என் கேரக்ட்ரையே புரிஞ்சிக்க மாட்றீயே! என்றே ஒரே வசனத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தன்னை நோக்கி கவனத்தை ஈர்க்க வைத்தவர் சத்யராஜ்.
6 அடி உயரம், வெள்ளை நிறம் என பாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக திரையில் தோன்றி ஹீரோவாக கலக்குவார் என்று பார்த்தால் ஆரம்ப காலத்தில் பல படங்களில் வில்லனாக தான் ஜொலித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்த நடிகர்.இதில் அவர்களையும் தாண்டி தன் நடிப்பால் மக்களை ரசிக்க வைத்தவர்.
சோலோ ஹீரோவாகவும் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். ஹீரோ என்றால் நல்லது செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை, என அமைதிப்படை படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.பெரியாரின் கொள்கை படித்தால் மட்டும் போதாது, அதன்படி நடக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையிலும் அவர் கொள்கை படியே நடிப்பவர்.
இதுமட்டுமின்றி பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பெரியாராக நடித்து அசத்தியிருந்தார்.தற்போது இன்றைய ஹீரோக்களுக்கும் போட்டியாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பன் என ஹீரோக்களுக்கு நிகராக நடித்து கலக்கி வருகிறார். நடிகனின் பாதை எல்லைகளை தாண்டியது என ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ், ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என மற்ற மொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.
இவரின் பிறந்தநாளான இன்று பலரும் டுவிட்டரில் உள்ள சிபிராஜிடம் வாழ்த்துக்களை கூறிவிட்டு, ‘இன்றாவது அப்பாவை கூற சொல்லுங்கள், ஏன் பாகுபலியை கொன்றார் என’ என கேட்டு வருகின்றனர். சொல்வாரா கட்டப்பா? சினி உலகம் சார்பாக ஆல் ரவுண்டர் சத்யராஜ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tags:
Cinema
,
சத்யராஜ் ஸ்பெஷல்
,
சினிமா