விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில், லட்டு லட்டு ரெண்டு லட்டு -என்ற பாடலுக்கு அவருடன் குத்தாட்டமாடியவர் ஸ்ரேயா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று நடித்து வந்தவர் கார்த்தி நடித்த தோழா படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர்,
இப்போது சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்துள்ள வேடத்தில் நடிக்க திரிஷா உள்ளிட்ட பல நடிகைகள் மறுத்து விட்டபோது, ஸ்ரேயா எந்தவித தயக்கமும் இன்றி நடித்துக்கொடுத்துள்ளார்.
அதோடு, மொத்தம் 16 நாட்களாக திண்டுக்கல்லில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ரேயா படத்தை முடித்துக்கொடுத்ததும் அங்கிருந்தபடியே மும்பை பறந்து விட்டாராம்.
மேலும், இந்த டிரிபிள் ஏ -படத்தில் அப்பா சிம்புவின் மனைவியாக நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு இரட்டை குழந்தை பிறக்குமாம். அந்த இரண்டு குழந்தைகளும் பின்னர் இரண்டு சிம்புக்களாக நடித்துள்ளார்களாம்.
அந்த வகையில், இரண்டு சிம்புக்களும் குழந்தையாக இருக்கும்போது அவர்களிடம் பாசம் கட்டும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா, பலமுறை ஸ்பாட்டில் கைதட்டல் வாங்கினாராம். அந்த அளவுக்கு குழந்தை சிம்புக்களிடம் பாசத்தை கொட்டி நடித்துள்ளாராம் ஸ்ரேயா.
Tags:
Cinema
,
இரட்டைக் குழந்தைகள்
,
சிம்பு
,
சினிமா
,
விக்ரம்
,
ஸ்ரேயா