தனுஷின் உதவி இல்லாமல் கொடி படத்தில் தன்னால் சிறப்பாக நடித்திருக்க முடியாது என த்ரிஷா தெரிவித்துள்ளார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் கொடி. கொடி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. படத்தில் த்ரிஷா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.
படம் மற்றும் தனுஷ் குறித்து த்ரிஷா பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
கொடி படத்தில் எனது கதாபாத்திரம் கொஞ்சம் வில்லித்தனமாக இருக்கும். நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரம் இது. அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உற்சாகமாக இருந்தது.
தனுஷும், நானும் சினிமா துறையில் பல ஆண்டுகளாக உள்ளோம். விருது விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்துள்ளேன். தற்போது தான் முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன்.
இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று கூட தோன்றியது. தனுஷ் இல்லாமல் என்னால் இவ்வளவு நன்றாக நடித்திருந்திருக்க முடியாது. அவர் எனக்கு அவ்வளவு உதவி செய்துள்ளார். அவர் மீதுள்ள மரியாதை பல மடங்கு அதிகரித்துவிட்டது.
சண்டை காட்சி உள்ளிட்ட சில காட்சிகள் குறித்து படித்தபோது பயமாக இருந்தது. தனுஷ் தான் எனக்கு அதை நடித்துக் காட்டி தைரியம் அளித்தார். தனுஷ் சுயநலம் இல்லாத நடிகர்.
நான் படத்தில் தனுஷை பார்த்து சொல்லும் சில வசனங்களை கேட்டு அவரது ரசிகர்களுக்கு என் மீது வெறுப்பு ஏற்படாது என நம்புகிறேன். இதை அவரிடமே தெரிவித்துள்ளேன்.
Tags:
Cinema
,
காரணம்
,
கொடி
,
சண்டை காட்சி
,
சினிமா
,
தனுஷ்
,
த்ரிஷா