பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ்..!!

11:07 PM |
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், என சினிமாவில் திறமை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து சாதனை புரிந்து வருகிறார்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நானும் நிக்கி கல்ரானியும் ஒரே காரில் செல்லும் போது மற்றகார்களுடன் மோதும் சேசிங் காட்சிகள் இருந்தது. அப்போது எங்களை துரத்தி வரும் மற்றோரு கார் எதிர்பாராத விதமாக எங்கள் மீது மோத நாங்கள் சென்ற கார் உருண்டு விழுந்தது.

நல்லவேளை நாங்கள் இருவரும் உயிர் தப்பினோம் என அவர் கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் சினிமாவில் நடிப்பதிலும் கஷ்டங்கள் உள்ளது என காட்டியுள்ளது.
மேலும் வாசிக்க…

அஜித்தை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் – ஜி.வி.பிரகாஷ் பதிலால் கிளம்பிய சர்ச்சை..!!

1:19 AM |

இசையமைப்பாளர் என்பதை தாண்டி தற்போது ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இவர் குறித்து அஜித் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம்’ என கூறினார்.

அதற்கு அவர் முதலில் உங்கள் நடிகரை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள், உங்களை போன்ற ரசிகரால் தான் அவருக்கு கெட்டப்பெயர், பலரும் வெறுக்கிறார்கள்.

இதை அவரே விரும்பமாட்டார்’ என கோபமாக கூறியுள்ளார். இவை டுவிட்டரில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தற்போது ஜிவி தான் சண்டைப்போட்ட அனைத்து டுவிட்டுகளையும் டெலிட் செய்துவிட்டார்.


மேலும் வாசிக்க…

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” டீசர் வீடியோ

2:17 AM |
மேலும் வாசிக்க…

விஜய் தனுஷ் விவகாரம்! காறித் துப்பிய ஜி.வி.பிரகாஷ்..!!

11:15 PM |
ஹீரோவாக அவதாரம் எடுத்த பின்பு ஜி.வி.பிரகாஷுக்குள் இருக்கிற பைட் மாஸ்டர் அவ்வப்போது தலையெடுத்து, “அடிக்கட்டுமா? உதைக்கட்டுமா?” என்று கேட்பார் போலிருக்கிறது. இருந்தாலும் இந்த முறை அவர் கோபப்பட்டத்தில் நியாயம் இல்லாமலில்லை. ஒரு பிரபல ஆங்கில நாளேடு ‘இந்த வருடத்தின் விரும்பத்தக்க நடிகர் யார்?’ என்ற கேள்வியுடன் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெரும்பாலான வோட்டுகள் விஜய் என்றே வர, அவரை சந்தித்து இது தொடர்பாக ஒரு பேட்டியையும் எடுத்துவிடலாம் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

ஆனால் விஜய் சிக்கினால்தானே? அவரை வளைக்க எப்படி திட்டமிடலாம் என்று யோசித்தவர்களுக்கு பளிச்சென சிக்கியவர் ஜி.வி.பிரகாஷ்தான். தெறி படத்திற்கும் அவர்தானே மியூசிக். அந்த நம்பிக்கையில் அவரது உதவியை கேட்டு அந்த நிறுவனத்தின் நிருபர் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்ப, நொந்நே போனார் ஜி.வி. “என் வேலை அதுவல்ல. நீங்க இது சம்பந்தமா விஜய் மேனேஜர்ட்டதான் பேசணும். நான் என் தொழில் விஷயத்தை தவிர வேறு விஷயங்களுக்காக விஜய்யிடம் பேசுவது நாகரீமல்ல” என்று திருப்பி ஒரு பதிலை அனுப்பிவிட்டார் ஜி.வி.



இது நடந்த சில தினங்களில் அவருக்கு பேரதிர்ச்சி. விஜய்யை சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு முடிவு பற்றி கருத்து அறிய முடியாத நாளிதழ், விஜய்யையே மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு தனுஷை கொண்டு வந்துவிட்டது. அதாவது இந்த வருடத்தின் விரும்பத்தக்க நடிகர் தனுஷ் என்று சொல்லி கதையை முடித்துக் கொண்டது. இந்த அறிவிப்பை பார்த்த ஜி.வி பொங்கிவிட்டார் பொங்கி.

தனக்கும் அந்த நிருபருக்கும் நடந்த உரையாடலை அப்படியே வெளியிட்டதுடன் “இந்த பொழப்புக்கு பேருதான் எச்ச” என்றும் காட்டமாக விமர்சித்துவிட்டார். ஜி.வி.க்கு தனுஷ் மீது கோபமா, அல்லது நாளிதழ் மீது கோபமா?

இருந்தாலும் நீ பொங்கு சித்தப்பு!



மேலும் வாசிக்க…

'தெறி'யில் இன்னொரு போனஸ். ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட புதிய தகவல்..!!

2:04 AM |
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தின் ஏழு பாடல்களும் விஜய் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்னொரு போனஸாக கடைசி ரிலீல் ஒரு சிறிய பாடல் ஒன்றை புதியதாக இணைத்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் முற்றிலும் முடித்து ஒப்படைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'டப் தெறி ஸ்டெப்' பாடல் முக்கிய இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பிரம்மாதமாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.


மேலும் வாசிக்க…

மயிரிழையில் உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ் RJ பாலாஜி..!!

3:19 AM |
ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜேஷ் இயக்கி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகிகளாக அவீகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி. 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியைப் படமாக்கி வந்தார்கள்.அப்போது கண்டெய்னர் லாரி மோதியதில் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதியது.

இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிப்பட்டிருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்றவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் வாசிக்க…

தெறி பாடல் வரியை வெளியிட்ட படக்குழு- ரசிகர்கள் உற்சாகம்..!!

11:01 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை முறியடித்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தன் டுவிட்டர் பக்கத்தில் தெறி பாடல்கள் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக...


மேலும் வாசிக்க…

பிரபல இயக்குனர் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் அதிரடி நீக்கம்..!!

1:54 AM |
சிவகார்த்திகேயன் கால்ஷிட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் வெயிட்டிங். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனிடம் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு கதையை கூறியுள்ளார்.அவரும் அந்த கதையில் தான் நடிப்பதாக சம்மதித்து விட்டார்.

ஆனால், பிறகு தன் சம்பளத்தை சிவகார்த்திகேயன் வேகமாக உயர்த்த, பாண்டிராஜ் ’இவர் கேட்கும் சம்பளம் எனக்கு சரிப்பட்டு வராது’ என படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிவிட்டாராம்.தற்போது இதே கதையை ஜி.வி.பிரகாஷிற்காக பாண்டிராஜ் வடிவமைத்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

“தெறி” படத்தில் அதிரடி 7 சண்டைகாட்சிகள்..!!

11:26 PM |
விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

அதன்படி, ‘தெறி’ படத்தில் சுமார் 7 சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளதாக தீலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தெறி’ படத்தில் 7 சண்டைக்காட்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் கதையோடு ஒன்றியே இருக்கும்.

எந்தவொரு இடத்திலும் கமர்ஷியல் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் மிகவும் தத்ரூபமாக படமாக்கியுள்ளோம். அதேபோல், எந்த சண்டைக் காட்சியிலும் ரோப்பையும் நாங்கள் உபயோகிக்கவில்லை. விஜய் 90 அடி உயரத்திலிருந்து தண்ணீரில் குதிப்பதுபோன்ற காட்சியில்கூட ரோப் பயன்படுத்தவில்லை.

சில சண்டைக்காட்சிகளில் வெளிநாட்டு சண்டை மாஸ்டர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்த படத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளை பார்த்து வியந்த விஜய் எங்களை பாராட்டினார். சமீபத்தில் வெளிவந்துள்ள ‘தெறி’ டீசர் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

‘தெறி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பிரபு, ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா ஆகியோரும் நடித்துள்ளார். ஜி.வி.இசையில் அமைந்துள்ள பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர். தமிழ் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய் படத்திலிருந்து விலகிய ஜி.வி.பிரகாஷ்- ரசிகர்கள் கவலை..!!

10:39 PM |
ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கென சில பேவரட் இயக்குனர்கள் இருப்பார்கள்.

அதில் வெற்றிமாறன், ஏ.எல்.விஜய் இருவரும் மிக முக்கியமானவர்கள், ஆனால், ஜி.வியின் நடிப்பு ஆசையால் வெற்றிமாறனின் வடசென்னை படத்திலிருந்து விலகினார்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் பாலிவுட் படத்திலிருந்து ஜி.வி விலகியுள்ளார். இதற்கு பதிலாக இப்படத்தில் 4 இசையமைப்பாளர்கள் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இச்செய்தி இவர்கள் கூட்டணியை விரும்பும் ரசிகர்களுக்கு கவலையை அளித்துள்ளது.
மேலும் வாசிக்க…

விஜய் ரசிகர்களுக்கு அக்டோபர் 17ம் தேதி விருந்து கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்..!!

2:11 AM |
‘புலி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 59 என்று அழைத்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பது 50வது படமாகும். இதனால் இப்படங்களின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் ‘வாங்கண்ணா…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. தற்போது இதை விட சிறப்பான பாடல் ஒன்றுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த பாடல் ‘உலக லோக்கல் தர டிக்கெட்’ வகையை சார்ந்ததும் என்றும், இதற்கான பாடல் வரிகளை அக்டோபர் 17ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com