சிம்பு நடித்த எந்த படத்தின் தயாரிப்பாளரும் நிம்மதியாக படம் எடுத்து வெளியிட்டு லாபம் பார்த்ததாக சரித்திரம் கிடையாது. ஆனாலும் சிம்புவை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுப்பார்கள். "சிம்பு தம்பி எங்ககிட்ட வம்பு பண்ணாது" என்ற படத்தை ஆரம்பிப்பார்கள்.
"நான் பழைய சிம்பு இல்லை நிறைய மாறிட்டேன்" என்று அவரும் நடிக்க ஆரம்பிப்பார். கடைசியில் நிலைமை மாறிவிடும். அப்படி நம்பி போய் கடைசியாக கஷ்டப்பட்டவர்கள் பாண்டிராஜும், கவுதம் மேனனும்.அச்சம் என்பது மடமையடா படத்தில் ஒரே ஒரு பாட்டுதான் பாக்கி இருந்தது. அதற்கே அவரை படாதபாடுபடுத்தி இப்போதுதான் முடித்துக் கொடுத்தார்.
அடுத்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மாட்டினார். திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்தார். தலைப்பைபோல சிம்பு இருப்பார் என்ற நம்பினார்.
ஆனால் தலைப்பின் கடைசி வார்ததை போல மட்டும்தான் அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.படப்பிடிப்பு தேனியில் தொடங்கி சரியாகத்தான் போய்கொண்டு இருந்தது. தமன்னா, ஸ்ரேயா படத்துக்குள் வந்தார்கள். சிம்பு 60வயது முதியவராக நடிக்கிறார் என்றெல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.
தேனி பகுதி ஷெட்யூல் திட்டமிட்டபடி சரியாக முடிந்தது. தயாரிப்பாளரும் மிகவும் சந்தோஷம் அடைந்தார்."சமீபத்தில் சென்னை பகுதி ஷெட்யூல் ஆரம்பித்ததும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு கெஸ்ட் அவுஸை லட்சக்கணக்கில் வாடகை கொடுத்து படப்பிடிப்புக்கு குழுவினர் தயாராக இருந்ததால் சிம்புவை காணோம்.
அவர் தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை. பல நாள் காத்திருந்ததில் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம். வேறு வழியே இல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். தயாரிப்பாளர்கள் சிம்புவின் தந்தையை அழைத்து அன்பாக கண்டித்ததால் இப்போது படப்பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்" என்கிறார் தயாரிப்பு தரப்பு நிர்வாகி ஒருவர். படம் முடிவதற்குள் இன்னும் என்னென்ன பிரச்னைகள் வருமோ என்ற கவலையோடு இருக்கிறார் தயாரிப்பாளர்
Tags:
Cinema
,
கவுதம் மேனன்
,
கொடுமை
,
சிம்பு
,
சினிமா
,
பாண்டிராஜ்
,
விளையாட்டு