தனுஷின் ஹாலிவுட் படத்தை இயக்கவிருந்த மர்ஜான் சத்ராபி வெளியேறியுள்ளதால் அந்த படம் துவங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷ் ஈரானை சேர்ந்த மர்ஜான் சத்ராபியின் இயக்கத்தில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டே துவங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
பின்னர் படப்பிடிப்பு 2017ம் ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இயக்குனர் படத்தை விட்டு வெளியேறிவிட்டாராம். இதனால் பட வேலைகள் துவங்குமா இல்லையா என்று தெரியவில்லை.
பிரபல ஹாலிவுட் நடிகை உமா தர்மன் நடிக்கவிருந்த இந்த படத்திற்கு தனுஷை தேர்வு செய்ததே மர்ஜான் தான். இந்நிலையில் மர்ஜான் படத்தில் இருந்து வெளியேறியிருப்பதால் தனுஷின் ஹாலிவுட் கனவு பலிக்காமல் போய்விட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷின் படங்களை பார்த்து அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரை ஒப்பந்தம் செய்தார் மர்ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அடி
,
அடி வாங்கும் தனுஷ்
,
இயக்குனர்
,
சினிமா
,
தனுஷ்