தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. தமிழில் ஒரு நடிகருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இந்த சர்ச்சையையடுத்து தமன்னா தமிழ் படங்களில் ஒரு வருடத்துக்கும் மேலாக நடிக்காமல் ஒதுங்கி வேறு மொழிகளில் நடித்து வந்தார்.
தெலுங்கில் பிரபாஸுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அதை பிரபாஸ் மறுத்தார். இருவரும் ‘பாகுபலி’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மீண்டும் பாகுபலி 2ம் பாகத்தில் நடிக்கின்றனர். தற்போது டோலிவுட் இளம் ஹீரோ ஒருவருரை இரவு விருந்துக்கு அழைத்த தகவல் இணைய தளங்களில் கசிந்துள்ளது.
நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவருடன் ‘100 பர்சன்ட் லவ்’, ‘தடகா’ படங்களில் இணைந்து நடித்தார் தமன்னா. அவருக்கு இரவு விருந்து (டின்னர்) அளிக்க அழைப்பு விடுத்தார். அதை சைதன்யா ஏற்க மறுத்தார். இதையடுத்து மதிய விருந்துக்கு வருமாறு கேட்டார். அதையும் ஏற்க மறுத்துவிட்டாராம். தற்போது நாக சைதன்யா ‘மஞ்சு’ படத்தில் நடித்து வருகிறார். தமன்னா பாகுபலி 2ம் பாகத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
Tags:
Cinema
,
இரவு விருந்துக்கு அழைத்த தமன்னா -மறுத்த நடிகர்
,
சினிமா
,
தமன்னா