விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியான முதல் 5 நாட்களுக்குள் சுமார் 9.5 கோடிகளை தமிழ்நாடு முழுவதும் வசூலித்து உள்ளது.
போடா போடி படத்திற்குப் பின்னர் விக்னேஷ் சிவன் சுமார் 3 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் நானும் ரவுடிதான். போடா போடி பெரியளவில் எடுபடாத போதும் நானும் ரவுடிதான் விக்னேஷ் சிவனைக் கரை சேர்த்திருக்கிறது.
காதல் + நகைச்சுவை என்ற விகிதத்தில் வெளியான நானும் ரவுடிதான் படம் முதல் 2 நாட்களில் பெரிதாக எடுபடவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் அளித்த நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் தற்போது வசூலைக் குவித்து வருகிறது. ஆயுத பூஜை தினத்தில் வெளியான இப்படம் முதல் 5 நாட்களில் சுமார் 9.5 கோடிகளை தமிழ்நாடு முழுவதும் வசூலித்து இருக்கிறது.
இதில் சென்னையில் மட்டுமே 1.44 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது நானும் ரவுடிதான். இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார் என்றும் நயன்தாராவின் நடிப்பு படத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது என்றும் படம் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் நானும் ரவுடிதான் படம் வசூலில் இன்னும் சாதனை படைக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
படம் பார்க்க ரசிகர்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து பல திரையரங்குகளில் படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் விமர்சனம் , நானும் ரவுடிதான் ரிலீஸ் தேதி ,Nanum rowdy than Review , Nanum rowdy than Movie Online , Nanum rowdy than Movie Release Date , Nanum rowdy than Movie Download , Nanum rowdy than Movie Online TamilGun , நானும் ரவுடிதான் திரை விமர்சனம் , Nanum rowdy than Movie
Tags:
5 நாட்களில் 9 கோடி
,
சினிமா
,
நயன்தாரா
,
நானும் ரவுடிதான்
,
விஜய் சேதுபதி