பிரபல நடிகை திரிஷா விரைவில் மற்றொரு படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். திரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு கர்ஜனை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சின்னதிரை நடிகர் அமித் பார்கவ் திரிஷாவிற்கு கணவன் வேடம் ஏற்கிறார்.
இது குறித்து அமித் நம்மிடம் கூறுகையில், என் நண்பர் சுந்தர் தான் என்னை இந்த வேடத்திற்கு கர்ஜனை படத்தின் இயக்குனரிடம் சிபாரிசு செய்தார். நான் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்து வருவதால் ஒத்திகை பார்க்காமல் என்னை செலக்ட் செய்துவிட்டார் இயக்குனர். நான் த்ரிஷாவுக்கு கணவானாக நடிப்பதை என்னால் நம்ப முடியவில்லை, பிரம்மிப்பாக உள்ளது.
தற்போது, த்ரிஷா இல்லைதா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில், திரிஷாவின் தேதிகள் கிடைத்தவுடன் அவருடனான காட்சிகள் படமாக்கப்படும் என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அமித் பார்கவ்
,
கணவன்
,
கர்ஜனை
,
சினிமா
,
திரிஷா