இன்றைய அரசியல்வாதியின் கதையை கமர்ஷியலாக கூறியிருக்கும் படம் தான் இந்த கொடி.
கதை களம் :
வாய் பேச முடியாத ஊமையாக வருகிறார் கருணாஸ். அவருக்கு அரசியலில் சாதிக்கவேண்டும் என்ற பெரிய ஆசை உண்டு. இந்த நிலமையில் இவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.
ஒரு கட்டத்தில் கட்சிக்காக கருணாஸ் தீ குளித்து இறந்து விடுகிறார். இதை தொடர்ந்து ஒரு பையன் அரசியல்வாதியாக ஆகிறார். அவர் தான் கொடி. மற்றொரு பையன் ஆசிரியர் ஆகிறார்.
அரசியல்வாதியாக இருக்கும் தனுஷும் எதிர்க்கட்சி அரசியலில் இருக்கும் த்ரிஷாவும் காதலிக்கின்றனர். ஆசிரியர் தனுஷ் அனுபமாவை காதலிக்கிறார்.
தனது அண்ணன் மூலமாக தான் காதலிக்கும் அனுப்புமாவிற்கு உதவுகிறார் தனுஷ். அங்கிருந்து பிரச்னை தொடங்குகிறது. இதை தொடர்ந்து தனுஷ் – த்ரிஷா காதல் என்ன ஆனது ? அரசியலில் இவர்கள் நிலைமை என்ன ? தம்பி தனுஷ் உதவிய அனுப்புமாவின் பிரச்சனை என்ன ஆனது ? என்பது மீதி கதை.
படத்தில் நடித்தவர்கள் :
தனுஷ் படத்தின் பெரிய பலம். இரண்டு கதாபாத்திரத்திலும் அசத்தியுள்ளார். அரசியல்வாதியாக இவர் செய்யும் வேலைகள் ரசிக்கவைக்கிறது.
த்ரிஷா நடிப்பில் பிரமாதம். நெகடிவ் கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக நடித்துள்ளார். அனுபுமா இரண்டாம் கதாநாயகியாக வருகிறார். தமிழில் முதல் படம் என்றாலும் நன்றாக நடித்துள்ளார்.
தனுஷின் அம்மாவாக வரும் சரண்யா எப்போதும் போல எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் கட்சி தலைவராக வரும் சந்திரசேகர் நடிப்பில் நன்று.
படத்தின் பிளஸ் :
தனுஷ் மற்றும் த்ரிஷாவின் நடிப்பு தான் படத்தின் பெரிய பலம்.
படத்தின் திரைக்கதை வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் தனுஷின் ட்ரான்ஸ்பெர்மேஷன் காட்சி மிரட்டலாக உள்ளது.
படத்தின் பின்னணி இசை மற்றும் வீடியோ காட்சிகள் நன்றாக வந்துள்ளது.
அரசியலில் முன்னேறுவதற்காக த்ரிஷா செய்யும் வேலைகள் பயங்கரம்.
படத்தின் மைனஸ் :
படத்தில் உள்ள மற்ற முக்கியமான கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.
அரசியலில் சதி செய்து உடனுக்குடன் MLA மற்றும் MP ஆவது கொஞ்சம் லாஜிக் மீறல்.
மொத்தத்தில் கொடி :
கண்டிப்பாக இந்த கொடி – வெற்றிக்கொடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அணைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து பார்க்கும்படி படம் அமைந்துள்ளது.
கொடி படத்தின் ரேடிங் – 3.25 / 5
Tags:
Cinema
,
Review
,
கொடி
,
சரண்யா
,
தனுஷ்
,
திரைவிமர்சனம்
,
த்ரிஷா