விஜய் சேதுபதி பெண் வேடம் லீக்..!!

1:28 AM |
விஜய் சேதுபதி அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சமந்தா ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது. பஹத் பாசில், மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. பெண் வேடத்தில் விஜய் சேதுபதி பங்கேற்று நடித்த காட்சி லீக் ஆனது. அவிழ்ந்த கூந்தலுடன் சேலை அணிந்து அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதுவரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த கெட்டப்பில் நடிப்பது இணைய தளத்தில் வைரலானது. பெண் வேடமா அல்லது திருநங்கை வேடத்தில் நடிக்கிறாரா என்பதுபற்றி தகவல் எதுவும் இல்லை. சமீபத்தில் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் அணிந்து நடித்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் பெண் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

அஜித்தை திருமணம் செய்ய ஆசை படும் ஹீரோயின்..!!

1:47 AM |
விஜய் சேதுபதியுடன் ‘சூது கவ்வும்’ படத்தில் ‘மாமா …மாமா’ என்று விஜய் சேதுபதியை கொஞ்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் சஞ்சிதா ஷெட்டி. இப்போது தமிழில் ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரிடம்,’ நீங்கள் யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ப்ரொபோஸ் செய்வீர்கள் ?’ என்று கேட்டதற்கு…’அஜித்துக்கு தான். அவர் மட்டும் வயதாகாமல் இருந்து, ஷாலினியை கல்யாணம் பண்ணாமல் இருந்தால்..அவரை கல்யாணம் செய்ய முயற்சி செய்திருப்பேன் ‘ என்றார்.
மேலும் வாசிக்க…

விஜய் சேதுபதி ஹீரோயினை தன்வசப்படுத்திய தனுஷ்..!!

1:33 AM |
நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்கம் மட்டுமல்லாது இப்படத்தில் தனுஷ் ஒரு சிறிய கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த பகுதியில் தனுஷுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை இப்படத்தின் 50% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மீதி படத்தையும் வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

நண்பனுக்கு இப்படி துரோகம் செய்து விட்டாரே..!!

12:21 AM |
பாபிசிம்ஹா தன் திருமணத்திற்கு அப்புறம் அதிகமா சர்ச்சையில் சிக்குறார். ஏற்கனவே பாம்புசட்டை படத்தில் படத்தை பார்த்துட்டு வாங்குங்கன்னு இவர் போட்ட பிட்டில்  தயாரிப்பாளர் மனோபாலா அதிர்ச்சியடைந்ததாக சொல்லப்பட்டது.

இப்போது, கைப்பேசி நிறுவனமொன்று தமிழில் தன் நிறுவனத்திற்காக ஒரு விளம்பரப்படம் எடுக்க,இங்குள்ள ஏஜென்ஸி மூலம் லிஸ்ட் எடுத்ததில் விஜய் சேதுபதியும் பாபி சிம்ஹாவும் இருந்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி ஓகே என்று அவர்கள் முடிவு பண்ணியிருக்கிறார்கள்.

அது லிஸ்ட் எடுத்து தந்த நிறுவனம் மூலம் பாபி சிம்ஹாவுக்கு தெரிய, அந்த மும்பை நிறுவனத்திற்கு நேரடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பி, விஜய் சேதுபதியை விட நான் பெரிய நடிகன். தேசிய விருது பெற்றவன். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறேன் என்றவுடன் பாபி சிம்ஹாவை புக் செய்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

சம்பளம் 1 கோடியாம். பணத்துக்காக நண்பனையே காலை வாரி விட்டாரே பாபி என்கின்றது கோடம்பாக்கம்..
மேலும் வாசிக்க…

விஜய் சேதுபதிக்கு கல்யாணம் ஆனது எனக்கு வருத்தமாக உள்ளது - வெள்ளைக்காரிக்கு வந்த ஆசை

12:57 AM |
மேலும் வாசிக்க…

Aandavan Kattalai Official Teaser | Vijay Sethupathi, Rithka Singh | M.Manikandan

10:26 PM |
மேலும் வாசிக்க…

இது விஜய் சேதுபதியா? ஷாக்கான ரசிகர்கள் (புகைப்படம் உள்ளே)

11:34 PM |
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி.

எதார்த்தமான நடிப்பிலும், வித்தியாசமான கெட்டப்பிலும் அனைவரையும் கவர்ந்த இவர் விரைவில் வடசென்னை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதுவரை விஜய் சேதுபதி உடற்பயிற்சிக்காக அதிகம் மெனக்கெட்டது இல்லை. இந்நிலையில் திடிரென இவரின் கட்டுமஸ்தான புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆனால் இதில் இருப்பது விஜய் சேதுபதி இல்லை, உண்மையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் உடலில் டாட்டுஸ் குத்தும் தொழில் செய்யும் Deejay Raven என்பவர் தான்.


மேலும் வாசிக்க…

நயன்தாரா - அனிருத், புதிய சர்ச்சை திரை உலகில்..!!

12:52 AM |
நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.
மேலும் வாசிக்க…

இதுதான் அஜித்தின் உண்மை முகம் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

10:32 PM |
நடிகர் சங்க கட்டட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் கேப்டன்களாக களமிறங்குகிறார்கள்.

மேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள். அந்தவகையில் அஜித்துக்கும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்களாம். ஆனால் அஜித், நடிகர் சங்கத்துக்காக எதுக்கு மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும், நடிகர்களிடமே வசூலித்தால் போதும் என கூறியதாக ஒரு செய்தி வெளியானது.

நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அஜித்தின் கருத்துக்கு எதிரான கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அவை இங்கே:

ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று.

இதை நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியைக் காட்டவும், பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களைக் கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத் துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களையும் முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே. நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப் படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குக்கூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.

அவர்களை வருந்தச் செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும்,

அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்..

அவர்களுக்கு அடுத்தவர்களை குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள், நடிகர் சங்கக் கட்டிடம் நடிகர்களின் சொந்தச் செலவில் கட்டப்படவேண்டும் மக்களைச் சுரண்டக் கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்.

அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாகப் படம் நடித்து திரையிட வேண்டியது தானே? இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத் தான் செல்லவேண்டும்.

அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாற்றுவார்களா? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்? சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது, திரைக் குடும்பத் தேவைகளைச் சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.

விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

இதில் எந்தவொரு இடத்திலும் அஜித் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை. எனினும் இந்த கடிதம் அஜித் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த சிம்பு ஆகியோரை தாக்கியே எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் வாசிக்க…

ரித்திகா சிங் இப்படி சொல்லலாமா????

1:14 AM |
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த ரித்திகா சிங் தேசிய விருது பட்டியலில் ஸ்பெஷல் மென்ஷனாகியுள்ளார். இதுக்குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ரித்திகா ‘இது எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது’ என கூறியுள்ளார்.

உங்களுக்கு எந்த மொழியில் நடிக்க விருப்பம் என கேட்டபோது, ‘எனக்கு இந்தி தான் நன்றாக தெரியும், தமிழ் தற்போது தான் கற்று வருகிறேன். இதனால், இந்தி படத்தில் நடிக்கவே விருப்பம்’ என கூறியுள்ளார். ரித்திகாவின் பதில் பிரம்மாண்ட வரவேற்புகள் கொடுத்த தமிழ் ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தமான விஷயமாகவே மாறியுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதி யின் ஆண்டவன் கட்டளை படத்தில் நடிக்க இருக்கும் ரித்திகா சிங் இந்தியில் ரன்வீர் சிங்குடன் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். மேலும் அலியா பட்டின் என்ர்ஜியான நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் பதிவு செய்துள்ளார்.
மேலும் வாசிக்க…

பாடகர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி..!!

12:36 AM |
சுந்தர் சி தயாரிப்பில் பாஸ்கர் இயக்கத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன் நடித்துள்ள பேய் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. இப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சித்தார்த் விபின் இசையில் மஜ்ஜா மல்ச்சா எனும் பாடலை பாடியுள்ளார். ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு பிறகு அவர் பாடிய பாடல் இது. இப்படம் வெளியானதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அரசியலில் விஜய் சேதுபதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

1:35 AM |
தமிழ் சினிமாவின் தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் கிங் விஜய் சேதுபதி தான். கடைசியாக இவர் நடித்து வெளியான மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பிரபல கட்சியில் இணைந்து விட்டார் என்றும் வருகின்ற தேர்தலில் அந்த கட்சிக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் ஒரு ஆதாரமற்ற செய்தி வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தற்போது இத்தகவலை விஜய் சேதுபதி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும் வாசிக்க…

விஜய் சேதுபதிக்கு அடுத்து ஒரு வருடத்தில் 4 படங்களை வெளியீடும் ஜி. வி. பிரகாஷ்!

2:17 AM |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறி நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். அந்த உற்சாகத்தில் இவர் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதில் ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் ப்ரூஸ்லீ படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதுபோக இவரது நடிப்பில் பென்சில், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இப்படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவரும் எனவும் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் ப்ரூஸ்லீ இந்த வருட இறுதியில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய் சேதுபதி படத்துக்காக மாடர்ன் தோற்றத்துக்கு மாறும் இறுதிச்சுற்று நாயகி..!!

1:06 AM |
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இதில் நாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

இவர் அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இறுதிச்சுற்று படம்போல் இல்லாமல் இப்படத்தில் இவர் முழுக்க முழுக்க மாடர்ன் தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்குகிறது.
மேலும் வாசிக்க…

சஸ்பென்சை உடைத்த நடிகை; திட்டி தீர்த்த இயக்குனர்..!!

1:03 AM |
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா, சிருஷ்டி டாங்கே என பல நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் தர்மதுரை. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கல்லூரி விழா நடைபெறுவது போன்ற காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் சீனு ராமசாமி.

இதில் விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே போன்றோர் நடித்துக் கொண்டிருக்க படப்பிடிப்பின் இடைவெளியில் விஜய் சேதுபதி மற்றும் தமன்னாவுடன் சிருஷ்டி ஒரு செல்ஃபி எடுத்து அதை அவரது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். இதை பார்த்த இயக்குநர் சீனு ராமசாமி, சிருஷ்டியை அழைத்து காரசாரமாக திட்டி தீர்த்துவிட்டாராம்.

சாரி சார் நான் தான் தெரியாம போட்டுட்டேன் என்று இயக்குநரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். யார் திருஷ்டி பட்டுதோ குழந்தை இப்படி திட்டு வாங்கிடிச்சேன்னு பலர் புலம்பினார்களாம்.

மேலும் வாசிக்க…

விஜய் சேதுபதி ஜோடியாகும் இறுதிச்சுற்று நாயகி..!!

8:05 AM |
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று.

இதில் நாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

இவர் அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
மேலும் வாசிக்க…

முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார் ரித்திகா சிங்..!!

11:59 PM |
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து என்ன படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தத.

இந்நிலையில் தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஆண்டவன் ஆட்டம்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

சின்ன தல யாரு? தொடங்கிய பேனர் பஞ்சாயத்து..!!

2:35 AM |
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என ஒரு போட்டி இருந்தது. தற்போது அடுத்த தலதளபதி யாரு? என்ற நிலை வந்துவிட்டது.

இதில் சிவகார்த்திகேயன் அப்படியே விஜய்யின் பாணியை பின்பற்றுவதால் பலரும் அவரை அடுத்த தளபதி என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, இதனாலேயே இவரை அடுத்த தல என்று ரசிகர்கள் கூற, அஜித்தை போலவே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் திரைக்கு வந்து வெற்றி பெற்றவர் விஜய் சேதுபதி.

சமீபத்தில் இவரின் சேதுபதி படம் திரைக்கு வந்தது. இந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் பேனர், போஸ்டர் என கலைக்கட்டியது. அதில் அனைத்திலும் விஜய் சேதுபதியை ‘சின்ன தல’ என்றே குறிப்பிட்டுயிருந்தனர். இதனால், அடுத்த தல யார் என்ற பஞ்சாயத்து தொடங்கிவிட்டது.
மேலும் வாசிக்க…

ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன்: விஜய் சேதுபதி விளக்கம்..!!

12:00 AM |
தனது ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன் என நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேலார் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘சேதுபதி’.

நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்தை வான்சன் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விமர்சன ரீதியாக இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், தனது ஃபேஸ்புக் கணக்கை நீக்கியது ஏன் என ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

அதில்,

நான் சில காலம் பேஸ்புக்கில் இணைந்திருந்தேன். கமெண்ட்களுக்கு பதில் சொல்வேன், ரசிகர்களின் பாராட்டுக்கு நன்றி சொல்வேன். ஆனால், பேஸ்புக் எனது உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வது போல உணர்ந்தேன். ஒருவர் சோகமான செய்தியைப் பகிர்ந்ததைக் காண நேரிட்டது. ஆனால், அது குறித்து நான் யோசிக்கும் முன்னரே வேறொருவர் நகைச்சுவையான மீம் ஒன்றை அவர் கணக்கில் பகிர்ந்திருந்தார். இது என்னை குழப்பமடையச் செய்தது. அந்தச் செய்திக்காக அழுவதா, இல்லை இந்த மீமுக்காக சிரிப்பதா எனத் தெரியவில்லை. ஒரு மனிதனாக இந்த முரண் என்னை பாதித்தது, அதனால் என் கணக்கை டெலிட் செய்து விட்டேன்.

என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
மேலும் வாசிக்க…

சேதுபதி திரைவிமர்சனம் - Sethupathi Review

2:29 AM |
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் என்ன தான் கேங்ஸ்டர் படம் நடிச்சாலும் சூப்பர் ஸ்டார் முதல் சமீபத்திய ரைசிங் ஸ்டார் வரைக்கும் போலிஸ் ட்ரஸ் அணிந்தால் தான் செம்ம கெத்து. அப்படியிருக்க தொடர்ந்து கிளாஸ் வகை படங்களை செய்து வரும் விஜய் சேதுபதிக்கு மட்டும் மாஸ் காட்ட ஆசை இருக்காதா என்ன?.

அதனால் தான் தன் பேவரட் இயக்குனர் அருணுடன் இணைந்து போலிஸ் லத்தியை கையில் எடுத்திருக்கிறார் சேதுபதி.

கதைக்களம்

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு போலிஸை ஸ்கெட்ச் போட்டு எரித்து விடுகின்றனர். அந்த கொலை விஜய் சேதுபதி போலிஸாக இருக்கும் ஏரியாவில் நடக்க, இந்த கேஸை விஜய் சேதுபதி கையில் எடுக்கிறார்.

போலிஸை கொன்றால் அவன் எவனாக இருந்தாலும் தூக்க வேண்டும் என துடிப்புடன் பல தடயங்களை கண்டுப்பிடிக்க, அந்த ஊரில் மிகப்பெரும் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது.

ஊரே அவரை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க, செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர்.

அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது. இதன் பிறகு விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்ய, வாத்தியார் ஆட்டம் அதிகமாகின்றது. பின் வழக்கம் போல் தன் மீசையை முறுக்கி, விஜய் சேதுபதி தன் இரண்டாவது இன்னிங்ஸில் வாத்தியாரை எப்படி பந்தாடுகிறார் என்பதை மாஸ் கமர்ஷியலாக கூறியிருக்கிறார் அருண்.

படத்தை பற்றிய அலசல்

அட..இது விஜய் சேதுபதி தானா!!! என ஆச்சரியப்பட வைக்கின்றது. முறுக்கு மீசை, தைரியமான போலிஸ் ரம்யா நம்பீசனுக்கு அன்பான கணவன், குழந்தைகளுக்கு பாசமுள்ள அப்பா என்று முழு மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார். கிளாஸில் இருந்து மாஸிற்கு ப்ரோமோஷன் கிடைத்து விட்டது சேதுபதி. வாழ்த்துக்கள்.

ரம்யா நம்பீசன் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததற்கே பாராட்டலாம், இளம் நடிகைகள் யாரும் துணிந்து நடிப்பார்களா என்றால் கேள்விக்குறி தான், ‘என் புருஷன் காலையில சண்டைப்போட்டா, மாலையில் என்னை கொஞ்ச வருவான், அதுக்காகவாது நான் அவர் கூட இருக்க வேண்டும்’ என விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக கலக்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய ஹைலைட் விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவம் தான், ஒரு மாஸ் போலிஸ் என்றாலும் எந்த இடத்திலும் செயற்கையாக தெரியக்கூடாது என்று கொஞ்சம் மெனக்கெட்டுள்ளனர். குழந்தை முன்பு புகார் கொடுக்க வரும் கணவனை, குழந்தையை வெளியே போகச் சொல்லி விட்டு திட்டுவது, தன் மகள் முன்பு மனைவியை அடித்தததை சமாளிப்பது என யதார்த்த காப் இந்த சேதுபதி.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பல காட்சிகள் மிகவும் ரியலாக உள்ளது, அதை விட ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், வேகமான திரைக்கதைக்கு செம்ம ப்ளஸ் கூட்டியிருக்கின்றது. தெகிடி படத்தை தொடர்ந்து நிவாஸின் இசை சேதுபதியிலும் மிரட்டல். ஆனால், தீவிர அனிருத் ரசிகராக இருப்பார் போல, விஐபி, காக்கிசட்டை இசையெல்லாம் வந்து போகின்றதே.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுவென செல்கின்றது, அதிலும் விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லன் கும்பலை போனிலேயே மிரட்டும் சீன் தியேட்டர் விசில் சத்தத்தில் அதிர்கின்றது.

படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன டுவிஸ்டுகள், நம் கவனம் ஒரு போலிஸிடம் இருக்கும் போது, அதை அழகாக திசை திருப்பும் காட்சி.

ஸ்ரீகர் பிரசாத்தின் விறுவிறு எடிட்டிங். விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் காதல் காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன வில்லன், இரண்டாம் பாதியில் யூகிக்க கூடிய டுவிஸ்டுகள்.

படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் பெரிய விளக்கம் இல்லாமல் உடனே முடிவது போல் இருக்கும் காட்சியமைப்புகள்.

வில்லன் விஜய் சேதுபதி மீது காட்டும் கோபம், அவர் குடும்பதை தூக்க ப்ளான் போடுவது தான் ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை, அதற்குள் கிளைமேக்ஸே நெருங்கிவிடுகின்றது.

மொத்தத்தில் ரவுடி விஜய் சேதுபதியை விட இந்த போலிஸ் சேதுபதி செம்ம கெத்து.

ரேட்டிங்- 3.25/5
மேலும் வாசிக்க…
2015 Thediko.com