சமீப காலமாகவே சமந்தா, நெருப்பாக இருக்கிறார். சமீபத்தில் தன், 'மாஜி' காதலர் சித்தார்த்தை, டுவிட்டரில் வறுத்தெடுத்த சமந்தா, இப்போது, சக நடிகையர் மீது தன் ஆக் ஷன் அவதாரத்தை துவக்கியுள்ளார்.
'நான் படப்பிடிப்புகளுக்கு வரும்போது தனியாகத் தான் வருகிறேன். அப்பா, அம்மா, சொந்தம், சுற்றம் என, ஒட்டு மொத்த பரிவாரத்தையும் அழைத்து வந்து, தயாரிப்பாளர்களின் காசை கரியாக்குவது இல்லை' என, சீறியுள்ளார்.
திரைப்படத் துறையினரோ, 'இந்த பொண்ணுக்கு யார் மீது கோபம் என தெரியவில்லையே' என, மண்டை காய்ந்து போயுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழில், கிட்டத்தட்ட, நம்பர் ஒன் இடத்தை எட்டிப் பிடித்துள்ளார் சமந்தா. தனுஷுடன் தங்க மகன், சூர்யாவுடன், 24, விஜயுடன் தெறி, என, முன்னணி நடிகர்களின் படங்களை வசப்படுத்தி, சக நடிகையரை கதறடித்து வருகிறார்.
Tags:
24
,
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
தங்க மகன்
,
தெறி
,
யார் மீது கோபமோ