Movie Name : Dhilluku Dhuddu
Director : Rambala
Cast :Santhanam, Shanaya
Music : S. Thaman
தில்லுக்கு துட்டு விமர்சனம் :
நக்கல் நையாண்டி என அனைத்தையும் கலந்து பேய்யை கலாய்க்கும் காமெடி படமாக உருவாகி இருக்கிறது இந்த தில்லுக்கு துட்டு திரைப்படம்.
கதை களம் :
சந்தானமும் ஒரு பணக்காரா சேட்டு பொன்னும் காதலிக்கின்றனர். இதனால் அந்த சேட்டு சந்தானத்தை கொலை செய்ய மொட்டை ராஜேந்திரனை ரெடி செய்கிறார்.
மொட்டை ராஜேந்திரன் திட்டம்படி சந்தானம் குடும்பமும், சேட்டு குடும்பமும் ஒரு மலையில் இருக்கும் பங்களாவிற்கு செல்கின்றனர்.
அது பேய் பங்களா என்பது இவர்களுக்கு தெரியாது. அங்கு நடக்கும் காமெடி அட்டகாசம் தான் படம்.
படத்தில் நடித்தவர்கள் :
சந்தானம் படத்திற்கு படம் தனது நடிப்பு திறமையை உயர்த்தி கொண்டே வருகிறார். காமெடி டான்ஸ் ஃபைட் என எல்லா ஏரியாவிலும் கலக்கியுள்ளார்.
கதாநாயகியாக வரும் ஷனாயா பார்க்க அழகாக இருக்கிறார் நடிப்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை.
மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் என படத்தில் நடித்த அனைவரும் காமெடியுள் கலக்கியுள்ளனர்.
படத்தின் பிளஸ் :
படம் முழுவதும் அதிரவைக்கும் டயமிங் காமெடி. படத்தில் நடித்தவர்களின் பெர்ஃபாமன்ஸ் நன்று. பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்று.
படத்தின் மைனஸ் :
கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றது.
மொத்தத்தில் தில்லுக்கு துட்டு :
கண்டிப்பாக படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் சந்தோசமாக பார்த்து ரசிக்கலாம்.
தில்லுக்கு துட்டு படத்தின் ரேடிங் - 3.25 / 5
Tags:
Cinema
,
santhanam
,
Shanaya
,
கருணாஸ்
,
சந்தானம்
,
சினிமா
,
தில்லுக்கு துட்டு
,
ஷனாயா