அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார் கௌதம்மேனன். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி இப்படத்தில் இருமொழிகளில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்து வருகிறார்.
இதனையடுத்து கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார், மலையாளத்திலிருந்து பகத் ஃபாசில், தமிழிலிருந்து சிம்பு, தெலுங்கிலிருந்து அல்லு அர்ஜூன் ஆகிய நான்கு ஹீரோக்கள் இணையும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் கௌதம்.
இதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழி ஹீரோக்களும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெகா ஸ்டார்கள் இணையும் மெகா படமாக இது உருவாகும் என்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
எனவே, இப்படத்தை நான்கு மொழிகளிலும் தயாரிக்கவிருக்கிறார்களாம். தமிழ் மற்றும் மலையாள பதிப்பை கெளதம் மேனனும்,
கன்னட பதிப்பை புனித் ராஜ்குமாரும் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
அப்படியே 4 ஹீரோயினும் தெரிஞ்சிட்டா நைட் நிம்மதியா தூங்குவோம்ல…
Tags:
Cinema
,
கௌதம்மேனன்
,
கௌதம்மேனன் இயக்கத்தில் ஹீரோக்கள்
,
சிம்பு
,
சினிமா