இங்கிருந்து அவ்வளவு ஈஸியாக துரத்திடாதீங்க. சிவா, அவ்வளவு ஈஸியாக என் இடத்தை கொடுக்க மாட்டேன் என தனுஷ் முன்பு தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் தனுஷின் நட்பு கிடைத்து இருவரும் சகோதரர்கள் போன்று பழகினர். தனுஷும் தனக்கு வந்த படங்களில் சிவாவை நடிக்க வைத்தார்.
அவர்களின் நட்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரிவு
மிகவும் நெருக்கமாக பழகிய தனுஷும், சிவகார்த்திகேயனும் தற்போது பிரிந்துவிட்டனர். வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைக்கவில்லை இன்னும் மதிக்கிறேன் என்கிறார் சிவா.
தனுஷ்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஹிட்டானபோது நடந்த நிகழ்ச்சியில் தனுஷ் சிவகார்த்திகேயனை பற்றி கூறியது தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.
சிவா
விழாவில் பேசிய தனுஷ் கூறியதாவது, இங்கிருந்து அவ்வளவு ஈஸியாக துரத்திடாதீங்க. சிவா, அவ்வளவு ஈஸியாக என் இடத்தை கொடுக்க மாட்டேன். இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். சின்ன இடம் எனக்கென்று இருக்கிறது. சுமாரான நடிகரா. இன்னும் 10 வருஷன் கழிச்சு எடுத்துக்கோங்க என்றார்.
வளர்ச்சி
தன்னுடைய இடத்தை சிவாவுக்கு கொடுக்க மாட்டேன் என்றார் தனுஷ். சிவா தற்போது தனுஷுக்கு நிகராக வளர்ந்து நிற்கிறார். ஒரு ஸ்டார் பிறந்துவிட்டார் என ரஜினியே சிவாவை வாழ்த்தியுள்ளார்.
Tags:
Cinema
,
சிவா
,
சினிமா
,
தனுஷ்
,
நட்பு
,
பரபரப்பு
,
பிரிவு
,
வளர்ச்சி