சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இப்படத்தில் நடித்ததற்காக நாயகி ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கூட கிடைத்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ரித்திகா சிங் குறித்து பேசிய மாதவன், ” ரித்திகாவுக்கு நடிப்பு மிக யதார்த்தமாக வரும். இறுதிச்சுற்று படத்தில் அவர் பல காட்சிகளில் என்னை விடவும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்” என்றார்.
அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் அஜித் தவிர வேறு யார் நடிக்கிறார்கள் என இன்றும் தெரியவில்லை.
இந்நிலையில் ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, ஆனால், படத்தில் இரண்டு ஹீரோயின்களாம்.
இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இறுதிச்சுற்று படத்தில் கலக்கிய ரித்திகாசிங்கிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதிச்சுற்று என்ற ஒரேபடத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார்.
தேசிய விருது, அடுத்தடுத்து படம் என உற்சாகத்தில் இருக்கும் ரித்திகா சிங்கிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க, இதுக்குறித்து கலக்கலான பதிலை கூறியுள்ளார்.
இதில் தனக்கு அஜித், தனுஷை மிகவும் பிடிக்கும், அவர்களுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த ரித்திகா சிங் தேசிய விருது பட்டியலில் ஸ்பெஷல் மென்ஷனாகியுள்ளார். இதுக்குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ரித்திகா ‘இது எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது’ என கூறியுள்ளார்.
உங்களுக்கு எந்த மொழியில் நடிக்க விருப்பம் என கேட்டபோது, ‘எனக்கு இந்தி தான் நன்றாக தெரியும், தமிழ் தற்போது தான் கற்று வருகிறேன். இதனால், இந்தி படத்தில் நடிக்கவே விருப்பம்’ என கூறியுள்ளார். ரித்திகாவின் பதில் பிரம்மாண்ட வரவேற்புகள் கொடுத்த தமிழ் ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தமான விஷயமாகவே மாறியுள்ளது.
தமிழில் விஜய் சேதுபதி யின் ஆண்டவன் கட்டளை படத்தில் நடிக்க இருக்கும் ரித்திகா சிங் இந்தியில் ரன்வீர் சிங்குடன் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். மேலும் அலியா பட்டின் என்ர்ஜியான நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் பதிவு செய்துள்ளார்.
இந்திய சினிமாவை கௌரவப்படுத்தும் விதமாக வருடா தோறும் இந்திய அரசு தேசிய விருதுகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்கள் பட்டியல் இன்று வெளிவந்துள்ளது. விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ உங்களுக்காக….
சிறந்த நடிகர் – அமிதாப் பச்சன்(PIKU)
சிறந்த நடிகை – கங்கனா ரன்வத்(தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இயக்குனர் – சஞ்சய் லீலா பஞ்சாலி( பஜிரோ மஸ்தானி)
சிறந்த படம் – பாகுபலி
திரைப்பட துறைக்கு உகந்த மாநிலம் – குஜராத்
சிறந்த தமிழ் படம் – விசாரணை
சிறந்த தெலுங்கு படம் – காஞ்சி
சிறந்த மலையாள படம் – பதேமேரி
சிறந்த கன்னட படம் – திதி
சிறந்த ஹிந்தி படம் – தம் லகா கே ஹைசா
சிறந்த நடன அமைப்பாளர் – ரெமோ டி சோசா ( பஜிராவ் மஸ்தானி )
சிறந்த பின்னணி இசை – இளையராஜா ( தாரை தப்பட்டை )
சிறந்த எடிட்டிர் – மறைந்த கிஷோர் ( விசாரணை )
சிறந்த வசனம் மற்றும் திரைக்கதை – பிகு, தானு வெட்ஸ் மனு
சிறந்த ஒளிப்பதிவு – பஜிராவ் மஸ்தானி
சிறந்த இசை – எம். ஜெயச்சந்திரன் ( என்னு நிண்டே மொயிதீன் )
சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி ( விசாரணை )
Special Mention சிறந்த நடிகை – ரித்திகா சிங் ( இறுதிச்சுற்று )
Special Mention சிறந்த நடிகர் – ஜெயசூர்யா ( மலையாளம் )
பிரபலமான படம் – பஜ்ரங்கி பைஜான்
சிறந்த VFX – பாகுபலி
இன்றளவும் ‘புது இயக்குனர்களின் பூமத்திய ரேகை, அறிமுக இயக்குனர்களின் ஆயுள் காப்பீடு’ என்று கோடம்பாக்கத்தில் வர்ணிக்கப்படுகிறார் விஜய். காரணம்… உச்சாணிக் கொம்பை பிடித்துவிட்ட பின், ‘அறிமுக இயக்குனர்களுக்கு கேட் ஓப்பன் இல்லை’ என்று போர்டு வைக்காத குறையாக விரட்டுவார்கள் TOP ஹீரோக்கள். அந்த குட்டிக்கரண கோட்பாடுகளையெல்லாம் கூச்சமில்லாமல் உடைத்துத் தள்ளியவர் விஜய் என்பதால்தான் இத்தகைய பாராட்டு.
இந்த பாராட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், கதை கேட்கும்போது ஒரு எக்ஸ்பிரஷனும் இல்லாமல் அமைதியாக இருப்பார். அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரே ரிசல்ட் சொல்கிற வரைக்கும் புரிந்து கொள்ள முடியாது என்கிற வருத்தம் எல்லா இயக்குனர்களுக்கும் உண்டு. ஆனால் அந்த விஜய்யை இப்போது தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது என்கிற அளவுக்கு ஆளே மாறிப் போய்விட்டாராம்.
தன்னைவிட சின்னவர்களோ, பெரியவர்களோ, நேருக்கு நேர் பார்த்தால் நின்று ஒரு வணக்கம் போடுவது. நல்லாயிருக்கீங்களா என்று விசாரிப்பது என்று பெருமளவு மாறிவிட்டார் விஜய் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் தெறி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதை கண் கூடாகவே காண முடிந்தது.
பெரும் கூட்டத்தில் உட்கார கூட இடமில்லாமல் நின்று கொண்டிருந்தார் வளர்ந்து வரும் இளம் நடிகரும், இறுதிச்சுற்று புகழ் அப்பாவுமான காளி வெங்கட். சட்டென்று அவரை கவனித்துவிட்ட விஜய், மெல்ல அருகில் வந்து “வணங்கங்ணா… நல்லாயிருக்கீங்களா?” என்று நலம் விசாரித்துவிட்டுப் போக காளிக்கே வியப்பு. அதைவிட பெரிய வியப்பு, வினாடி நேரத்தில் அதை கவனித்த சிலருக்கு. விஜய், தெறி யூனிட்டிலும் கூட அப்படிதான் நடந்து கொள்வதாக வர்ணிக்கிறது தொழிலாளர் வர்க்கம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் விமர்சனரீதியாக கொண்டாடப்பட்டது.
ஒரு பெண் இயக்குனர் துணிச்சலாக பாக்ஸிங் துறையில் உள்ள பாலியல் அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார், கச்சிதமான திரைக்கதை என்று பாராட்டப்பட்டது.
இறுதிச்சுற்று படத்தை தெலுங்கிலும் சுதா இயக்குகிறார். வெங்கடேஷ் நடிக்க ரித்திகா சிங் தமிழில் செய்த அதே வேடத்தை தெலுங்கிலும் செய்கிறார். ரித்திகா சிங் உண்மையில் ஒரு பாக்ஸர் என்பதும் இறுதிச்சுற்றுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
உண்மையில் இறுதிச்சுற்று படத்தின் கதை கற்பனை அல்ல. சுதா தனது கற்பனையில் எழுதியதும் அல்ல. அது தமிழகத்தைச் சேர்ந்த துளசி ஹெலன் என்ற பெண்ணின் கதை. இவர் பல போட்டிகளில் ரித்திகா சிங்கையே தோற்கடித்துள்ளார்.
விளையாட்டுதுறையில் நிலவும் பாலியல் சுரண்டலை கேள்விகேட்டதால் பல போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளார்.
துளசி ஹெலனின் அக்கா சரஸ்வதி. சுருக்கமாக சரஸ். அவருக்கு காவல்துறையில் சேர வேண்டும் என்று விருப்பம். அதற்காக பாக்சிங் கற்று கொள்கிறார். அவரைப் பார்த்து தங்கை துளசி ஹெலனுக்கும் பாக்சிங்கில் ஆர்வம் வருகிறது. 12 வயதலேயே பாக்சிங்கிற்கு தன்னை அர்ப்பணிக்கிறார்.
இறுதிச்சுற்று படத்தில் வருவது போலவே போட்டிக்கு முன்னால், துளசியின் அக்கா துளிசிக்கு காயத்தை ஏற்படுத்திவிடுகிறார். ஆனாலும், துளசி அந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறார்.
இறுதிச்சுற்று படத்தை எடுக்கும் முன் சுதா துளசியை சந்தித்து அவரது கதையை கேட்டுள்ளார். பிறகு அதே கதையை ரித்திகா சிங்கை வைத்து எடுத்துள்ளார்.
உண்மையில் ரித்திகா சிங்கை பல போட்டிகளில் தோற்கடித்த துளசியின் கதையிது. படத்தைப் பார்த்த பின் சுதாவிடம் துளசி இது குறித்து பேசிய போது, நீ சொன்ன கதையைப் போல் 100 பேர் சொல்றாங்க என்றிருக்கிறார்.
ஒரு பாக்சரின் கதையை சுட்டு இவர்கள் கோடிகளில் சம்பாதித்ததுடன் பெயரும் சம்பாதித்துவிட்டனர். ஆனால், நிஜ பாக்சர் இன்னும் அதே வறுமையில்தான் இருக்கிறார். அவரது கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா சிங் சேம்பியனாகிவிட்டார்.
இறுதிச்சுற்று விளையாட்டுத்துறையில் நடக்கும் மோசடிகளையும், பாலியல் அத்துமீறல்களையும் சொல்லும் படம். அதை படமாக்கிய சுதாவும் அதே மோசடியைத்தான் செய்திருக்கிறார் என்பது கசப்பான உண்மை.
விஜய்சேதுபதி மற்றும் பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியன் நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் “காதலும் கடந்துபோகும்” படம் நாளை வெளியாகவிருக்கிறது. இன்றே அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் விஜய்சேதுபதி.
காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு நாயகியாக நடிக்கவிருப்பவர் இறுதிச்சுற்றில் ரசிகர்களை நாக் அவுட் செய்த ரித்திகா சிங் தான். இப்படத்திற்கு “ஆண்டவன் கட்டளை” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கான பூஜை மற்றும் தொடக்கவிழா இன்று தொடங்கியது.
இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், “படத்தில் பாடல்களே இல்லையென்றும் பின்னணி இசை மட்டுமே என்றும் படக்குழு சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்”.
கடந்த வருடம் வெளியான காக்காமுட்டை வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பாஸ்மார்க் வாங்கியது. இவரின் இயக்கத்தில் விமல் நடித்த குற்றமே தண்டனை விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம் தான் ஆண்டவன் கட்டளை.
இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டை தவிர வேறு எந்த விளையாட்டும் அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியாது. ஹாக்கி, ஃபுட் பால், வாலி பால் என பல விளையாட்டுக்கள் இந்தியாவில் பல நகரங்களில் தூங்கிக்கொண்டே தான் இருக்கின்றது.
அதிலும் பாக்ஸிங் என்ற ஒரு விளையாட்டே விஜய், ஜெயம் ரவி சினிமாவில் காட்டிய பிறகு தான் நமக்கே தெரிந்திருக்கும், ஆனால், உண்மையான பாக்ஸிங் என்பது அது இல்லை, சினிமாவை தாண்டி ஓரளவிற்கு நேர்மையாக எடுத்த பாக்ஸிங் படம் தான் இறுதிச்சுற்று.
இப்படத்திற்காக இயக்குனர் சுதா இந்தியாவில் உள்ள பல பெண் பாக்ஸர்களை சந்தித்ததாக தெரிவித்தனர். ஆனால், உண்மையாகவே இது முழுக்க முழுக்க தமிழகத்தை சார்ந்த துளசி ஹெலன் என்பவரின் கதை தானாம், இதை அவரே நம்மிடம் தெரிவித்தார்.
துளசியின் அக்கா சரஸ்வதி ( எ ) சரஸிற்கு சிறுவயதிலிருந்தே பாக்ஸிங்கில் பெரிய ஈடுபாடு. இவரின் பாக்ஸிங்கை கண்டு வளர்ந்த காரணத்தால் துளசிக்கும் பாக்ஸிங் மீது அதிக ஆர்வம்.
ஆனால், சரஸிற்கு போலீஸ் ஆகவேண்டும் என்பதே லட்சியம், பாக்ஸிங் என்ன தான் கனவாக இருந்தாலும், குடும்ப வறுமை அவரை இந்த முடிவிற்கு இழுத்து சென்றது. ஆனால், யார் என்ன சொன்னால் என்ன? நானே ராஜா நானே மந்திரி என்று தோரணையில் துளசி 12 வயதில் தன் க்ளௌவ்ஸை(Gloves) அணிய இன்றும் நாக் அவுட் கேர்ளாக வலம் வருகிறார்.
என்னடா இதெல்லாம் சமீபத்தில் பார்த்த ஏதோ படம் போல் தெரிகிறதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆம், இறுதிச்சுற்று படமே தான், இப்படத்தை சுதா இயக்குவதற்கு முன் முதன் முதலாக துளசியை தான் சந்தித்தாராம். அவரிடம் பல விஷயங்களை கேட்டு அறிந்துக்கொண்டு அதை ஒரு கதையாக வடிவமைத்தாராம்.
துளசிக்கு எதற்கு கேட்கிறார் என்று கூட ஆரம்பத்தில் தெரியவில்லை, ஏதோ படம் எடுக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்துள்ளது. பின் திரையரங்கில் தன் நண்பர்களுடன் படம் பார்க்கையில் அனைவருக்கும் அதிர்ச்சி. துளசி மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே தான் இருந்தார்களாம் திரையரங்கில்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தன் தங்கை வளர்ச்சி பிடிக்காமல் லக்ஸ் கையை உடைப்பார் அல்லவா? அதேபோல் சரஸ், துளசியின் மூக்கை பதம் பார்த்துள்ளார்.
ஆனால், அப்படியும் அந்த போட்டியில் துளசி வென்றுள்ளார்.இதை விட அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா, துளசியின் தந்தை சமீபத்தில் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியுள்ளார். படம் வெளிவந்த பிறகு இதுப்பற்றி இயக்குனர் சுதாவிடம் துளசி முறையிட்டபோது, நான் உன்னை போல் 100 பேரை சந்தித்தேன். அவர்களும் இதையே தான் கூறினார்கள் என்று சிம்பிளாக கூறிவிட்டாராம்.அவர் 100 பேரை பார்த்துயிருக்கலாம், பேசியிருக்கலாம்,
சரஸ்வதியை சரஸ் என்று அழைப்பது போல், லட்சுமியை படத்தில் லக்ஸ் என்று தான் அழைப்பார்கள். இத்தனை ஒற்றுமை துளசியின் வாழ்வியலுடன் இறுதிச்சுற்று ஒற்றுப்போகையில் இதை சம்மதிக்க ஏன் சுதாவிற்கு மனம் வரவில்லை? மேலும், முதன் முறையாக பாக்ஸிங்கில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைக்காக புகார் கொடுத்து, பலரின் சூழ்ச்சியால் இவரால் தன் பாக்ஸிங் க்ளௌவ்ஸை இன்றும் அணிய முடியவில்லை.(பல முன்னணி போட்டிகளில் துளசியை பங்கேற்க தடை விதித்துவிட்டனர்).
துளசியின் வாழ்க்கையை வைத்து கோடி கோடியாக சம்பாதித்து விட்டார்கள், மேடி இஸ் பேக், தமிழ் சினிமாவிற்கு ஒரு சென்சேஷ்னல் ஹீரோயின் கிடைத்து விட்டார். ஆனால், 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பெண்ணாக போராடி இந்திய அளவில் நடந்த பாக்ஸிங் போட்டிகளில் 3முறை வெண்கலம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த துளசி தற்போதும் ரூ 10 ஆயிரம், ரூ 15 ஆயிரம் சம்பளத்திற்கு நாள் முழுவதும் ஃபிட்நஸ் ட்ரைனராக ஒரு ஜிம்மில் கஷ்டப்படுகிறார்.
இத்தனையும் கூறி கடைசியாக அவர் கூறிய வார்த்தை ’என்ன இருக்கட்டும், பாக்ஸிங்கில் இத்தனை கொடுமை பெண்களுக்கு இருக்கின்றது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சுதா மேடம் அவர்களுக்கு சல்யூட்’ என்றார். ரித்திகா சிங்கை தலையில் தூக்கி கொண்டாடும் தமிழக இளைஞர்கள், படக்குழுவினர்கள், திரைப்பிரபலங்கள் இந்த ரியல் ரித்திகா சிங்கையும் கொஞ்சம் கவனிப்பார்களா? நாம் இந்த துளசி ஹெலனுக்கு ஒரு சல்யூட் அடிப்போம்.
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இதில் நாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.
இவர் அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இறுதிச்சுற்று படம்போல் இல்லாமல் இப்படத்தில் இவர் முழுக்க முழுக்க மாடர்ன் தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்குகிறது.
சுதா இயக்கத்தில் மாதவனுடன் 'இறுதிச்சுற்று' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரித்திகாசிங், தற்போது 'காக்கா முட்டை' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கும் அடுத்தபடமான 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியது குறித்து ரித்திகாசிங் கூறியபோது, 'நானும் எனது தந்தையும் மும்பையில் இருந்து அதிகாலை 4.30 க்கு கிளம்பி சென்னை வந்து மணிகண்டனை நேரில் சந்தித்து கதை கேட்டோம். அவர் கதை கூறிய விதமும், எனது கேரக்டரும் மிக அருமையாக இருந்தது. உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அன்று இரவே மும்பை திரும்பினோம். இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும்.
மேலும் விஜய்சேதுபதி குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவரை முதன்முதலில் சந்திக்கும் முன்னர் அவர் நடித்த அனைத்து படங்களையும் பார்க்க விரும்புகிறேன். அவர் நடித்த படங்களின் லிஸ்ட்டை தற்போது எடுத்துள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இறுதிச்சுற்று படத்தின் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் என்னை பாராட்டினார்கள்.அதிலும் அந்த மீன் விற்கும் காட்சி அனைவரையும் கவர்ந்தது, அதில் மாதவனை கலாய்ப்பது போல் இருக்கும்,
அந்த காட்சியில் மனதில் அத்தனை பயத்தை வைத்துக்கொண்டே நடித்தேன்’ என கூறியுள்ளார்.
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து என்ன படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தத.
இந்நிலையில் தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஆண்டவன் ஆட்டம்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
சினிமாவில் ஹீரோயினாக ஜெயித்து, அதன் பிறகு நிஜ வாழ்க்கையிலும் தன்னை ஹீரோயினாக நிலைநிறுத்திக் கொண்டவர்கள். ரித்விகா சிங் அப்படியே உல்டா. நிஜ வாழ்க்கையில் ஹீரோயினாக இருந்து அதனால் சினிமா ஹீரோயின் ஆனவர்.இவர் சினிமாவுக்கு புதிது என்பதால் அவரைப் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக் பார்த்துவிடலாம். அம்மா பெயர் சிந்து. அப்பா ராஜபுதனத்து ஆளு. காதல் கனிந்து திருமணம் ஆனது. வாழ்ந்தது மும்பையில். அப்பா குத்துச் சண்டை பயிற்சியாளர். அதனால் படிப்போடு குத்துச் சண்டையும் ேசர்த்தே கற்றுக் கொண்டார் ரித்விகா.
குத்துச் சண்டை வாழ்க்கை தன்னோடு போகட்டும் என்றுதான் அவரது தந்தை நினைத்தார். அதனால் மகளை சுய பாதுகாப்புக்காக கராத்தே கற்றுக்கொள்ளச் சொன்னார். கராத்தேவில் பிளாக் பெல்ட் வரை வாங்கினார் ரித்வி. ஆர்வத்துக்காக அவ்வப்போது குத்துச் சண்டை ரிங்கிலும் ஏறினார். விளைவு - அதிலும் கில்லாடியாக உருவானார். மகளின் குத்துச்சண்டை ஆர்வத்தைப் பார்்த்த அப்பா, ஆசைக்கு தடை போடாமல் பயிற்சி கொடுத்து நேர்த்தியான குத்துச்சண்டை வீராங்கனை ஆக்கினார்.
தேசிய விளையாட்டுகளில் பங்கேற்ற ரித்விகா தன் அழகாலும், திறமையாலும் தனித்து தெரிந்தார். ‘இறுதிச் சுற்று’ படத்தின் இயக்குனர் சுதா, ஒரு குத்துச்சண்டை வீராங்கனையின் கதையை தயார் செய்துவிட்டு அதற்கான நாயகியைத் தேடினார். சினிமாவுக்கேற்ற அழகும் இருக்க வேண்டும், குத்துச் சண்டையும் தெரிந்திருக்க வேண்டும்.
நாடு முழுவதும் வலைவீசித் தேடினார். சுமார் 100 வீராங்கனைகளைச் சலித்தபிறகே இறுதியில் தேறினார் ரித்விகா. அழகும் இருக்கிறது. திறமையும் இருக்கிறது. நடிகத் தெரியவேண்டுமே? அதிலும் கதைப்படி தன் தந்தை வயதுடைய பயற்சியாளர் மாதவனை காதலிக்க வேண்டும். வெட்கப்பட வேண்டும், சிணுங்க வேண்டும், கட்டிப்பிடிக்க ேவண்டும்.
இதெல்லாம் சாத்தியமா?
பொதுவாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கு வெட்கம் அத்தனை எளிதில் வந்து விடாது. கொஞ்சம் முரட்டு சுபாவமும் இருக்கும் என்பார்கள். அந்த பயத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே துறந்தார் ரித்விகா.
சென்னை காசிமேட்டில்தான் முதல் நாள் படப்பிடிப்பு. தொளதொள ஆண் சட்டை, அழுக்குப் பாவாடை அணிந்து ரித்விகா மீன் விற்க வேண்டும். இதுதான் காட்சி. காட்சியை முதல் நாளே இயக்குனர் ஒன்றுக்கு நாலு முறை விளக்கி இருந்தார். மறுநாள் ஸ்பாட்டுக்கு சென்றதுேம ரித்விகா செய்த முதல் வேலை அப்படியே மீன் விற்கும் பெண்களைக் கவனித்து அதை திரும்பச் செய்ததுதான். முதல் நாள், முதல் காட்சி, ஒரே டேக்கில் ஓகே. இருந்தாலும் ெமாழிப்பிரச்சினை இருந்ததால் ெவறுமனே வாயசைத்தால் போதும். வசனத்தை டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என இரண்டாவது டேக் எடுத்தார் இயக்குனர் சுதா.
இறுதிச்சுற்று வெளிவந்து விட்டது. ஒரே படத்தில் தேசிய விருது வரைக்கும் பேசப்படுகிறார். நடிப்பு அவருக்கு சம்பந்தமே இல்லாதது. அவரது குடும்பம் கலைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. நடிப்பதற்கு முன்பு சினிமாகூட அதிகம் பார்த்ததில்லை. குத்துச்சண்டை வீர விளையாட்டு. நடிப்பு மென்மையான அபிநயம். இப்படி நேரெதிரான இரண்டு துறைகளிலும் வென்று காட்டியிருக்கிறார் ரித்விகா. இது எல்லாவற்றுக்கும் காரணம் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, எதையும் சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பு. நாளை இமயமலை ஏறும் குழுவில் ரித்விகாவைச் சேர்த்தால் சிகரம் எட்டும் முதல் ஆளாக அவர்தான் இருப்பார்.
சினிமா ஹீரோயினாக இருந்து நிஜ ஹீரோயினானவர்கள் மத்தியில் நிஜ ஹீரோயினாக இருந்து சினிமா ஹீரோயினாகியிருக்கிறார் ரித்விகா. அவர் செல்ல வேண்டிய தூரமும், அவருக்கான உயரங்களும் நிறைய இருக்கின்றன.
மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வசூல் மற்றும் பாராட்டு மழையில் நனைந்திருக்கும் படம் இறுதிச்சுற்று. சுதா என்ற பெண் இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் தெறி ஹிட். அதற்கு காரணம் ரித்திகா சிங்கின் க்யூட் நடிப்பே.
ரித்திகாவின் சின்சியரான நடிப்பே இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அதற்கு சான்றாக ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் புகைப்படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, “ இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியின் போது எடுக்கப்பட்ட படம். என் கண்ணின் மேல் காயம் போல் மேக்கப் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தாய் போல இருந்து என்னைப் பார்த்துக்கொண்டவர் தான் ப்ரியா” என்று நெகிழ்ந்திருக்கிறார் ரித்திகா.
இவரை இறுதிச்சுற்று படத்தில் சில காட்சிகளில் பார்த்திருக்கலாம். சில நாட்கள் அவருடன் இருந்தாலும் அந்த நாட்கள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்று குறிப்பிட்டுள்ளார்”.
ரித்திகா பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படம் இறுதிச்சுற்று படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை விட நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுகளில் கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
இறுதிச்சுற்று படம் வெற்றி என்றவுடன் மாதவனை வைத்து அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறது ஒய்நாட் ஸ்டுடியோஸ். ஏற்கெனவே இந்நிறுவனம் தயாரித்த வ குவார்ட்டர்கட்டிங் என்கிற படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியினர்தான் அந்தப்படத்தை இயக்கவிருக்கிறார்களாம்.
இறுதிச்சுற்று படத்தில் இயக்குநர் சுதாவுக்கு உறுதுணையாக இருந்தாராம் புஷ்கர். அப்போது மாதவனுடனும் நல்ல நட்பு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதே மாதவனை வைத்து ஒருபடம் எடுக்கத் திட்டமிட்டதாகவும் அது இப்போது உறுதியாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் மாதவன் நடிப்பது மட்டுமின்றி அவருடன் இன்னொரு நாயகனாக விஜய்சேதுபதியும் இணையவிருப்பதாகச் சொல்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்களாம்.
இரண்டுநாயகர்கள் படம் என்றாலும் படத்தின் கதை மிகவும் நன்றாக அமைந்திருப்பதால் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இறுதிச்சுற்று படம் பெரிய வெற்றி. இரண்டு வாரங்களைக் கடந்தும் நல்ல வசூலில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் இந்தப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. அவர்கேளாடு யுடிவியும் சேர்ந்துகொண்டது.
இந்தப்படம் வெற்றி என்றவுடன் மாதவனை வைத்து அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறதாம் ஒய்நாட் ஸ்டுடியோஸ். ஏற்கெனவே இந்நிறுவனம் தயாரித்த "வ (குவாட்டர் கட்டிங்)" என்கிற படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியினர்தான் அந்தப்படத்தை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இறுதிச்சுற்று படத்தில் இயக்குநர் சுதாவுக்கு உறுதுணையாக இருந்தாராம் புஷ்கர். அப்போது மாதவனுடனும் நல்ல நட்பு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதே மாதவனை வைத்து ஒருபடம் எடுக்கத் திட்டமிட்டதாகவும் அது இப்போது உறுதியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
மாதவன் நடிப்பது உறுதி நாயகி மற்ற நடிகர்கள் பற்றிய பேச்சுகள் நடந்துகொண்டிருக்கிறதாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வரலாம்.
சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தை பார்த்த மணிரத்னம், தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சுதா தற்போது தனக்கென ஒரு தனித்துவத்தை பெற்று விட்டார் என கூறினார்.
இது மட்டுமின்றி மாதவன் இனி மாதவன் தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்,(மாதவன் 4 வருடங்களாக தமிழில் நடிக்காமல் வட இந்திய படங்களில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது).
மேலும், ரித்திகாவின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது, முதல் படம் போன்றே தெரியவில்லை, இப்படக்குழுவினர்கள் அனைவரும் உடனே அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
கோலிவுட், பாலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரித்திகா சிங். இவர் நிஜ குத்து சண்டை வீராங்கனை. நடிகர் மாதவனின் ரசிகை. ‘இறுதிச்சுற்று’ படத்தில் மாதவன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
விளையாட்டு வீராங்கனைகள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதால் மென்மை தன்மைக்கு பதிலாக முரட்டுதன்மை வந்துவிடுவது இயற்கை. அதுபோல்தான் மென்மையான ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு விரைப்பான தோற்றத்துடன் வந்து நின்றார் ரித்திகா.
இயக்குனர் சுதா அவரிடம் நெருங்கி, ‘இப்படி விரைப்பா நின்னா லவ் சீன்ல எடுக்காது. வெட்கப்பட கற்றுக்கொள்’ என்றார். இதுபற்றி ரித்திகா கூறும்போது, ‘படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன் 2 நாட்கள் எனக்கு பயிற்சி தந்தார்கள். விரைப்பான தோற்றத்தில் கேமரா முன் நின்றபோது இந்த பாடிலேங்குவேஜ் வேண்டாம். ஜாலியா, ரொமான்டிக்கா இருக்க வேண்டும். பாடியை லூஸாக வைத்துக்கொள் என்றனர்.
அதைக்கொண்டு வரகொஞ்சம் சிரமப்பட்டாலும் சில மணி நேரத்தில் அதை பிடித்துவிட்டேன். இதில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தது என்றால் மாதவனைப் பார்த்து வெட்கப்பட்டு நடித்ததுதான்’ என்றார்.