தமிழில், பாணா காத்தாடி படத்தில் நடித்த சமந்தாவுக்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கிற்கு சென்றார். அங்கு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக அமைந்ததால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார்.
குறிப்பாக, அங்கு மிதமான கிளாமராக நடித்து வந்த சமந்தா, படுகவர்ச்சியாக நடித்த நடிகைகளையே ஓரங்கட்டி முன்னணி வகித்து வந்தார். என்றாலும், தமிழிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்ததால் கெளதம்மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர், அஞ்சான், கத்தி, தங்கமகன், பத்து எண்றதுக்குள்ள, தெறி, 24 என பல படங்களில் நடித்து விட்டார்.
அந்தவகையில், தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா.ஆனால், இப்படி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் காட்டியதால் தெலுங்கில் அவருக்கான படங்களை மற்ற நடிககைளை கைப்பற்றி வந்தனர். இந்த நிலையில், தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் சறுக்கியதால், இப்போது மறுபடியும் தெலுங்கில் கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார் சமந்தா.
அந்த வகையில், முன்பு தான் தொடர்ச்சியாக நடித்து வந்த முன்னணி தெலுங்கு நடிகர்களான மகேஷ்பாபு, நாக சைதன்யா, ராம் சரண் தேஜா போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கும் சமந்தா, இந்த படங்களில் தமிழில் அஞ்சானில் நடித்தது போன்று பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து, ஆந்திராவின் கவர்ச்சி கதாநாயகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
24
,
Cinema
,
கத்தி
,
சமந்தா
,
சினிமா
,
தெறி
,
பத்து எண்றதுக்குள்ள
,
பாணா காத்தாடி