விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.
அதன்படி, ‘தெறி’ படத்தில் சுமார் 7 சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளதாக தீலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தெறி’ படத்தில் 7 சண்டைக்காட்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் கதையோடு ஒன்றியே இருக்கும்.
எந்தவொரு இடத்திலும் கமர்ஷியல் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் மிகவும் தத்ரூபமாக படமாக்கியுள்ளோம். அதேபோல், எந்த சண்டைக் காட்சியிலும் ரோப்பையும் நாங்கள் உபயோகிக்கவில்லை. விஜய் 90 அடி உயரத்திலிருந்து தண்ணீரில் குதிப்பதுபோன்ற காட்சியில்கூட ரோப் பயன்படுத்தவில்லை.
சில சண்டைக்காட்சிகளில் வெளிநாட்டு சண்டை மாஸ்டர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்த படத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளை பார்த்து வியந்த விஜய் எங்களை பாராட்டினார். சமீபத்தில் வெளிவந்துள்ள ‘தெறி’ டீசர் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
‘தெறி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பிரபு, ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா ஆகியோரும் நடித்துள்ளார். ஜி.வி.இசையில் அமைந்துள்ள பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர். தமிழ் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
எமி ஜாக்சன்
,
சமந்தா
,
சினிமா
,
தெறி
,
விஜய்
,
ஜி.வி.பிரகாஷ்