஜய், சமந்தா, எமி மற்றும் பலர் நடிப்பில் அட்லி இயக்கிவரும் தெறி ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

பாடல்களை அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில், ஆடியோ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் வாசிக்க…

தெறி படத்துக்கு வந்த திடீர் சிக்கல்..!!

1:58 AM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘இளையதளபதி’ விஜய்க்கு இருக்கும் ரசிகர் படையை மனதில்கொண்டு இப்படத்தை உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தெறி வெளியாகி ஒருவாரம் கழித்து தெலுங்கு ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் கப்பர் சிங் படமும் வெளிவரவுள்ளது. விஜய்யை போலவே பவன் கல்யாணுக்கும் உலகம் முழுவதும் மார்கெட் உண்டு. எனவே இது தெறி படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்றொரு கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் வாசிக்க…

பிரபல கட்சி பிரமுகரின் கல்லூரியில் தெறி இசை விழா..!!

11:35 PM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் முதல் வாரத்தில் சென்னை வெளிப்புறத்தில் உள்ள ஒரு பிரபல கட்சி பிரமுகரின் கல்லூரியில் நடைபெறவிருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியானது.

இந்த தகவல் வைரலாக பரவ தற்போது இதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதில் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா அந்த கல்லூரியில் நடக்கவில்லை எனவும் மேலும் சென்னையில் ஒரு பிரபல இடத்தில் தான் இந்த இசை விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

காதல் மனைவிக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசளித்த அட்லி..!!

10:08 PM |
இயக்குனர் அட்லியின் மனைவியும் பிரபல நடிகையுமான பிரியா, ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகையாம். எனவே இவரது பிறந்த நாளின் போது இவரை லொகேஷன் பாரக்க அழைத்து செல்வதாக கூறி ஒரு இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார் அட்லி.

ஆனால் அந்த இடத்தில் ரஜினியின் கபாலி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதைக்கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த பிரியா, பின்னர் ரஜினியிடம் பேசி ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இதை தனது வாழ்நாளில் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க…

படம் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு..!!

1:49 AM |
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் தெறி விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அழகிய தமிழ்மகன் இயக்குனர் பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய்60 படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை மே மாதம் தொடங்கவிருக்கின்றனர்.

தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். பொதுவாகவே விஜய்க்கு பொங்கல் பண்டிகையில் வெளிவரும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

"போக்கிரி", "நண்பன்", "காவலன்", "ஜில்லா" ஆகிய படங்கள் விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அதன்படி, இந்த படத்தையும் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com