கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளார்.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உயர்ந்து இருக்கிறார்.
ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது தமிழில் திருநாள், இருமுகன், காஷ்மோரா ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் இரண்டு புதிய தமிழ் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக பாபுபங்காரம் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த தெலுங்கு படம் நயன்தாராவின் திடீர் கெடு பிடிகளால் திரைக்கு வர முடியாமல் முடங்கி இருப்பதாக படக்குழுவினர் ஆவேசப்படுகின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.
நயன்தாரா-வெங்கடேஷ் தொடர்பான பாடல் காட்சியொன்றும் சில வசன காட்சிகளும் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. இவற்றை முடித்து விட்டு இந்த மாதம் இறுதியில் பாபுபங்காரம் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர்.
பாடல் காட்சியில் நயன்தாராவுக்கு அரைகுறை ஆடைகள் உடுத்த கொடுத்து கவர்ச்சியாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நயன்தாரா திடீர் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே அந்த படத்துக்காக கொடுத்த கால்ஷீட் திகதிகள் முடிந்து விட்டன என்றும் பாடல் காட்சிக்காக கூடுதல்திகதிகள் ஒதுக்கி தர முடியாது என்றும் கூறிவிட்டாராம். மூத்த நடிகரான வெங்கடேசுடன் கவர்ச்சி உடையில் நடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முடியாமல் படக்குழுவினர் தவிக்கின்றனர். இது நயன்தாரா-வெங்கடேஷ் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளதாக தெலுங்கு பட உலகினர் முணுமுணுக்கின்றனர். நயன்தாராவை சமரசப்படுத்தி பாடல் காட்சியில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.
ஏற்கனவே சிம்புவின் இது நம்ம ஆளு படத்திலும் இதே போன்று கால்ஷீட் முடிந்த பிறகு பாடல் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திப்பதாக குற்றம் சாட்டி அதில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா இப்போது நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம். காதல் காட்சிகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன். கவர்ச்சி ஆடைகள் அணிய மாட்டேன் என்றெல்லாம் கூறுகிறாராம்.
காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். கவர்ச்சியாக நடிக்க வேண்டாம் என்று காதலர் வற்புறுத்துவதாகவும் அதனாலேயே கவர்ச்சியாக நடிக்க அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
இது நம்ம ஆளு
,
இருமுகன்
,
காஷ்மோரா
,
சிம்பு
,
சினிமா
,
நயன்தாரா
,
விக்னேஷ் சிவன்