ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய சுய சரிதை…! ‘திருமணம் வரை..! சில துரோகம்..! நடுங்கும் ‘அந்த’ நடிகர்..!!

10:54 PM |
ஐஸ்வர்யா தனுஷ் ஒரு திரைப்பட இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும்..! ஆனால், அவர் ஒரு சிறந்த பரத நாட்டிய கலைஞர் என்பது பலருக்கு தெரியாது..!

பின்னணிப்பாடகர் என்பது கூட பலருக்கு தெரியாது.! அதே நேரம் தன்னை சிறந்த எழுத்தாளராகவும் நிரூபிக்க முடிவு செய்து விட்டார்.

ஆமாம். தனது சுய சரிதை ஒன்றை எழுதி முடித்து விட்டார். அந்த நூலுக்கு ‘ஸ்டேன்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்’ என்று பெயர் இட்டுள்ளார்.

அதில் தனது திருமண வாழ்க்கை வரை கடந்து வந்த பாட்டை பற்றியும் நல்லவர்கள்..கெட்டவர்கள்..நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்..அப்பா,அம்மா தங்கையின் அளப்பரிய பாசம்..என தனது அனுபவங்களை அவரது நடையில் எழுதியுள்ளார்.

கேள்விப்பட்ட ‘அந்த’ வில்லங்க நடிகர் ஆடிப் போய் இருகிறாராம்.! புத்தகம் வருகிற டிசம்பர் 12 சூப்பர்ஸ்டார் பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தனுஷ் யாருடைய மகன் – ஆதாரம் உள்ளே..!!

11:18 PM |
நடிகர் தனுஷின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. அவரது பர்சனல் வாழ்கையும் சரி திரையுலக வாழ்கையும் சரி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக போய்க்கொண்டிருக்கிறது. அவரது அண்ணன், மனைவி, மாமனார் என எல்லோருமே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள்.

அப்படி இருக்கும்போது கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்கள் மகன் தனுஷ் 16 வயதில் வீட்டைவிட்டு ஓடியதாகவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் குழந்தை முதலே தனுஷ், கஸ்தூரி ராஜாவுடன் இருந்ததற்கான ஆதாரமாக அவர்களின் பழைய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க…

அந்த நேரத்தில் என் உயிர் பிரியவேண்டும் நடிகை திரிஷா உருக்கம்..!!

12:19 AM |
திரிஷா அஜித், விஜய் , சூர்யா, விக்ரம், கமல் என பெரிய நடிகர்களோடு படங்களில் நடித்து விட்டார்.

நயன்தாரா வந்தபோது தமிழ் சினிமாவிற்கு வந்தாலும் இருவருமே நல்ல நண்பர்கள்.

சமீபத்தில் தனுசுடன் கொடி படத்தில் நடித்து ஹிட்டானதால் மிக மகிழ்ச்சியான அவர் திருமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் தந்திருந்தார்.

எனக்கு திருமண ஆசை இல்லை. சினிமாவில் தொடந்து நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியிருந்ததார்.

தற்போது அவர் சினிமாதான் உயிர்மூச்சு எனவே நடித்து கொண்டிருக்கும் போதே உயிர் பிரியவேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருமணம் நின்று போனது கூட சினிமாவில் நடிப்பதற்காகத்தான் என கூறினார்.

மேலும் வாசிக்க…

தனுஷ்- ஐஸ்வர்யா பற்றிய ரகசியம் இதோ..!!

1:04 AM |
தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தபோது, ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்தனர். ஆனால், திடீரென இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தங்களது காதல் குறித்து தனுஷ் கூறியதாவது, லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன்.

அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடுபடிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும்நட்பாகத்தான் பழகினோம்.

 படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள்சந்திக்கவில்லை. துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க.

ஒவ்வொருகாட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்கவந்தபோது, என்னுடனும் நிறைய நேரம் பேசுவார்கள்.

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டுபாராட்டினாங்க.

அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத்தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம். பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க…

மச்சினிச்சியின் கணவரை பற்றி படம் எடுக்க போகும் தனுஸ்..!!

1:06 AM |
தனுஷ் ஒரு மாஸ் நியூஸ் தரப்போறேன்னு தன் டிவிட்டரில் சொல்லிட்டே இருந்தார். அடுத்த விஜய் படத்தை தயாரிக்கப்போகிறாரா? ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனுஷ் படத்தில் நடிக்கப்போகிற செய்தியா என்றெல்லாம் மக்கள் ஆவலாக எதிர்பார்த்த இந்த சூழலில் …அந்த மாஸ் செய்தியை சொல்லிட்டார் .
வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதும், அனிருத் இசை என்பது தான் அந்த செய்தியாம்.

சௌந்தர்யாவுக்கும் அவரது கணவருக்கும் மன வேறுபாடு வந்தபோது, வேலையில்லா பட்டதாரி படம் வந்தது. அந்த படத்தில் அஸ்வின் என்று வில்லனுக்கு பேர் வைத்தது, அப்போது ரஜினி சம்பந்தி வீட்டில் பெரிய கடுப்பை ஏற்படுத்தியது.

இப்போ இரண்டாம் பாகம்…செஞ்சிடுங்க….
மேலும் வாசிக்க…

கௌதமி- கமல் பிரிவதற்கும் தனுஷ் தான் காரணம்..!!

12:37 AM |
என்னமோ போங்க நாடு போற போக்கு அவ்வளவு சரியாப் படலை..! லோகம் ரொம்ப கேட்டுக் கிடக்குது..மனுஷாள் ரொம்ப மோசம் போங்கோ..!!

இப்படித்தான் கோடம்பாக்கமே புலம்புகிறது. தானுண்டு தனது மச்சினிச்சி உண்டுன்னு தனுஷ் அமைதியா இருந்தாலும் மனுஷாள் விட மாட்டா போல..!

கமல் கௌதமி பிரிவதற்கும் தனுஷே காரணம் என்கிறார்கள். அதை விட முகநூல் வட்டம் கழுவி கழுவி ஊற்றுகிறது..!

இங்கு இரண்டு பெண்களை பார்சல் செய்தவர் அடுத்து அந்த வீட்டு இரண்டு பெண்களையும் டார்கெட் பண்ணி விட்டார். அதனால் தான் ஸ்ருதிஹாசன் மூலமாக காய் நகர்த்தி கௌதமியை தூக்கி விட்டார் எனும் வதந்தி வலைத்தளங்களில் தீயாகப் பரவுகிறது..!!
மேலும் வாசிக்க…

சிவா-வை தொடர்ந்து மேடையிலேயே அழுத தனுஷ் காரணம் என்ன?

12:07 AM |
தனுஷ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிப்பில் நேற்று கொடி படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷிடம் அவருடைய அம்மாவை பற்றி கேட்டனர்.

தன் அம்மா சிறுவயதில் தங்களுக்காக எத்தனை கஷ்டத்தைப்பட்டார் என்பதை கூறிக்கொண்டே இருக்கும் போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார்.

சில நிமிடங்கள் மிகவும் எமோஷ்னலாகவே அந்த பேட்டியில் தனுஷ் பேசி வந்தார்.
மேலும் வாசிக்க…

அந்த படத்தில் நடிக்க ஓ.கே சொன்ன அமலா பால்..!!

11:13 PM |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து முன்னணி நடிகர்களோடு நடித்து நிறைய ஹிட் கொடுத்த அமலா பால் இயக்குனர் விஜயை திருமணம் செய்து பின் சமீபத்தில் விவாகரத்து செய்தார்.

நடிகர் தனுஷ் படங்களில் சமீபத்தில் நிறைய நடித்தவர் அவரின் ராசியான நடிகையாக கருதப்பட்டார்.

தற்போது சிங்கிளாக இருப்பது தான் சந்தோசமாக இருக்கும் என நினைக்கும் அவர் இயக்குனர் சுசி கணேசன் எடுத்த திருட்டு பயலே படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. படத்தில் ஏகப்பட்ட கசமுசா காட்சிகள் இருப்பதால் பல நடிகைகள் தெறித்து ஓடிகொண்டிருக்க அமலா பால் அதிரடியாக ஓ.கே சொல்லி இருகிறாராம்.

மேலும் இதில் பாபி சிம்ஹா, மற்றும் பிரசன்னாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலா பாலின் மார்க்கெட்டை கொண்டு தான் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாம்.

திருமணத்திற்கு பிறகும் படத்தில் நடிப்பதால் தான் அவருக்கு பிரச்சனை வந்தது. தற்போது மீண்டும் இன்னொரு அதிரடி கொடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க…

கொடி திரைவிமர்சனம் - Kodi Review

10:31 PM |
இன்றைய அரசியல்வாதியின் கதையை கமர்ஷியலாக கூறியிருக்கும் படம் தான் இந்த கொடி.

கதை களம் :

வாய் பேச முடியாத ஊமையாக வருகிறார் கருணாஸ். அவருக்கு அரசியலில் சாதிக்கவேண்டும் என்ற பெரிய ஆசை உண்டு. இந்த நிலமையில் இவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.

ஒரு கட்டத்தில் கட்சிக்காக கருணாஸ் தீ குளித்து இறந்து விடுகிறார். இதை தொடர்ந்து ஒரு பையன் அரசியல்வாதியாக ஆகிறார். அவர் தான் கொடி. மற்றொரு பையன் ஆசிரியர் ஆகிறார்.

அரசியல்வாதியாக இருக்கும் தனுஷும் எதிர்க்கட்சி அரசியலில் இருக்கும் த்ரிஷாவும் காதலிக்கின்றனர். ஆசிரியர் தனுஷ் அனுபமாவை காதலிக்கிறார்.

தனது அண்ணன் மூலமாக தான் காதலிக்கும் அனுப்புமாவிற்கு உதவுகிறார் தனுஷ். அங்கிருந்து பிரச்னை தொடங்குகிறது. இதை தொடர்ந்து தனுஷ் – த்ரிஷா காதல் என்ன ஆனது ? அரசியலில் இவர்கள் நிலைமை என்ன ? தம்பி தனுஷ் உதவிய அனுப்புமாவின் பிரச்சனை என்ன ஆனது ? என்பது மீதி கதை.

படத்தில் நடித்தவர்கள் :

தனுஷ் படத்தின் பெரிய பலம். இரண்டு கதாபாத்திரத்திலும் அசத்தியுள்ளார். அரசியல்வாதியாக இவர் செய்யும் வேலைகள் ரசிக்கவைக்கிறது.

த்ரிஷா நடிப்பில் பிரமாதம். நெகடிவ் கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக நடித்துள்ளார். அனுபுமா இரண்டாம் கதாநாயகியாக வருகிறார். தமிழில் முதல் படம் என்றாலும் நன்றாக நடித்துள்ளார்.

தனுஷின் அம்மாவாக வரும் சரண்யா எப்போதும் போல எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் கட்சி தலைவராக வரும் சந்திரசேகர் நடிப்பில் நன்று.

படத்தின் பிளஸ் :

தனுஷ் மற்றும் த்ரிஷாவின் நடிப்பு தான் படத்தின் பெரிய பலம்.

படத்தின் திரைக்கதை வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் தனுஷின் ட்ரான்ஸ்பெர்மேஷன் காட்சி மிரட்டலாக உள்ளது.

படத்தின் பின்னணி இசை மற்றும் வீடியோ காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

அரசியலில் முன்னேறுவதற்காக த்ரிஷா செய்யும் வேலைகள் பயங்கரம்.

படத்தின் மைனஸ் :

படத்தில் உள்ள மற்ற முக்கியமான கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

அரசியலில் சதி செய்து உடனுக்குடன் MLA மற்றும் MP ஆவது கொஞ்சம் லாஜிக் மீறல்.

மொத்தத்தில் கொடி :

கண்டிப்பாக இந்த கொடி – வெற்றிக்கொடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அணைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து பார்க்கும்படி படம் அமைந்துள்ளது.

கொடி படத்தின் ரேடிங் – 3.25 / 5
மேலும் வாசிக்க…

அடி மேல் அடி வாங்கும் தனுஷ் என்ன செய்ய போகிறார்?

10:15 PM |
தனுஷின் ஹாலிவுட் படத்தை இயக்கவிருந்த மர்ஜான் சத்ராபி வெளியேறியுள்ளதால் அந்த படம் துவங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனுஷ் ஈரானை சேர்ந்த மர்ஜான் சத்ராபியின் இயக்கத்தில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டே துவங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் படப்பிடிப்பு 2017ம் ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர் படத்தை விட்டு வெளியேறிவிட்டாராம். இதனால் பட வேலைகள் துவங்குமா இல்லையா என்று தெரியவில்லை.

பிரபல ஹாலிவுட் நடிகை உமா தர்மன் நடிக்கவிருந்த இந்த படத்திற்கு தனுஷை தேர்வு செய்ததே மர்ஜான் தான். இந்நிலையில் மர்ஜான் படத்தில் இருந்து வெளியேறியிருப்பதால் தனுஷின் ஹாலிவுட் கனவு பலிக்காமல் போய்விட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் படங்களை பார்த்து அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரை ஒப்பந்தம் செய்தார் மர்ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

தனுஷை ஆஹா..! ஓஹோ..! என்று புகழும் த்ரிஷா காரணம் இருக்குங்கோ..!!

12:28 AM |
தனுஷின் உதவி இல்லாமல் கொடி படத்தில் தன்னால் சிறப்பாக நடித்திருக்க முடியாது என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் கொடி. கொடி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. படத்தில் த்ரிஷா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.

படம் மற்றும் தனுஷ் குறித்து த்ரிஷா பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கொடி படத்தில் எனது கதாபாத்திரம் கொஞ்சம் வில்லித்தனமாக இருக்கும். நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரம் இது. அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உற்சாகமாக இருந்தது.

தனுஷும், நானும் சினிமா துறையில் பல ஆண்டுகளாக உள்ளோம். விருது விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்துள்ளேன். தற்போது தான் முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன்.

இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று கூட தோன்றியது. தனுஷ் இல்லாமல் என்னால் இவ்வளவு நன்றாக நடித்திருந்திருக்க முடியாது. அவர் எனக்கு அவ்வளவு உதவி செய்துள்ளார். அவர் மீதுள்ள மரியாதை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

சண்டை காட்சி உள்ளிட்ட சில காட்சிகள் குறித்து படித்தபோது பயமாக இருந்தது. தனுஷ் தான் எனக்கு அதை நடித்துக் காட்டி தைரியம் அளித்தார். தனுஷ் சுயநலம் இல்லாத நடிகர்.

நான் படத்தில் தனுஷை பார்த்து சொல்லும் சில வசனங்களை கேட்டு அவரது ரசிகர்களுக்கு என் மீது வெறுப்பு ஏற்படாது என நம்புகிறேன். இதை அவரிடமே தெரிவித்துள்ளேன்.
மேலும் வாசிக்க…

விஜய் சேதுபதி ஹீரோயினை தன்வசப்படுத்திய தனுஷ்..!!

1:33 AM |
நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்கம் மட்டுமல்லாது இப்படத்தில் தனுஷ் ஒரு சிறிய கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த பகுதியில் தனுஷுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை இப்படத்தின் 50% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மீதி படத்தையும் வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

இங்கிருந்து என்னை துரத்திடாதீங்க: சிவகார்த்திகேயனை கேட்டுக் கொண்ட தனுஷ்..!!

11:57 PM |
இங்கிருந்து அவ்வளவு ஈஸியாக துரத்திடாதீங்க. சிவா, அவ்வளவு ஈஸியாக என் இடத்தை கொடுக்க மாட்டேன் என தனுஷ் முன்பு தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் தனுஷின் நட்பு கிடைத்து இருவரும் சகோதரர்கள் போன்று பழகினர். தனுஷும் தனக்கு வந்த படங்களில் சிவாவை நடிக்க வைத்தார்.

அவர்களின் நட்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பிரிவு

மிகவும் நெருக்கமாக பழகிய தனுஷும், சிவகார்த்திகேயனும் தற்போது பிரிந்துவிட்டனர். வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைக்கவில்லை இன்னும் மதிக்கிறேன் என்கிறார் சிவா.

தனுஷ் 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஹிட்டானபோது நடந்த நிகழ்ச்சியில் தனுஷ் சிவகார்த்திகேயனை பற்றி கூறியது தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிவா 

விழாவில் பேசிய தனுஷ் கூறியதாவது, இங்கிருந்து அவ்வளவு ஈஸியாக துரத்திடாதீங்க. சிவா, அவ்வளவு ஈஸியாக என் இடத்தை கொடுக்க மாட்டேன். இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். சின்ன இடம் எனக்கென்று இருக்கிறது. சுமாரான நடிகரா. இன்னும் 10 வருஷன் கழிச்சு எடுத்துக்கோங்க என்றார்.

வளர்ச்சி 

தன்னுடைய இடத்தை சிவாவுக்கு கொடுக்க மாட்டேன் என்றார் தனுஷ். சிவா தற்போது தனுஷுக்கு நிகராக வளர்ந்து நிற்கிறார். ஒரு ஸ்டார் பிறந்துவிட்டார் என ரஜினியே சிவாவை வாழ்த்தியுள்ளார்.

மேலும் வாசிக்க…

தனுசின் கிசு கிசு விவகாரம் - என் புருஷன் பத்தி எனக்கு தெரியும்.. விளாசிய ஐஸ்வர்யா..!!

1:06 AM |
கடந்த சில மாதங்களில் அதிகமாக சர்ச்சைகளில் மாட்டியவர் யார் என்றால்…அது தனுஷாக தான் இருக்கமுடியும். கீர்த்தி சுரேஷை டேட்டிங் கூப்பிட்டது, தொடரி படத்தில் மாற்றங்கள் செய்து…படத்தை பிளாப் பண்ணியது, தன் மச்சினிச்சி சௌந்தர்யா விவாகரத்து, விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து, அமலாபால் விவகாரம் என்று இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த கிசுகிசுக்களை பத்தி ஐஸ்வர்யாவோ, தனுஷோ வாய் திறப்பதில்லை. இப்போது முதன்முறையாக ஐஸ்வர்யா இது குறித்து பேசியுள்ளார்.

” என் அப்பா ரஜினி பிசியாக இருந்த காலத்தில் அவரை பத்தி வந்த கிசுகிசுக்களை என் அம்மா அமைதியாக எதிர்கொண்டார். அது போலவே நான் இருக்க விரும்புகிறேன். தனுஷுக்கு சினிமா தவிர வேறு ஒன்று தெரியாது. இன்னும் சொன்னால், ஒரு செக் கூட பில் அப் பண்ண தெரியாது. அதனால் ,என் புருஷன் பத்தி எனக்கு தெரியும்…”என்று காட்டமானார் ஐஸ்வர்யா.
மேலும் வாசிக்க…

தனுஷ் - சிவகார்த்திகேயனுக்கு நடக்கும் சண்டை அம்பலமானது, வெளியான ஆடியோ ஆதாரம்

1:18 AM |
மேலும் வாசிக்க…

மச்சினி சவுந்தர்யாவுடன் மும்பைக்கு பறந்த தனுஷ்..!!

12:27 AM |
தனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்துடன் மும்பைக்கு சென்றுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்த பிறகு படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் அந்த படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் புதுமுகங்கள் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

தனுஷ்

கதையை கேட்ட ரஜினிகாந்த் ஹீரோவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கேம்மா. நம்ம மாப்பிள்ளை தனுஷையே நடிக்க வை கரெக்டாக இருக்கும் என்று சவுந்தர்யாவிடம் கூறினாராம்.

ஹீரோ

அப்பா ரஜினியே சொன்ன பிறகு சவுந்தர்யா மறுக்கவா போகிறார். இதையடுத்து தனது படத்தின் ஹீரோவாக தனுஷை சவுந்தர்யா தேர்வு செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

சவுந்தர்யா

புதுப்பட வேலைகளில் பிசியாக இருக்கும் சவுந்தர்யா மாமா தனுஷுடன் மும்பைக்கு சென்றுள்ளார். தனுஷுக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூரை ஜோடியாக்க சவுந்தர்யா நினைக்கிறார். இந்நிலையில் அவர்கள் மும்பைக்கு சென்றுள்ளனர்.

சோனம்

சோனம் கபூரை சந்தித்து படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சவுந்தர்யாவும், தனுஷும் மும்பைக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோனமும், தனுஷும் ராஞ்ஹனா இந்தி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயனை கன்னத்தில் அறைந்த தனுஷ் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

10:37 PM |
ரெமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுதது சினிமா வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில் மறைமுகமாக சிலரை குறிப்பிட்டு பேசினார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே, பிரபல தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயனை ஒரு படத்தில் நீங்கள் நான் சொல்வது போல் தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும், பிறகு சிவா அப்படத்திலிருந்து விலகியதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முன்வரவே, சிவகார்த்திக்கேயனும் சரி என்று சொல்லி இருக்கிறார்.

படத்தின் அறிவிப்பு வெளியாக சில நாட்களுக்கு முன்னர், எதோ ஒரு காரணத்தால் சிவகார்த்திகேயன் அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இதனால், கோபமடைந்த தனுஷ் சிவகார்த்திகேயனை அழைத்து ஏன் அப்போ நடிக்கிறேன் என்று சம்மதம் சொல்லிவிட்டு இப்போ முடியாது என்று சொல்லறீங்க என்று கேட்டிருகிறார்.

உடனே, சிவகார்த்திகேயன் எதிர்த்து பேசவே கடுப்பான தனுஷ் அவரை கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சில நண்பர்கள் மட்டுமே உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூலமாக நம்முடைய மீடியா நண்பர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தனுஷ்-ன் முதல் நாள் வசூல் 4 முதல் 5 கோடி வரை பெறவே கடினமாக இருக்கும் போது, சிவாவின் ரெமோ 8 கோடி வசூலித்தது, தனுஷ் மட்டுமின்றி பல நடிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. ஆனால், இதற்க்கு முன்பே, அனிருத் ரவிசந்தர் தனுஷ் சிவகார்த்திகேயனை கன்னத்தில் அறைந்த விஷயத்தை நடிகர் சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், தான் அது யாரென்று எனக்கு தெரியும் என்று தைரியமான தனது கருத்தை டிவிட்டரின் பதிவு செய்து சிவாவுக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறார் சிம்பு என்கிறது நெருங்கிய சினிமா வட்டாரங்கள். இந்த விஷயத்தை மறைக்கவே, பிரச்னையை மீடியா மூலம் தயாரிப்பாளர்கள் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறாரோ தனுஷ் என்ற சந்தேகமும் எழுகிறது.
மேலும் வாசிக்க…

சென்னையில் தனுஷ் அலுவலகம் முற்றுகை பரபரப்பு தகவல்கள்..!!

11:47 PM |
தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடிக்க இருக்கிறார் தனுஷ். இவரது ரசிகர்களுக்கு இந்த அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் அண்மையில் அவரது ஆபிஸை முற்றுகையிட்டு போராடியிருக்கின்றனர்.

காரணம் என்னவென்றால், கடந்த சில மாதங்களாக தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்போடு செயல்படாமல் வெளிநாடு சென்றுவிட்டாராம்.

இதனால் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்க தனுஷிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனராம். இதனால் தனுஷும் சிலரை மட்டும் வர சொல்ல, மொத்த ரசிகர் கூட்டமே ஆபிஸில் ஆஜரனாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டம் எதற்காக கூடினார்களோ? அதை செய்தார்களா என்று தகவல் தெரியவில்லை.
மேலும் வாசிக்க…

தம்பியை ஆணுறை பயன்படுத்த சொல்லியிருக்கிறேன் - தனுஷ் பட நடிகை அருவருப்பு பேச்சு..!!

2:00 AM |
பாலிவுட நடிகை சோனம் கபூர் வெளிப்படையான பேச்சுக்கு பெயர் போனவர். இவர் தனது சகோதரர் பற்றி சில வெளிப்படையான தகவல்களை செய்தியாளர்களிடம் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

சோனம் கபூரின் இளைய சகோதரர் ஹர்ஷ்வர்தன் கபூர். இவர் மிர்சியா என்ற படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்.

சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சோனம் கபூர் “என் தம்பிக்கு பெண்கள் விஷயத்தில் மட்டமான டேஸ்ட். அதனால், என்னை போன்றும், என் தங்கை ரியா கபூரை போன்றும் உள்ள பெண்களுடன் டேட் செய்யக்கூடாது என்று அவர் முடிவெடுத்துள்ளார்.

அவன் மீது எங்களுக்கு அக்கறை உண்டு. எனவே ஆணுறை பயன்படுத்துமாறு நானும், என் தங்கை ரியாவும் அவனை அறிவுறுத்தியுள்ளோம்” என்று வெளிப்படையாக பேசினார்.
மேலும் வாசிக்க…

தனுஷை விட நான் கீழ தான் - சிம்பு..!!

1:56 AM |
நடிகர் சிம்பு இன்று Periscope மூலம் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இதில் ஒரு தனுஷ் ரசிகர் , உங்களை தனுஷுடன் ஒப்பிட்டு பேசுவதை உங்க ரசிகர்களிடம் நிறுத்த சொல்லுங்க, அவர் திறமைக்கு இப்போ எங்கேயோ இருக்கிறார் என்றார். அதற்கு பதிலளித்த சிம்பு,

"தனுஷோட வளர்ச்சியில் எனக்கு சந்தோஷம் தான், நான் அவரை விட கீழ என்று நீங்கள் நினைத்தால் ஓகே, அவரை மட்டுமில்ல மற்ற நடிகர்களை விடவும் நான் கீழ தான். அதனால் என்ன பிரச்சனை இப்போ, அவருடைய உழைப்பால் இந்த உயர்வுக்கு வந்து இருக்கிறார், அதை பார்த்து என்றுமே நான் பொறாமை பட மாட்டேன்.

இப்போ எனக்கு இருக்கும் யோசனை என் ரசிகர்களை மேலும் சந்தோஷ படுத்த வேண்டும். அவ்வளவு தான் என்றார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com