பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் கோயம்பேடு மார்க் கெட் செட் போட்டு அதற்குள் வில்லன்களுடன் சண்டை காட்சியில் நடித்து வருகிறார் விஜய்.
இதையடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பாடல் காட்சிகளை படமாக்குகின்றனர். அதனால் இதுவரை விஜய்யுடன் வசன காட்சிகள் நடித் துள்ள கீர்த்தி சுரேஷ் அவருடன் டூயட் பாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்.
மேலும், இந்த படத்திற்கு எம்ஜிஆரின் எங்க வீட்டுப்பிள்ளை டைட்டீலை வைக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், விஜய் வட்டாரம் அந்த டைட்டீலை வைத்தால் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று யோசித்து வேறு டைட்டீல் வைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்போது விஜய் 60-வது படத்தின் டைட்டீல் அறிவிக்கப்படும் என்று ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்து வந்தனர்.ஆனால் இந்த நேரத்தில் இதே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வரும் மலையாள நடிகை அபர்ணா வினோத் தனது டுவிட்டரில், விஜய்யின் 60-வது படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று டைட்டீல் குறித்த டிஸ்கசன் போய்க் கொண்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.
ஆக விஜய் 60 படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை தலைப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.அதேசமயம் அபர்ணா வினோத்தின் இந்த டுவிட் பதிவால் விஜய் மற்றும் டைரக்டர் பரதன் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
Tags:
Cinema
,
அபர்ணா வினோத்
,
எங்க வீட்டுப்பிள்ளை
,
சினிமா
,
பரதன்
,
விஜய்
,
விஜய் 60