என்னைத் தொட ஆயிரம் பேர் தவம் கிடக்க..நான் அஜீத்தை தொட ஏங்கினேன்..!!

10:52 PM |
தல என்றாலே கிக்..! அதிலும் உடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு தனி கிக். காரணம் அருகில் இருந்து பார்த்தால் தல தங்கம் போல மின்னுவார்.அப்படி ஒரு கலர், கம்ம்பீரம்.

அந்த நடிகை அஜித்தின் மூன்று படங்களின் ஹீரோயின் மங்களகரமாக இடுப்பார். கேரளத்து மாம்பழம்..மல்கோவா மாம்பழம்.

இளைய தளபதியின் நான்கு  படங்களின் ஹீரோயின். ஹிந்தி பீல்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு காதல் கல்யாணம் செய்து  தற்போது ஒதுங்கி விட்டார்..!

அவரை சமீபத்தில் பேட்டி கண்டது ஒரு வார இதழ். அதில் அவர் நான் எப்போதுமே தல ஆளு. அவரை பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய நிலையில் அவருடன் மூன்று படங்களில் ஹீரோயினாகவே நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

நான் மிகப் புகழ் பெற்ற நேரத்தில் என்னை தொட்டுப் பார்த்து விட எத்தனையோ பேர் தவம் கிடந்தனர்.

ஆனால், நான் அஜீத்தை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டேன்.  ஆனால் அஜீத் பக்கா ஜென்டில்மேன். அவர் ஷாலினியை மிகவும் நேசிக்கிறார்.

உடன் நடிக்கும் நடிகைகளை கண்ணியமாக நடத்துவார்..! தமிழ் சினிமாவின் உயர்ந்த மனிதர்..! என்கிறார் அந்த மாம்பழம்..!

அது தான் தல..!
மேலும் வாசிக்க…

நடிகர் அஜித்குமாரை கண்டித்த தமிழக முதல்வர் பரபரப்பு தகவல்கள்..!!

10:30 PM |
முன்னாள் நடிகையும், தமிழக முதல்வருமான மாண்புமிகு. செல்வி.ஜெ.ஜெயலலிதா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரைப்பற்றி பல வதந்திகள் வெளிவருகின்றன. அதில் ஜெயலலிதா தரப்பு அஜித்தை சந்திக்க விரும்பியதாகவும் கூறப்பட்டதும் ஒன்று.

இந்நிலையில் அஜித்தையும், ஷாலினியையும் ஒருவிழாவில் முதல்வர் சந்தித்த போது, அஜித்திடம் சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேசிலும் அதிக ரிஸ்க் எடுக்கிறீர்கள், உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும் என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாக வந்து ஓட்டுப் போட்ட ரஜினி - அஜித்..!!

12:20 AM |
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் அஜித் இன்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே முதல் ஆளாக வந்து சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது வாக்கை பதிவு செய்ய வந்திருந்தார். அஜித் வருகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் வாக்குப் பதிவு மையத்தின் முன் திரளாக திரண்டிருந்தனர்.

அஜித் வாக்கு பதிவு மையத்திற்கு வந்ததும் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டனர். பின்னர், அஜித்தை போலீசார் பத்திரமாக வாக்குப் பதிவு மையத்திற்குள் அழைத்து வந்தனர். பின்னர், சிறிது நேர காத்திருப்புக்குப் பின் அஜித் தனது வாக்கை பதிவு செய்தார். அஜித்துக்கு முன்னதாக சிலர் வாக்கு பதிவு செய்ய காத்திருந்தனர். பின்னர்,
அஜித் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் அவரது அம்மாவும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

அதேபோல், நடிகர் ரஜினிகாந்தும் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார். வாக்கை பதிவு செய்ய வந்த ரஜினியை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். வாக்கை பதிவு செய்தபின் ரஜினி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

காலையிலேயே முன்னணி நடிகர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வந்து தங்களது வாக்கை பதிவு செய்து பலருக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

அஜித்-ஷாலினி ஜோடியிடம் அப்படி என்ன ஸ்பெஷல்? : இவர்களின் திருமண நாள் இன்று..!!

1:49 AM |
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நடிகர்களே, நடிகைகளை திருமணம் செய்துக்கொண்டவர்கள். அந்த வகையில் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் அஜித்-ஷாலினி தான். இவர்களின் திருமண நாள் இன்று.
இன்று நட்சத்திர தம்பதிகள் அனைவருக்கும் ரோல் மாடலாக இருப்பது இவர்கள் தான். திரையில் காதல் பற்றி பேசினாலே ’இவுங்க மனசுல பெரிய அஜித்-ஷாலினினு நினைப்பு’ என்று தான் வசனம் வைக்கிறார்கள்.
அந்த அளவிற்கு இந்த ஜோடி பலருக்கும் பிடிக்கின்றது, அஜித் ஷாலினியுடன் அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது அவரை காதலித்துள்ளார்.
திரைநட்சத்திரங்கள் காதல் மீது தான் தவறான எண்ணங்கள் கொண்ட மக்களின் மனதை இந்த ஜோடி மாற்றியது, ஷாலினி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை, முழுக்க முழுக்க அஜித்தின் வெற்றிக்கே உறுதுணையாக இருந்தவர்.
அஜித் தன் வாழ்வில் பார்க்காத ஏற்றங்களும் இல்லை, இறக்கங்களும் இல்லை, ஆனால், எல்லா நிலையிலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர் ஷாலினி, அதனாலேயே இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு கிரேஸ். #HappyweddingdayAjithshalini
மேலும் வாசிக்க…

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா??

10:57 PM |
நடிகர், நடிகைகளாகிவிட்டால், சராசரி மனிதர்களைப் போல் பொது இடங்களுக்குச் செல்ல முடியாது. ஒருவேளை அப்படி சென்றால், காணாததைக் கண்டது போல் அவர்களைச் சூழ்ந்து பெரிய கூட்டம் திரண்டுவிடும். அந்த அளவில் நடிகர், நடிகைகளுக்கு நம் நாட்டில் பெரிய மரியாதையை மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் சராசரி மனிதர்கள் மேற்கொள்ளும் சிறு செயல்களை கூட முடியாது.

அப்படி இருக்கையில் அவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால், அவர்களது குடும்பம் மற்றும் குழந்தையைக் காண வேண்டும் என்று நினைக்கமாட்டோமா என்ன? இங்கு பல படங்களில் நடித்து, நம்மை அவர்களது ரசிகர்களாக்கிய தமிழ், நடிகர் நடிகைகள் தங்கள் துணை மற்றும் குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.


 அஜித்-ஷாலினி அனோஷ்கா  குட்டி தலயுடன் 

இது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி, மகள் அனோஷ்கா  குட்டி தல-யுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.







மகனுடன் மாதவன் 

இது மாதவன் தன் மனைவி சரிதா மற்றும் மகன் வேதந்த் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ.









மகள்-மகளுடன் சூர்யா-ஜோதிகா 

இது நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் கொடுத்த போஸ்.








குடும்பத்துடன் அர்ஜூன் 

இது நடிகர் அர்ஜூன் தன் மனைவி நிவேதிதா, மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளைய மகள் அஞ்சனாவுடன் எடுத்த குடும்ப போட்டோ. இதில் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்துள்ளார்.









மகள்-மகனுடன் சரத்குமார்-ராதிகா 

இது சரத்குமார் மனைவி ராதிகா, மகள் ரேயன், மகன் ராகுலுடன் சேர்ந்து சமீபத்தில் எடுத்த போட்டோ.





மகளுடன் மீனா 
இது நடிகை மீனா கணவர் வித்யசாகர் மற்றும் செல்ல மகள் நைனிகாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.








குடும்பத்தினருடன் பிரபுதேவா 

படத்தில் இருப்பது தான் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவின் மகன்கள் மற்றும் முன்னாள் மனைவி.








பார்த்திபனின் மகன் மற்றும் மகள்கள் 

இது நடிகர் பார்த்திபன் முன்னாள் மனைவி சீதா மற்றும் குழந்தைகள் கீர்த்தனா, அபிநயா மற்றும் மகன் ராக்கியுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ.




மகள்களுடன் கமல்-கௌதமி 

இது ஸ்ருதிஹாசன், சுப்புலட்சுமி பாட்டியா (கௌதமி மகள்), கௌதமி, கமல்ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் போன்றோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ.







கணவர் மற்றும் மகளுடன் குட்டி ராதிகா 

இது நடிகை குட்டி ராதிகா, கணவர் குமாராசாமி மற்றும் மகள் ஷாமிகாவுடன் எடுத்த குடும்ப போட்டோ.







குடும்பத்துடன் குஷ்பு 

இது நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி, மகள் அவந்திகா மற்றும் அனந்திகாவுடன் எடுத்த போட்டோ.









மகள்களுடன் மதுபாலா

 இது ரோஜா படத்தின் நாயகி மதுபாலா, தன் மகள்கள் அமியா மற்றும் கியாவுடன் எடுத்த போட்டோ.








குடும்பத்தினருடன் ரம்பா

 இது நடிகை ரம்பா தன் கணவர் இந்திரன் பத்மநாதன், மகள் மற்றும் மகனுடன் எடுத்த குடும்ப போட்டோ.









மகனுடன் ரம்யா கிருஷ்ணன் 

படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இருப்பது மகன் ரித்விக். 
மேலும் வாசிக்க…

“அஜித் குடும்ப உறுப்பினரின் போலி கண்டுபிடிப்பு”..!!

12:20 AM |
அஜித் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாம்லி தற்போது விக்ரம்பிரபுவுடன் ‘வீரசிவாஜி’ என்ற தமிழ்ப்படத்திலும் மேலும் ஒரு தெலுங்கு, ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகின்றார். தனுஷின் கொடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

 இந்நிலையில் ஷாம்லி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவரை பற்றிய மற்றும் அவர் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், ஷாமிலி இதுவரை எந்த சமூக வலைத்தளங்களிலும் கணக்கு வைத்திருக்கவில்லை என்றும், அவ்வாறு கணக்கு ஆரம்பித்தால் அவரே அதை அதிகார்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவரது தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஷாமிலி பெயரில் இருக்கும் போலி டுவிட்டர் அக்கவுண்டின் ஃபாலோயர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் வாசிக்க…

பட்டு வேஷ்டியில் பட்டைய கிளப்பிய குட்டித்தல..!!

11:04 PM |
சமூக வலைத்தளங்களில் இன்று முழுவதும் அசத்திவருவது அஜித்தின் மகன் ஆத்விக் தான்.

குட்டித்தல என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆத்விக் இன்று முதலாவது பிறந்தநாள். இதனையடுத்து அஜித், ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இன்று பிறந்தநாளை கொண்டாடினார்.

இதில் ஆத்விக்குக்கு தமிழ் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது.

இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க…

திருமணத்திற்குப் பின்னரும் காதல் குறையாத பிரபல ஜோடிகள்..!!

10:35 PM |
“ஜாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம்” என்று நாளைய தினம் காதலர் தினத்தைக் கொண்டாட இந்த உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இளம் நெஞ்சங்களின் மனதில் காதலை உரம் போட்டு தீவிரமாக வளர்க்கக் காரணமாக இருந்த பிரபல நட்சத்திரங்களின் காதல் பற்றி இங்கே காணலாம்.

இந்த ஜோடிகளின் சிறப்பே காதலுக்குப் பின்னரான திருமண வாழ்க்கையிலும் மற்ற இளம் ஜோடிகளுக்கு உதாரணமாகத் திகழ்வதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்வண்ணன் – சரண்யா 

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான பொன்வண்ணன் “என்னோட வாழ்க்கை முழுக்க உங்களோட கால்ஷீட் வேணும்” என்று சரண்யாவிடம் இயல்பாக தனது காதலை வெளிப்படுத்தியவர். 1995 ம் ஆண்டில் சரண்யா – பொன்வண்ணன் காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது.இவர்களின் அழகான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 21 வருட திருமண வாழ்க்கையில் இன்றுவரை எந்தவித வதந்தி, வீண் சச்சரவுகளும் இவர்களைப் பற்றி வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜீத் – ஷாலினி

 அஜீத் – ஷாலினி தம்பதியைப் பற்றி எதுவும் பெரிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜீத் ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்த மத வேற்றுமைகளை பொருட்படுத்தாத இந்தக் காதல் 2௦௦௦ ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. 15 வருட வெற்றிகரமான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக அனௌஷ்கா, ஆத்விக் என்று 2 குழந்தைகள் இருக்கின்றனர். 

சூர்யா – ஜோதிகா 

பூவெல்லாம் கேட்டுப் பார், உயிரிலே கலந்தது, மாயாவி, காக்க காக்க, பேரழகன், ஜூன் ஆர் மற்றும் சில்லுன்னு ஒரு காதல் என்று 7 படங்களில் சேர்ந்து நடித்து இந்த ஜோடியின் காதலைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகளே இல்லை. அந்த அளவிற்கு உருகி, உருகிக் காதலித்த இருவரும் 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 9 வருட திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக தியா, தேவ் என்று 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜோதிகா மீண்டும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பிரசன்னா – சினேகா 

புன்னகை இளவரசி என்று புகழப்படும் சினேகாவை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சினேகாவிடம் எத்தனையோ பேர் காதலை சொன்னாலும் அவர் தேர்ந்தெடுத்தது என்னவோ பிரசன்னாவைத் தான்.அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது மலர்ந்த பிரசன்னா- சினேகா காதல் 2012 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. மகிழ்ச்சியான இவர்கள் திருமண வாழ்வுக்கு அடையாளமாக ஒரு ஆண் குழந்தை இவர்களுக்கு உள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

பள்ளிப்பருவத்திலேயே மலர்ந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி காதல் 9 ஆண்டுகள் நீடித்து 2013 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்த ஜி.வி திருமணத்திற்குப் பின் வெற்றிகரமான நடிகராகவும் மாறியிருக்கிறார்.
மேலே சொன்ன ஜோடிகளைப் போல காதலர்களும் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக வலம்வர வாழ்த்துக்கள்!

மேலும் வாசிக்க…

ஹீரோயிசம் இல்லாத ஹீரோயினாக திகழும் ஷாலினி..!!

12:34 AM |
நடிகை ஷாலினி தன்னுடைய சிறு வயதில்ருந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஹீரோயினாக ஷாலினி
நடித்தது தமிழ், மலையாளத்தில் சேர்த்து 15 படங்களுக்கும் குறைவுதான. காரணம் அவர் தன் கேரக்டர்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்தார்.

இளம் வயதில் விஜய்க்கு ஜோடியாக நடித்து காதலுக்கு மரியாதையை செலுத்தி, அமர்க்களம் படத்தில் அஜித்தை அமர்க்களமாக நிஜ வாழ்கையில் கரம் பிடித்தவர் ஷாலினி . இத்தனைக்கும் அமர்க்களம் படத்தில் நடிக்கும் போதே படு பிஸியான நாயகியாக இருந்தவர் ஷாலினி. தீடிரென்று அஜித்தை கல்யாணம் செய்து குடும்பத் தலைவியாக மாறியுது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

 ஒரு பிசியான நடிகையாக இருக்கும்போது எல்லாப் புகழையும் தூக்கி எறிந்து விட்டு இல்வாழ்க்கைக்கு திரும்புவது என்பது எல்லோராலும் முடியாது.கிட்டத்தட்ட 15 வருட இல்வாழ்க்கையில் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் இன்று வரை வெற்றிகரமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஒரு சூப்பர் ஸ்டாருக்கு மனைவியாக இருக்கிறார் .

சாதாரண துணைநடிகரின் மனைவியே செம்ம பில்டப் கொடுக்கும் காலத்தில் இன்று சூப்பர் ஸ்டாராக திகழும் அஜித்தின் மனைவி என்ற ஒரு பந்தா கொஞ்சம் கூட அவரிடம் இல்லை. தன்னை ஒரு சாதாரண பெண்ணாக கருதிக் கொண்டு வாழ்வதுதான் அவரை நிஜ வாழ்வில் ஹீரோயினாக உயர்த்திக் காட்டுகிறது என்பதே ஒரு ஸ்பெஷலான விஷயம் அல்லவா !

மேலும் வாசிக்க…

ரசிகர்களை கவர்ந்து இழுத்த குட்டித்தல..!!

6:51 AM |
தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமையில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்.

தல அஜித் படம் தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டார். ஆனால் இவரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக பரப்பி விடுவர். அஜித்-ஷாலினி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தார் அஜித்.

ஆனால் நேற்று முன்தினம் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்தபோது ரசிகர்கள் குட்டித்தலயின் புகைப்படம் வெளியானது. படம் வெளியான சில நிமிடங்களிலேயே இணையதளங்களில் வைரலானார் குட்டித்தல.

ரசிகர்கள் குட்டித்தலயின் ஒவ்வொரு புகைப்படத்தையும் அடுத்தடுத்து தொடர்ந்து ஷேர் செய்து அஜித்துக்கு நிகரான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

ஸ்தம்பித்த பாஸ்போர்ட் ஆபிஸ், அரசாங்க வண்டியில் அஜித்..!!

10:29 PM |
அஜித் தும்மினால் கூட அது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் தான் போல. அந்த வகையில் நேற்று இவர் பாஸ்போர்ட் ஆபிஸிற்கு வந்தார்.

இதை அறிந்த ரசிகர்கள் உடனே எல்லோரும் அங்கு கூட, கிட்டத்தட்ட 1000 கணக்கானோர் வந்தனர். ஏதோ அஜித் படம் முதல் நாள் ரிலிஸ் போல் ஆகிவிட்டது அந்த இடம்.

அதில் கூடுதல் ஸ்பெஷலாக  குட்டிதலயும் வர, ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகமாகியது. தன் பணிகளை முடிந்த அஜித் வெளியே வருகையில் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

பின் அரசாங்க வண்டியில் அஜித்தை அழைத்து சென்றனர், அஜித் சென்ற சில மணி நேரம் கழித்து ஷாலினி கிளம்பினார்.

பலரும் தங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர், குறிப்பாக குட்டிதலயை பார்த்தது மிகவும் சந்தோஷம் என கூறினர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com