நிராகரிக்கபட்ட சூர்யா படம் அதிர்ச்சியில் திரையுலகம்..!!

10:31 PM |
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். பல ஹிட் படங்கள் கொடுத்தவரும் அவரின் படம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று கெட்டப்பில் நடித்து கடந்த மே மாதம் வெளியான படம் 24. இதில் சமந்தா, நித்யா மேனன் என முன்னணி நடிகைகள் நடிக்க டைம் ட்ராவல் வாட்சை வைத்து வித்யாசமான கதையுடன் எடுக்கப்பட்டது.

படம் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கபட்டாலும், படம் தற்போது தேர்வாக வில்லை என்பதே தற்போதைய தகவல்.

இந்தியாவின் கோவாவில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் பல மொழிகளை சேர்ந்த படங்கள் இடம் பெறுவது வழக்கம்.

ஆனால் இதில் சூர்யாவின் 24 படம் நிறைய அயல்நாட்டு விஷயங்களோடு இருப்பதால் இதை கமிட்டி தேர்ந்தெடுக்கவில்லை.

மேலும் இதில் மாதவன், ரித்திகாசிங் நடித்த இறுதிச்சுற்று படம் தேர்வாகியுள்ளது.
மேலும் வாசிக்க…

சூர்யாவின் "24" படத்தில் இடம் பெற்ற தொழில்நுட்ப மேஜிக்கை பாருங்கள்! வீடியோ

1:47 AM |
மேலும் வாசிக்க…

மீண்டும் காதல், காதலன் யார்? சமந்தாவின் அதிரடி பதில்..!!

11:04 PM |
சமந்தா தெறி, 24 வெற்றியில் சந்தோஷத்தில் உள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்தை காதலிக்கின்றார் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரின் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இவர் ‘நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னேனா..?, ஆனால், இதுப்பற்றி எனக்கு பேசவிருப்பம் இல்லை’ என கூறியுள்ளார். எது எப்படியோ சமந்தா காதலில் விழுந்தது உறுதியாகிவிட்டது.
மேலும் வாசிக்க…

24 படத்தில் டோணியுடன் செல்பி எடுக்கும் சூர்யா... எப்படி சாத்தியமானது தெரியுமா??

5:01 AM |
சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் 24 படத்தின் ஒரு காட்சியில் டோணியுடன் சூர்யா செல்பி எடுப்பதை கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு காட்சியை படக்குழுவினர் அமைத்திருப்பது டோணி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் '24'.

'யாவரும் நலம்' புகழ் விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.

இன்று வெளியாகியிருக்கும் '24' திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 குறிப்பாக ஆத்ரேயா என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக சூர்யா மிரட்டியிருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடித்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனால் அவர் யாராக இருப்பார் என ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் அந்த வீரர் யார்? என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட்  அணித் தலைவர்  மகேந்திர சிங் டோணி தான் அந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் மைதானத்தில் டோணியுடன், சூர்யா செல்பி கிளிக்குவது போல கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு காட்சியை படக்குழு அமைத்துள்ளது.

இப்படத்தில் டைம் மெஷின் தவிர 'ப்ரீஸ் டைம்' (உறைந்து போதல்) என்ற கருப்பொருளை வைத்தும், விக்ரம் குமார் காட்சிகள் அமைத்திருக்கிறார்.

அதில் ஒரு காட்சிதான் டோணியுடன் சூர்யா செல்பி எடுப்பது. டோணி உண்மையில் நடிக்கவில்லை என்றாலும், இந்தக் கிராபிக்ஸ் காட்சி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

’டிடி’யை அதிர்ச்சியாக்கிய நித்யா மேனன்..!!

1:37 AM |
சின்னத்திரை தொகுப்பாளர்களில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவர் சமீபத்தில் 24 படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார்.

இதில் சூர்யா, நித்யா மேனன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நித்யா மேனனிடம், டிடி ‘உங்களை பற்றி ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்’ என கேட்டார்.

அதற்கு நித்யா மேனன் ‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என கூறுவேன்’ என கூற டிடி ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டார்.
மேலும் வாசிக்க…

எனக்கும் விக்ரமிற்கும் சண்டையா? சூர்யா ஓபன் டாக்..!!

11:55 PM |
சூர்யா நடிப்பில் இந்த வாரம் 24 படம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட சூர்யாவிடம், ‘உங்களுக்கு நடிகர் விக்ரமிற்கும் ஏதும் சண்டையா’ என கேட்டனர்.

சூர்யா சிரித்துக்கொண்டே ‘யார் இப்படியெல்லாம் கூறுவது, நான் அவரின் ஐ படம் பார்த்து முடித்த பிறகு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினேன், தற்போது கூட அவர் இயக்கிய ஆல்பத்தில் நான் நடித்தேன், அப்படியெல்லாம் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

Kaalam Yen Kadhali | Lyrical Video Song | 24 Tamil Movie | A.R Rahman | Benny Dayal | Suriya

5:35 AM |
மேலும் வாசிக்க…

24 சிங்கிள் ட்ராக் காலம் என் காதலி பாடல் எப்படி? ஒரு பார்வை

4:15 AM |
சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி இசை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர் 24 படத்தின் சிங்கிள் ட்ராக்கிற்காக தான்.

ஏனெனில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த வருடம் வெளிவரும் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இது.

எல்லோரும் இந்த பாடல் முதல் வரியை கேட்டு பலரும் ரொமாண்டிக் பாடல் என நினைத்திருந்த நிலையில், ‘மாயம் இல்லை, மந்திரம் இல்லை, ஆக்கும் அறிவே வா’ என முழுக்க முழுக்க விஞ்ஞானம் சம்மந்தமாகவே பாடல் உள்ளது.

வழக்கம் போல் தான்... முதன் முறையாக கேட்கும் போது வார்த்தைகள் ஒன்றும் புரியவில்லை என்றாலும், ரகுமான் பாடல் அல்லவா..

இன்னும் சில நாட்களில் பலரின் ரிங்டோன் இந்த காலம் என் காதலி தான்.


மேலும் வாசிக்க…

கவர்ச்சி நடிகைகளுக்கு சமந்தா கொடுத்த அதிர்ச்சி..!!

1:41 AM |
தமிழில், பாணா காத்தாடி படத்தில் நடித்த சமந்தாவுக்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கிற்கு சென்றார். அங்கு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக அமைந்ததால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார்.

குறிப்பாக, அங்கு மிதமான கிளாமராக நடித்து வந்த சமந்தா, படுகவர்ச்சியாக நடித்த நடிகைகளையே ஓரங்கட்டி முன்னணி வகித்து வந்தார். என்றாலும், தமிழிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்ததால் கெளதம்மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர், அஞ்சான், கத்தி, தங்கமகன், பத்து எண்றதுக்குள்ள, தெறி, 24 என பல படங்களில் நடித்து விட்டார்.

அந்தவகையில், தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா.ஆனால், இப்படி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் காட்டியதால் தெலுங்கில் அவருக்கான படங்களை மற்ற நடிககைளை கைப்பற்றி வந்தனர். இந்த நிலையில், தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் சறுக்கியதால், இப்போது மறுபடியும் தெலுங்கில் கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார் சமந்தா.

அந்த வகையில், முன்பு தான் தொடர்ச்சியாக நடித்து வந்த முன்னணி தெலுங்கு நடிகர்களான மகேஷ்பாபு, நாக சைதன்யா, ராம் சரண் தேஜா போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கும் சமந்தா, இந்த படங்களில் தமிழில் அஞ்சானில் நடித்தது போன்று பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து, ஆந்திராவின் கவர்ச்சி கதாநாயகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்க…

"24" Teaser is Kickass

4:00 AM |
Suriya’s much awaited ’24’ was supposed to release today on the 24th of this month but got delayed. The reason behind this is that the makers wanted to present the teaser with great quality and they have some unfinished work.

Rajsekar Pandian of 2D entertainment came with an update yesterday night.

#24Update Teaser is ready and sent for CG!! Pushing for earliest but not this month!!! Thanks for being patient!! Won’t let you down friends!!

The industry circles who have seen the teaser have already started raving about the teaser and Suriya has said that this movie is one of his most ambitious films and his fans are eagerly waiting. The teaser is around 1 minute 20 seconds and currently DI work is going on.

Producer SR Prabhu of Studio Green posted, “#24 teaser is #kickass just wait for it! #Aathreyadaa “
மேலும் வாசிக்க…

சூர்யாவால் தூக்கத்தை தொலைத்த கார்த்தி..!!

2:08 AM |
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் 24. இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரவித்துள்ள சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி, ” ஒவ்வொரு முறையும் தனது அர்பணிப்பின் மூலம் இவர் என்னை தூங்க விடாமல் செய்கிறார். இந்த போஸ்டரையே பாருங்கள்” என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மேலும் வாசிக்க…

யார் மீது கோபமோ?..!!

2:42 AM |
சமீப காலமாகவே சமந்தா, நெருப்பாக இருக்கிறார். சமீபத்தில் தன், 'மாஜி' காதலர் சித்தார்த்தை, டுவிட்டரில் வறுத்தெடுத்த சமந்தா, இப்போது, சக நடிகையர் மீது தன் ஆக் ஷன் அவதாரத்தை துவக்கியுள்ளார்.

'நான் படப்பிடிப்புகளுக்கு வரும்போது தனியாகத் தான் வருகிறேன். அப்பா, அம்மா, சொந்தம், சுற்றம் என, ஒட்டு மொத்த பரிவாரத்தையும் அழைத்து வந்து, தயாரிப்பாளர்களின் காசை கரியாக்குவது இல்லை' என, சீறியுள்ளார்.

திரைப்படத் துறையினரோ, 'இந்த பொண்ணுக்கு யார் மீது கோபம் என தெரியவில்லையே' என, மண்டை காய்ந்து போயுள்ளனர்.

 இது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழில், கிட்டத்தட்ட, நம்பர் ஒன் இடத்தை எட்டிப் பிடித்துள்ளார் சமந்தா. தனுஷுடன் தங்க மகன், சூர்யாவுடன், 24, விஜயுடன் தெறி, என, முன்னணி நடிகர்களின் படங்களை வசப்படுத்தி, சக நடிகையரை கதறடித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com