 |
Ajith Next Superstar |
தல, இந்த பெயரைக் கேட்டாலே உற்சாகமாகிவிடுவார்கள் அவரது ரசிகர்கள். அஜித்தை பற்றி விமர்சனமோ, ஏன் சின்ன கருத்தோ கூட சொல்லிவிட்டால் அவ்வளவுதான் அவரது ரசிகர்களுக்கு கடுங்கோபம் வந்துவிடும்.
அந்த அளவிற்கு அஜித்திற்கு வெறிபிடித்த ரசிகர்கள் உள்ளனர்.தனக்கான எந்த பட்டமும் வேண்டாம், எந்த ரசிகர் மன்றமும் வேண்டாம் என்ற போதிலும் அவரின் ரசிகர்களின் அன்பு மட்டும் இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் அஜித் சினிமாவில் நுழைந்து 23வருடங்கள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர், ஃப்ளெக்ஸ் என வைத்துக் கொண்டாடினர். ட்விட்டர், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் இந்திய அளவில் ட்ரெண்டும் ஆனது.
இதனயடுத்து வட இந்திய பிரபல பத்திரிகை ஒன்று அஜித்தின் 23 வருடங்களை முன் வைத்து ஒரு சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்தியாவின் அடுத்த ரஜினி என குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கூறிவரும் நிலையில் தற்போது இந்த செய்தி மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Ajith Next Superstar
,
Cinema
,
சினிமா