நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். பல ஹிட் படங்கள் கொடுத்தவரும் அவரின் படம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று கெட்டப்பில் நடித்து கடந்த மே மாதம் வெளியான படம் 24. இதில் சமந்தா, நித்யா மேனன் என முன்னணி நடிகைகள் நடிக்க டைம் ட்ராவல் வாட்சை வைத்து வித்யாசமான கதையுடன் எடுக்கப்பட்டது.
படம் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கபட்டாலும், படம் தற்போது தேர்வாக வில்லை என்பதே தற்போதைய தகவல்.
இந்தியாவின் கோவாவில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் பல மொழிகளை சேர்ந்த படங்கள் இடம் பெறுவது வழக்கம்.
ஆனால் இதில் சூர்யாவின் 24 படம் நிறைய அயல்நாட்டு விஷயங்களோடு இருப்பதால் இதை கமிட்டி தேர்ந்தெடுக்கவில்லை.
மேலும் இதில் மாதவன், ரித்திகாசிங் நடித்த இறுதிச்சுற்று படம் தேர்வாகியுள்ளது.
Tags:
24
,
Cinema
,
அதிர்ச்சி
,
சமந்தா
,
சினிமா
,
சூர்யா
,
நித்யா மேனன்
,
மாஸ் ஹீரோ