சிவகார்த்திகேயனின் புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார்.
என்னடா இவன் அடிக்கடி அழுகிறான் என நினைக்க வேண்டாம், உண்மையாக இருப்பதால் அழுகிறேன் என்றார். சிவகார்த்திகேயன் அழுதது குறித்து தான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விஷால்
சிவகார்த்திகேயன் போன்று நானும் கஷ்டப்பட்டுள்ளேன். அவரது புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
சிம்பு
சிவகார்த்திகேயனுக்கு விஷால் மட்டும் அல்ல சிம்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார். மிரட்டியவர்கள் யார் என எனக்கும் தெரியும். கடுமையாக உழையுங்கள், மற்றதை கடவுளிடம் விட்டுவிடுங்கள் என சிம்பு அறிவுரை வழங்கியுள்ளார்.
மதன்கள்
'வேந்தர் பிலிம்ஸ்' மதனும், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும் சிவகார்த்திகேயனுக்கு புதுப்படத்திற்காக முன்பணம் கொடுத்ததாக கூறுகிறார்கள். இதை சிவா மறுக்கிறார் என அழுகை குறித்து பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள்
சிவகார்த்திகேயன் மேடையில் அழுததை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்கிறார்கள், சிலர் அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சிம்பு
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரெமோ
,
விஷால்