கன்னட நடிகை சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுருதி(24). இவர் திருமணம் ஆனவர். கணவர் பெயர் உமேஷ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுருதி கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
சுருதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் என்பவர் தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு சுருதிக்கு அழைப்பு விடுத்தார். இருவரும் விருந்தில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சுருதி கோபத்தோடு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாதைக் கண்ட ஸ்ரீகாந்த் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி சுருதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் சுருதியின் கணவர் உமேஷ் போலீஸாரிடம் அளித்த புகாரில் சுருதி தற்கொலை செய்யவில்லை. அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறி உள்ளார்.
Tags:
Cinema
,
கன்னட நடிகை சுருதி
,
சினிமா
,
நடிகை சுருதி