தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமையில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்.
தல அஜித் படம் தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டார். ஆனால் இவரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக பரப்பி விடுவர். அஜித்-ஷாலினி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தார் அஜித்.
ஆனால் நேற்று முன்தினம் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்தபோது ரசிகர்கள் குட்டித்தலயின் புகைப்படம் வெளியானது. படம் வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளங்களில் வைரலானார் குட்டித்தல.
ரசிகர்கள் குட்டித்தலயின் ஒவ்வொரு புகைப்படத்தையும் அடுத்தடுத்து தொடர்ந்து ஷேர் செய்து அஜித்துக்கு நிகரான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
Tags:
Ajith
,
Cinema
,
Shalini
,
அஜித்
,
சினிமா
,
ஷாலினி