நடிகர் அஜித்துக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மூட்டு வலி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் நடித்து தீபாவளிக்கு வெளியான 'வேதாளம்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று (12-ம் தேதி) காலை நடிகர் அஜித் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று மாலை அவருக்கு மூட்டு வலிக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது, அவர் நலமுடன் இருக்கிறார் எனவும், நாளை அல்லது ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:
Actor Ajith Hospitalized
,
Cinema
,
சினிமா
,
நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை