சிறுத்தை சிவா- அஜீத் அஜீத் 3 வது முறையாக இணையும் தல 57 படத்திற்காக, ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை அஜீத் செய்து வருகிறார்.
வீரம், வேதாளம் என்று ஏற்கனவே இணைந்த அஜீத்-சிவா கூட்டணி மீண்டும் தல 57 படத்திற்காக 3 வது முறையாக இணைகிறது.
அஜீத் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது.
படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று 3 மாதங்களில் மொத்தப் படத்தையும் முடித்து, தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட சிவா திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.முழங்கால் அறுவைசிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்த அஜீத் தற்போது தல 57 படத்திற்காக வேகமாக தயாராகி வருகிறார்.
இதற்காக தினசரி ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை அஜீத் மேற்கொண்டு வருகிறார். தற்போது அஜீத் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.தனது 2 படங்களிலும் அஜீத்தை சால்ட் & பெப்பர் தோற்றத்திலேயே சிவா காட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்திலாவது 'பில்லா' அஜீத்தை மீண்டும் பார்க்கலாமா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ரசிகர்களின் ஆர்வத்தை அஜித்தும்-சிவாவும் பூர்த்தி செய்வார்களா?
3 வது முறையாக இணையும் தல 57 படத்திற்காக, ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை அஜீத் செய்து வருகிறார்.வீரம், வேதாளம் என்று ஏற்கனவே இணைந்த அஜீத்-சிவா கூட்டணி மீண்டும் தல 57 படத்திற்காக 3 வது முறையாக இணைகிறது.
Tags:
Cinema
,
அஜீத்
,
சிவா
,
சினிமா
,
பில்லா
,
வீரம்
,
வேதாளம்