‘பீப்’ பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து, போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர்கள் போலீஸில் ஆஜராகாமல் இருக்கும் நிலையில், பீப் பாடல் குறித்த சர்ச்சையும் நீடித்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய ‘பீப்’ பாடலைத் திருடி, யாரோ இன்டர்நெட்டில் கசியவிட்டுவிட்டனர் என்று சிம்பு சொல்லி வருகிறார். இதுபற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம்.இந்த விவகாரங்களை அறிந்த சினிமா பிரமுகரிடம் பேசினோம். “சிம்புவுக்கு இது மாதிரியான சர்ச்சைகளில் சிக்குவது என்பது புதிய விஷயம் அல்ல.
‘பீப்’ பாடலுக்கு முன்பாகவே, சிம்பு தொடர்புடைய சர்ச்சைக்குரிய சில ஆடியோக்களும், புகைப்படங்களும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் உண்டு. ‘வல்லவன்’ படத்தில் நடித்த காலத்தில், தனிமையான சூழலில் நடிகை நயன்தாராவின் உதடுகளில் சிம்பு முத்தமிடுவதைப் போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிம்புவுடன் நம்பிக்கையோடு பழகிய நயன்தாரா, அந்தப் படங்கள் வெளியானதைக் கண்டு கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ‘ஆளைவிடுடா சாமீ…’ என்று ஓட்டம்பிடித்தார். அதைப்போல, இன்னொரு பிரபல நடிகை ஷூட்டிங் இடைவேளையில் அறையில் அரைகுறையான கேஷுவல் உடையில் இருக்கும் படம் ஒன்றும் இன்டர்நெட்டில் வெளியானது. அதுவும் சர்ச்சையை விதைத்தது. இப்போது அவரே சிக்கலில் மாட்டிக்கொண்டார்” என்று சொன்னார் அவர்.
‘பீப்’ பாடலை யார் வெளியிட்டது என்று திரைத் துறைக்குள் பட்டிமன்றமே நடக்கிறது. சிலர் தனுஷ் என்றும், சிலர் சிவகார்த்திகேயன் என்றும் சொல்கிறார்கள்.“சிம்புவின் பீப் பாடல் குறித்து தனுஷிடம் கேஷுவலாக அனிருத் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு ஆர்வமான தனுஷ், ‘அப்படியா எங்கே காட்டு’ எனச் சொல்ல, அனிருத்தும் அப்பாவித்தனமாக தன் செல்போனில் இருந்த பீப் பாடலை ஒலிக்கச் செய்திருக்கிறார். அதுதான் இப்போது வெளியாகிவிட்டது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி மாலை தன்னுடைய ‘தங்கமகன்’ படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட்டார். அன்றைய தினமே ‘பீப்’ பாடலும் வெளியானது” என்று சொல்கிறார்கள் ஒரு தரப்பினர்.தனுஷ் – சிம்பு மோதலை வைத்தே ஒரு படம் எடுக்கலாம். அந்த அளவுக்குக் காட்சிகள் நடந்துள்ளன. ‘கெட்டவன்’ என்ற ஒரு படத்தை சிம்பு எடுத்தார். அந்தப் படத்தின் கதை, முழுக்க முழுக்க தனுஷ் குடும்பத்தின் கதைதான் என்று அப்போதே செய்தி கிளம்பியது. என்ன காரணத்தாலோ அந்தப் படத்தின் ஷூட்டிங் சில வாரங்களிலேயே நின்றுபோனது. சிம்புவும், தனுஷும் நெருக்கமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டாலும், தனுஷின் மனசுக்குள் அந்தக் கோபக்கனல் தணியாமலேயே இருந்தது.
‘படிக்காதவன்’ படத்தில் நாயகி தமன்னாவிடம், ‘என்னை எல்லாம் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ வசனம் பேசினார் தனுஷ். ‘வாலு’ படத்தில் ‘என்னை எல்லாம் பார்த்தவுடனே பிடிக்கும்’ என்று பதில் பஞ்ச் வைத்தார் சிம்பு.இடையில் புகுந்த சிவகார்த்திகேயன்!‘‘விஜய் டி.வி நிகழ்ச்சியில் நடித்துவந்த சந்தானத்தை, ‘மன்மதன்’ படத்தில் சிம்பு அறிமுகம் செய்தார். அதே விஜய் டி.வி-யில் காம்பியராக இருந்த சிவகார்த்திகேயனை, ‘3’ படத்தில் காமெடி வேஷம் கொடுத்து அறிமுகம் செய்தார் தனுஷ். இப்போது, தனுஷ் மார்க்கெட்டைத் தாண்டி உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘உங்கள் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் எப்போது நடிப்பார்?’ என்று கேட்டதற்கு, ‘அவருக்குச் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு என்னோட பேனர் இல்லை’ என்று வெதும்பினார் தனுஷ்.
சிம்புவின் ‘பீப்’ பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன்தான் என்று பரபர தகவல் உலா வந்தது. அந்தத் தகவலைப் பரப்பியதன் பின்னணியில் இருந்ததும் ஒரு நடிகர்தான் என்றும் சிலர் சொல்கிறார்கள். சிம்புவுடன் நெருக்கமாக இருந்த நேரத்தில், நடிகை ஹன்சிகா ‘மான் கராத்தே’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது, ‘சிவகார்த்திகேயன்கூட எல்லாம் நடிக்கிறியா, என்று ஹன்சிகாவை சிம்பு திட்டியிருக்கிறார். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன் சிம்பு மீது கடும் கோபம் அடைந்தார்” என்கிறார்கள்
Tags:
Aniruth
,
Beep song
,
Cinema
,
simbu