சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் ஹிட் வரிசை தான். அதிலும் சமீபத்தில் வெளிவந்த ரஜினி முருகன் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.
இதற்காக இப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி சொல்லவிருந்தாராம். ஆனால், சிவகார்த்திகேயன் தற்போது வரை இதற்கு சம்மதிக்கவில்லையாம்.
சிவகார்த்திகேயன் இப்படி செய்ய மாட்டாரே, ஏன் இப்படி மாறினார் என கோலிவுட்டில் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். ஆனால், இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் பல கோடி இழந்துவிட்டார் அதனால் தான் இப்படி செய்கிறார் என அவரின் நலவிரும்பிகள் கூறுகின்றனர்.
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரஜினி முருகன்
,
லிங்குசாமி