எதை தின்றால் பித்தம் தெளியும் என்றுதான் இருக்கிறது பலரது சினிமா முயற்சிகள். புதுசாக முயலலாம். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்? அதனால் பழசையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதும் இதே ஏரியாவில்தான்! தலைப்பு வைக்கிற விவகாரத்தில் கூட, முழுசாக ஒரு முடிவுக்கு வர முடியாதளவுக்கு ஆயிரம் யோசனைகள், இடைஞ்சல்கள். இந்த நேரத்தில்தான் ஒரு புதிய முயற்சியாக ‘பிளாக் அண்ட் ஒயிட்’ படம் ஒன்றில் நடிக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் அஜீத்.
அவரது அடுத்த படம் வேதாளம் சிவாவுக்குதான் என்பது கிட்டதட்ட முடிவான ஒன்று. இப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது என்பதும் சற்றே உறுதிபடுத்தப்பட்ட தகவல்தான். நிச்சயம் இந்த படத்தை அஜீத் கருப்பு வெள்ளை படமாக்க முயலப் போவதில்லை. அப்படியென்றால்?
யெஸ்… ராஜராஜ சோழன் கதையில் அஜீத் நடிக்கிறார் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? அதற்காக எழுத்தாளர் பாலகுமாரனிடம் கதை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். இந்த படத்தைதான் கருப்பு வெள்ளையில் படமாக்கப் போகிறார்கள் என்றொரு தகவல் கசிகிறது. அப்படியொரு படம் இப்போது வருமாயின், அப்படியே வந்து ஹிட் அடித்துவிட்டால், ஊரில் பாதி இயக்குனர்களுக்கு நிறக்குருடு ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை.
ஏனென்றால், உலகம் வெற்றியை நோக்கிதானே ஓடிக் கொண்டிருக்கிறது?
Tags:
Cinema
,
அஜித்
,
கறுப்பு வெள்ளை படத்தில் நடிக்கும் அஜித்
,
சினிமா